புதுடில்லி :"அரசியல் கட்சியினரிடம் மட்டுமே, பண பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; தேவையில்லாமல், பொதுமக்களை துன்புறுத்தக் கூடாது' என, தேர்தல் ஆணையத்துக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடப்பதை அடுத்து, ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நடவடிக்கைகளை ஒழிக்கும் முயற்சிகளை, தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. சந்தேகத்துக் கிடமாக, 2.5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக, யாராவது பணத்தை கொண்டு சென்றால், அவர்களிடமிருந்து, பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.இதை எதிர்த்து, குஜராத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த, குஜராத் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு:ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நடவடிக்கைகளை தடுப்பதாக கூறி, ஒட்டு மொத்தமாக, அனைவரையும் சோதனைக்கு உட்படுத்தக் கூடாது.சந்தேகத்துக்கிடமாக, யாராவது, 2.5 லட்சத்துக்கும் அதிகமாக கொண்டு சென்றால், அவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் தவறு.இதுபோன்ற நடவடிக்கைகளால், பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். இது, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கை.இவ்வாறு குஜராத் ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, தேர்தல் ஆணையம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள், டி.கெ.ஜெயின், மதன் பி லோகூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:சந்தேகத்துக்கிடமாக பணம் வைத்திருப்பதாக கூறி, ஒட்டு மொத்த சோதனைக்கு உத்தரவிடுவது தவறு. இதனால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது. அரசியல் கட்சியினர் மற்றும் தேர்தலுக்காக, அரசியல் கட்சியினரால் நியமிக்கபட்டுள்ள ஏஜென்டுகள் ஆகியோரிடம் தான், சோதனை நடத்த வேண்டும்; பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும்.அரசியல் கட்சியினர், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், பணத்தை கொண்டு சென்றால், பறிமுதல் செய்யலாம். எனவே, இது தொடர்பான, உங்களின் உத்தரவை திருத்தம் செய்யும்படி, இந்த கோர்ட் வலியுறுத்துகிறது. இந்த இடைக்கால உத்தரவு, குஜராத் தேர்தல் முடியும் வரை, அமலில் இருக்கும். தேர்தல் முடிந்தபின், இந்த வழக்கு குறித்து, விரிவாக விசாரிக்கப்படும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அப்புறம் என்ன கொஞ்ச நாளைக்கு அரசியல் வாதிகளெல்லாம் பொது மக்கள் எனும் போர்ட மாட்டிகிட்டு பணம் பட்டுவாடா பண்ணிட வேண்டியது தான். ஒட்டு வியாபரத்த முடிசுகிட்டு துண்ட உதறி தோளில் போட்டுக்கிட்டு ஊழல் ராஜ்யத துவங்கிடலாம். ஒரே கோலாகலம் கொண்டாட்டம் தான். எல்லாம் மாயாவதி கேசு மாதிரி கோர்ட் முன் வந்து இந்த ஊழல் வாதிகள் கேசு எல்லாம் தள்ளுபடி செய்து இந்த ஆளுங்க எல்லாம் காந்தி சிலைக்கு ஒரு மாலை போட்டு காந்தி மாதிரி வசனம் பேசி ஜனன நாயகம் வாழ்க என சொல்லி உலா வருவானுக. அப்போ மக்கள் நிலை என்ன நந்தவனத்து ஆண்டி கதை தான்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.