அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி : ""என்னையும், என் தலைமையிலான அரசாங்கத்தையும், தேவையின்றி விமர்சிப்பவர்கள், குரைக்கும் நாயை போன்றவர்கள்,''என, திரிணமுல் காங்., தலைவர் மம்தா, ஆவேசமாக பேசியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது; அவர் பேச்சுக்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான, மம்தா பானர்ஜி, அதிரடி அரசியலுக்கு பெயர் பெற்றவர். சமீப காலமாக, அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளால், விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள முடியாதவர் என்ற குற்றச்சாட்டும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.மம்தாவை விமர்சித்து, கார்ட்டூன் வரைந்த பேராசிரியரும், மம்தாவின் கொள்கைகளை விமர்சித்த விவசாயி ஒருவரும், சமீபத்தில் போலீஸ் நடவடிக்கைகளுக்கு ஆளாகினர்.இதையடுத்து, அரசியல் விமர் சகர்களும், எதிர்க்கட்சியினரும், சட்ட நிபுணர்களும், மம்தாவை குறை கூறி வருகின்றனர்.


சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதியும், "பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா' தலைவருமான, மார்க்கண்டேய கட்ஜு, சமீபத்தில், மம்தாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்ததாவது:நாம் அனைவருமே, தவறு செய்யக் கூடியவர்கள் தான். ஆனால், தவறுகளை உணர்ந்து, அதற்காக வருத்தம் தெரிவிப்பவர்களே, சிறந்த மனிதர்கள். மம்தா, தன் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளா விட்டால், அதிகாரத்தை இழக்க நேரிடும்.இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.


மேற்கு வங்கத்தை சேர்ந்த, மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் மீது, மம்தா எடுத்த நடவடிக்கைகளை விமர்சித்து, இந்த கடிதத்தை, அவர் எழுதியிருந்தார். இந்நிலையில், சமீபத்தில் நடந்த, ஒரு அரசு விழாவில், தன்னை விமர்சிப்பவர்களை, மம்தா பானர்ஜி, கடுமையாக தாக்கி பேசினார்.


அவர் பேசியதாவது:என்னையும், என் தலைமையிலான அரசாங்கத்தையும், தேவையின்றி விமர்சிப்பவர்கள், குரைக்கும் நாயை போன்றவர்கள். குரைக்கும் நாய் கடிக்காது. அதேபோல், இவர்களால் விமர்சிக்க முடியுமே தவிர, வேறு எதையும் செய்ய முடியாது.எந்த ஒரு தனி நபரைப் பற்றியும், நான் குறிப்பிடவில்லை; பொதுவாகத் தான் கூறுகிறேன். என் தலைமையிலான அரசு, சட்டப்படி நடக்கிறதா என்பதைப் பற்றித் தான், கவலைப்படுகிறேன். என் அரசாங்கம், கருணையுடன் செயல்படுகிறது; மூர்க்கத்தனத்துடன் செயல்படவில்லை. குறிப்பிட்ட சில நபர்களின் விருப்பத்துக்கு ஏற்பவோ, கட்டுப்பாட்டிற்கு ஏற்பவோ நான் செயல்பட முடியாது.இவ்வாறு மம்தா பேசினார்.


மம்தாவின் இந்த பேச்சுக்கு, அனைத்து மட்டத்திலும், கடும் எதிர்ப்பும், கண்டனமும் எழுந்துள்ளது.


மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், எஸ்.கே.மிஸ்ரா கூறியதாவது:தன்னைப் பற்றி விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும், கடுமையான வார்த்தைகளால், மம்தா அவர்களை தாக்கி பேசுகிறார். அவரின் இந்த நடவடிக்கை பற்றி கண்டனம் தெரிவிப்பதற்கு, என்னிடம் வார்த்தைகளே இல்லை. இவ்வாறு மிஸ்ரா கூறினார்.


Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (56)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdul rahim - Thanjavur,இந்தியா
01-டிச-201219:39:16 IST Report Abuse
Abdul rahim மக்கள் வரி பணத்தை கொள்ளை அடிக்கும் அரசியல் வாதிகளை அப்பா என்ன வெண்டு சொல்வது நாயை விட கேவலமாக சொல்லலாமா
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
01-டிச-201216:44:56 IST Report Abuse
Sundeli Siththar பொறுமை கடலினும் பெரிது... இதை உணர்ந்தால் இவரது ஆட்சி சிறப்பாக அமையும்.... இல்லையேல், மக்கள் இவரை தூக்கி எரியும் நாள் வெகு தொலைவில் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
T.Sooravan - Canada Corners,கனடா
01-டிச-201216:38:03 IST Report Abuse
T.Sooravan Dog should not say Dog comment
Rate this:
Share this comment
Cancel
Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-டிச-201216:09:26 IST Report Abuse
Susil லொள் லொள் - இது விமர்சனம் , இந்த விமர்சனம் உங்களுக்கு புரிந்தால் நீங்கள் யார் ?
Rate this:
Share this comment
Cancel
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
01-டிச-201215:31:43 IST Report Abuse
R.BALAMURUGESAN ...இந்தம்மா "நான்" "எனக்கு" "எனது" தை விட மோசமாக இருக்கிறது... இதுபோன்று மூன்று பேர் இருக்கிறார்கள் அந்த மூவருக்கும் பொதுவாக சில குணங்கள் இருக்கிறது... இது எதனால்...
Rate this:
Share this comment
Cancel
Ding Tong - Thiruchy,இந்தியா
01-டிச-201215:13:50 IST Report Abuse
Ding Tong என் தலை முடிகளில் 4 உதிர்ந்துவிட்டது என்று சொன்னதை விட இதுஒன்றும் பெரிதாக தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
01-டிச-201214:42:18 IST Report Abuse
ganapathy பதவிக்கு வர வழி தெரிந்தது. பணிவு வர வேண்டும். இல்லாவிட்டால் மூலையில் ஒக்கரவைத்துவிடுவார்கள் மக்கள்
Rate this:
Share this comment
Cancel
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
01-டிச-201213:55:33 IST Report Abuse
மும்பை தமிழன் இந்த நாய்களுக்கு வோட்டு போட்ட மக்களை சொல்ல வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
01-டிச-201213:37:45 IST Report Abuse
Rangarajan Pg நாய் என்றால் இவருக்கு அவ்வளவு கேவலமாக போய் விட்டதா?
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
01-டிச-201212:50:41 IST Report Abuse
Ab Cd அப்படி என்றால் நீங்கள் மத்திய அரசை விமர்சிக்கும் போது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்