Indian couple arrested in Norway, claims family | நார்வேயில் மகனை கண்டித்த இந்திய பெற்றோர் கைது| Dinamalar

நார்வேயில் மகனை கண்டித்த இந்திய பெற்றோர் கைது

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
Indian couple arrested in Norway, claims family நார்வேயில் மகனை கண்டித்த இந்திய பெற்றோர் கைது

ஐதராபாத்: நார்வேயில் சேட்டை செய்த தங்களது மகனை கண்டித்த இந்திய பெற்றோரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் ஐதாராபத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். அவரது மனைவி அனுபமா. சந்திர சேகர் தனியார் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். நார்வே நாட்டில் தனது கம்பெனியின் பிராஜக்ட் ஒன்றை செய்வதற்காக கடந்த ஜனவரி மாதம் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் நார்வே தலைநகர் ஆஸ்லோ சென்றார் சந்திரசேகர். அங்குள்ள பள்ளி ஒன்றில் அவர்களது 7 வயது மகன் சாய் ஸ்ரீராம் சேர்க்கப்பட்டான்.

இந்நிலையில், மிகவும் சுட்டித்தனமான தனது மகனின் சேட்டை பொறுக்காமல் ஸ்ரீராமின் பெற்றோர் அச்சிறுவனை மீண்டும் இந்தியாவுக்கே அனுப்பி வைத்து விடுவதாக கண்டித்துள்ளதாக தெரிகிறது. இதை அந்த சிறுவன் தனது ஆசிரியரிடம் தெரிவித்துள்ளான். அந்நாட்டுச் சட்டப்படி சிறுவர்களை தண்டிப்பதும், மிரட்டுவதும் குற்றமாக கருதப்படுகிறது. இதையடுத்து ஸ்ரீராமை குழந்தைகள் நல அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
இதுகுறித்து ஐதராபாத்தில் உள்ள சந்திரசேகரின் குடும்பத்தார் கூறுகையில், மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் ஸ்ரீராம் ஒரு மாத காலத்திற்குப்பின் அவனது குடும்பத்தாருடன் ஒப்படைக்கப்பட்டதாகவும், இதையடுத்து கடந்த ஜூலை மாதம் இந்தியா வந்த சந்திரசேகர், ஸ்ரீராமை தனது குடும்பத்தாரிடம் ஒப்படைத்து விட்டு மீண்டும் நார்வே சென்று விட்டதாகவும் தெரிவித்தனர். மீண்டும் நார்வே சென்ற சந்திரசேகரன் மற்றும் அனுபமாவை, தங்களது குழந்தையை மிரட்டியதாக அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது எந்த சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. இவ்விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு சந்திர சேகரையும், அனுபமாவையும் மீண்டும் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Alagarasu Natesan - Chennai,இந்தியா
05-டிச-201215:13:31 IST Report Abuse
Alagarasu Natesan குழந்தைகளை அன்பால் தான் திருத்த முடியும். தண்டித்துஅல்ல. வெளிநாட்டில் உள்ள எல்லா இந்தியர்களும் உழாராக இருப்பது நல்லது. அவர்கள் இருக்கும் நாட்டின் சட்டத்தை தெரிந்துவைத்திருக்க வேண்டும் முக்கியமாக.
Rate this:
Share this comment
Cancel
K.V.A.T. KABEER - Doha,கத்தார்
05-டிச-201213:08:05 IST Report Abuse
K.V.A.T. KABEER பிள்ளைகளை , கண்டிப்பதற்கும் - தண்டிப்பதற்கும் , ஒரு அளவு உண்டுதானே,... கண்டிக்கிறேனென்று , இப்படியா சூடு போடுவது? அன்பாலேயும் - திருத்த முடியும் தானே? .... எதற்காக சொன்னார் வள்ளுவன் ...: அன்பிற்கும் உண்டோ , அடைக்கும் தாள் ..." என்று , பட்சிலம் குழந்தை தானே, இறைவன் நம்மிடம் தந்த , அமானிதத்தை , தகுந்தமுறையில் , பாது காப்பதும் , நமது கடமை அல்லவா? பாவம் தானே சிறுவன்...?
Rate this:
Share this comment
Cancel
vijayakumar - tamilnadu,இந்தியா
05-டிச-201209:28:40 IST Report Abuse
vijayakumar மகன் தப்பு பண்ணினால் ,கண்டிக்க வேண்டும் ,அனால் கொடுமை என்பது அவன் வால் நாளில் ,பெரிய ,கொலை காரணக ஆகபடுவன் .
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
01-டிச-201200:24:12 IST Report Abuse
GOWSALYA இதில் பல உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளது.....ஏனெனில்,ஐரோப்பிய நாடுகளில் பிள்ளைகளைக் கண்டிக்கலாம்,ஆனால்,அடிக்கக் கூடாது,பெரும் தண்டனைகள் கொடுக்ககூடாது.இப்படி செய்ததற்கு அவர்களைக் கைது செய்திருக்கமாட்டார்கள்.இங்கு,இலங்கைப் பெண் [ இரண்டாம் தாரம் ] முதல் தாரத்துப் பையனுக்கு கையில் சூடு வைத்துவிட்டாள்.அதை அவனுடைய நண்பன் ஆசிரியரிடம் சொல்ல,அவனை சிறுவர்நல விடுதிக்குக் கொண்டு போய்விட்டார்கள்.ஆனால், அந்தப் பெண்ணை போலீஸ் எச்சரிக்கையுடன் விட்டுவிட்டார்கள்.இப்போ அந்தப்பையனுக்கு வயது 18 ...அவன் தனியாகவே இருக்கான்.கைது செய்யும் அளவுக்கு வேறு தவறுகள் நடந்திருக்கலாம்,அவர்களோ,வேறு யாரோ நடந்தவைகளை மறைக்கிறார்கள்.கடவுள் தான் அறிவான்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - salem,இந்தியா
30-நவ-201218:34:27 IST Report Abuse
K.Sugavanam என்ன கொடுமையடா சாமி..போகாத இடந்தனிலே போகவேண்டாம் என்பது இது தானோ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.