2 Accused connected in SI murdercase encounter | எஸ்.ஐ., கொலை வழக்கு கைதிகள் 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ., கொலை வழக்கு கைதிகள் 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

Updated : டிச 01, 2012 | Added : நவ 30, 2012 | கருத்துகள் (53)
Advertisement

மானாமதுரை :சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி எஸ்.ஐ., ஆல்பின் சுதன் கொலை வழக்கு கைதிகளான, ரவுடி பிரபு,25, பாரதி,35, நேற்று இரவு மானாமதுரையில், போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கடந்த அக்.,27 ல் மருதுபாண்டியர் ஜெயந்தியன்று, திருப்பாச்சேத்தி அருகே, ரவுடிகளை கண்டித்த எஸ்.ஐ., ஆல்பின்சுதன்,27, கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, புதுக்குளம் பிரபு, பாரதி, உட்பட சிலர் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். 2004ல் நடந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக, பிரபு, பாரதியை நேற்று காலை சிவகங்கை ஆயுதப்படை எஸ்.ஐ., செந்தில் தலைமையிலான போலீசார், சிறையில் இருந்து அழைத்துச் சென்றனர்.பின், மாலை 5 மணிக்கு, மீண்டும் மதுரை சிறையில் அடைப்பதற்காக, வரிச்சியூர் ரோட்டில் போலீசார் திரும்பினர். சிவகங்கை ரிங் ரோடு சந்திப்பு அருகே, நெஞ்சு வலிப்பதாக பிரபு நாடகமாடினார். பின், இருவரும் "சிறுநீர் கழிக்க வேண்டும்; வண்டியை நிறுத்தாவிட்டால், இங்கேயே இருந்துவிடுவேன்' என மிரட்டினர். இதனால் வாகனம் நிறுத்தப்பட்டது. இதை பயன்படுத்தி தப்பிக்க முயன்ற இருவரையும், எஸ்.ஐ., செந்தில், போலீஸ்காரர் சித்ரவேல், 27, ஆகியோர் தடுத்தனர். ஆனால், அவர்களை தாக்கிவிட்டு, தப்பி ஓடினர். இவர்களை "சுட்டுப்பிடிக்க' உத்தரவிடப்பட்டது. நெஞ்சில் காயம் ஏற்பட்ட நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சித்ரவேல் சிகிச்சை பெறுகிறார்.


என்கவுன்டர்:
தப்பிய கைதிகள் இருவரையும் பிடிக்க போலீசார் தீவீர தேடுதலில் ஈடுபட்டனர். நேற்று இரவு 8.30 மணிக்கு டி.எஸ்.பி.,க்கள் வெள்ளத்துரை, மங்களேஸ்வரன் மற்றும் போலீசார் டெம்போ வேனில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது மதுரை-மானாமதுரை ரோட்டில் ராஜகம்பீரம் கால்பிரவு கிராமம் அருகே பல்சர் பைக்கில் ( டிஎன் 75 இசட் 2527) வந்த பிரபு, பாரதியை போலீசார் தடுத்து பிடிக்க முயன்றனர். அப்போது போலீஸ் வேன் மீது வெடிகுண்டு வீசி, அரிவாளால் தாக்கினர். போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.இந்த சம்பவத்தில் மானாமதுரை எஸ்.ஐ., பூமிநாதன், ஆயுதப்படை பிரிவு போலீசார் மாரிமுத்து, தினேஷ்குமார் உட்பட 5 பேர் காயமடைந்தனர். இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.


பிரபு ரவுடியானது எப்படி:

என்கவுன்டரில் இறந்த பிரபு 10ம் வகுப்பு படித்துள்ளார். டிரைவிங் பயிற்சி பெற்று, 5 ஆண்டுக்கு முன், வெளிநாட்டு வேலைக்காக பாஸ்போர்ட் எடுக்க முயன்றார். மானாமதுரை சிப்காட் ஸ்டேஷனில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கால் பாஸ்போர்ட் எடுக்க முடியவில்லை. வேறு வேலைக்கு செல்ல முடியாமல், கருவேல மரங்கள் ஏலம் எடுப்போருக்கு உதவியாக சென்றார். காலப்போக்கில், நண்பர்கள் சிலருடன், வழிப்பறி, கட்டபஞ்சாயத்துகளில் இறங்கினார். வழக்கு விசாரணைக்கு சென்ற சிப்காட் பெண் எஸ்.ஐ.,யை தாக்கியுள்ளார். பிரபு, பாரதி தயவு இல்லாமல் அப்பகுதியில் வெளியூர்காரர்கள் யாரும் தொழில் செய்யவோ, இடம் வாங்கவோ முடியாது. இவர்களது கொட்டத்தை அடக்கி,துணிச்சலுடன் வலம் வந்த எஸ்.ஐ.,ஆல்பின் சுதனால் நமக்கு இனி நெருக்கடி என்பதை உணர்ந்த இருவரும், அவரை கொலை செய்தனர்.வழக்குகள்: பிரபு மீது சிப்காட், திருப்பாச்சேத்தி ஸ்டேஷனில் கொலை, வழிப்பறி உட்பட 12 வழக்குகளும், மானாமதுரை, திருப்பாச்சேத்தி, சிப்காட் ஸ்டேஷன்களில் பாரதி மீது 6 வழக்குகளும் உள்ளன. இருவரும் சில வழக்குகளில் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு, போலீசில் சிக்காமல் இருந்தனர். எஸ்.ஐ.,ஆல்வின் சுதன் கொலையில் தான் இருவரும் கைதாகி சிறையில் இருந்தனர்.


போலீசாரை பாதுகாக்க சுட்டேன்: டி.எஸ்.பி., வெள்ளத்துரை:

இதுகுறித்து வெள்ளத்துரைகூறியதாவது: போலீசாரிடம் இருந்து தப்பிய இருவரையும் பிடிக்க போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இருவரும் தங்கள் சொந்த ஊருக்கு வரலாம் என்பதால், அப்பகுதியில் சோதனை நடத்தினோம்.அப்போது பைக்கில் வந்த இருவரும் போலீசாரை நோக்கி, பெட்ரோல் குண்டு வீசினர். அரிவாள் வைத்திருந்தனர். போலீசாரை பாதுகாக்க இருவரையும் சுட்டேன், என்றார். சிவகங்கை எஸ்.பி., பன்னீர்செல்வம், மதுரை துணை கமிஷனராக மாற்றப்பட்டதால், நேற்று பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். எஸ்.பி., யாக சக்திவேலு, நேற்று, பொறுப்பேற்றார். முதல் நாளிலேயே "என்கவுன்டர்' நடந்தது.


தமிழகத்தில் நடந்த என்கவுன்டர்கள் :


தமிழகத்தில் என்கவுன்டரில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள்:
1998: சென்னையில் நடந்த மோதலில், ரவுடி ஆசைத்தம்பி, அவரது கூட்டாளி .
2002: பெங்களூருவில் பதுங்கியிருந்த இமாம் அலி கூட்டாளிகள் ஐந்து பேர்.
2003: சென்னையில் வெங்கடேச பண்ணையார். அதே ஆண்டு சென்னையில் ரவுடி வீரமணி.
2004 அக்., 18: சந்தனமரக் கடத்தல் வீரப்பன்.
* 2007 ஆக., 1: ஓசூர் அருகே வெள்ளை ரவி, கூட்டாளி குணா .
* 2008 ஏப்., 11: தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி ஜெயக்குமார் அவரது கூட்டாளி. அதே ஆண்டு ஜூலை 11ல் ரவுடி பாபா.
நவ.16ம் தேதி, ஆறு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருந்த "கொர' கோபி என்ற கோபி.
* 2010ம் ஆண்டு கோவையில் பள்ளிக் குழந்தைகளை கொலை செய்த கார் டிரைவர் மோகனகிருஷ்ணன்.
* 2010 நீலாங்கரை பகுதியில் திண்டுக்கல் பாண்டி உள்ளிட்ட இருவர்.
2012 பிப்., 23: சென்னை வேளச்சேரியில் வங்கிக் கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்பட்ட ஐந்து பேர்.
2012 நவ., 30: திருப்பாச்சேத்தி எஸ்.ஐ., ஆல்வின் சுதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி பிரபு, பாரதி சுட்டுக்கொலை.Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Simon James - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-டிச-201219:26:22 IST Report Abuse
Simon James Well done Tamil Nadu Police. Please continue that. We have no faith on the court. Make a monthly target of 2 every month. Tamil Nadu people will have peace. James
Rate this:
Share this comment
Cancel
A.SESHAGIRI - ALWARTHIRUNAGARI,இந்தியா
01-டிச-201216:42:39 IST Report Abuse
A.SESHAGIRI திரு.சேகர் சேகரன் பாவம் சிங்கப்பூரில் இருக்கிறார் அதனால்தான் இங்குள்ள நிலைமை அவருக்கு சரியாக தெரியவில்லை.பாராளுமன்றத்தை தாக்கி பாதுகாப்பு படையினரை கொன்று தூக்கு தண்டனை பெற்ற கைதிக்கே இன்னும் தண்டனை நிறைவேறாமல் உள்ளது.இந்த லட்சணத்தில் இவர்கள் மீது வழக்கு நடந்து தண்டனை நிறைவேற எவ்வளவு காலம் ஆகுமோ தெரியவில்லை இதில் நமது போலீசாரை குறை சொல்ல எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Kankatharan - newyork,யூ.எஸ்.ஏ
01-டிச-201216:40:59 IST Report Abuse
Kankatharan  அஜ்மல் கசாப்பின் தூக்குத்தண்டனைக்குக்கூட நிறைய விமர்சனங்கள் வந்திருந்தன ஜனநாயக நாடொன்றில் இப்படியான விமர்சனங்கள் வருவது இயல்பானதே. ஆனாலும் கசாப்பு போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு தூக்குத்தண்டனை மூலம் சட்ட விழுமியங்களுக்கு உட்பட்டு துணிவுடன் ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கிறது, இச்செய்தி சர்வதேசம்வரை சென்றடைய சந்தற்பம் இருக்கிறது, அதேபோல உள்ளூர் தாதாக்களையும் ரவுடிகளையும் பாராபட்சம் பார்க்காமல் சட்டப்படி தண்டனைக்குட்படுத்தினாலே ரவுடிகளை வளர்த்துவிடும் அரசியல்வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் நல்ல செய்தியை போதிப்பதாக இருக்கும் தாதாஜிசம் ரவுடீசம் இல்லாமல் செய்வதற்கும் அதுதான் நல்ல வழி, என்கௌண்டர் உணர்வுரீதியான ஒரு பரபரப்பை வெளிப்படுத்தினாலும் தப்பான முன்னுதாரணமாகவே பார்க்கப்படும் சந்தற்பம் நிறைய இருக்கிறது என்கௌண்டரை வரவேற்பது நல்லதல்ல.
Rate this:
Share this comment
Cancel
Noorulameen Hidayathulla - akkur,இந்தியா
01-டிச-201216:09:52 IST Report Abuse
Noorulameen Hidayathulla ரவுடிகள் அழியட்டும்
Rate this:
Share this comment
Cancel
Mahe Mahendran - chennai,இந்தியா
01-டிச-201216:00:28 IST Report Abuse
Mahe Mahendran vellaidurai சார் கலக்கிடீங்க சார்,.. வாழ்த்துக்கள் .. தொடரட்டும் உங்களது வேட்டை.. என் ஒட்டு உங்களுக்குத்தான் சார்.. ...
Rate this:
Share this comment
Cancel
வைகை செல்வன் - சென்னை,இந்தியா
01-டிச-201215:11:12 IST Report Abuse
வைகை செல்வன் கதை . திரைக்கதை.. வசனம்.. என்று தான் நினைக்கத்தோன்றுகிறது...
Rate this:
Share this comment
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
01-டிச-201214:46:37 IST Report Abuse
Rajasekaran Palaniswamy உன்னை போல் ஒருவனா?
Rate this:
Share this comment
Cancel
rajaguru - chennai,இந்தியா
01-டிச-201214:10:03 IST Report Abuse
rajaguru காவல் துறைக்கு பாராட்டுகள், தொடரட்டும், என்கௌண்டர் ஒஷிக்கட்டும் ரவுடிகளை.
Rate this:
Share this comment
Cancel
kadayanallur Abu haani - JEDDAH,சவுதி அரேபியா
01-டிச-201214:08:54 IST Report Abuse
kadayanallur Abu haani காட்சிகள் சினிமாவை ஞாபகப்படுத்துகிறது ?இதில் வேறு ஏதும் உள்நோக்கம் இருக்குமோ ? தமிழ் நாட்டு போலீசிடம் மோதினால் விளைவு இது தான் ?இது தமிழ்நாட்டு போலீஸ் ஸ்டைல்
Rate this:
Share this comment
Cancel
Deva - Sivagangai ,இந்தியா
01-டிச-201214:05:26 IST Report Abuse
Deva தண்டனைகள் கடுமையானால்தான் குற்றங்கள் குறையும். இவர்களின் இறப்பு அந்தபகுதி மக்களுக்கு நிமதியை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இத்தகைய ரவுடிகளை உருவாகும், வளர்க்கும் அரசியல்வாதிகளுக்கு யார் தண்டனை கொடுப்பது. இதை பார்க்கும் மற்ற ரவுடிகளுக்கு இது ஒரு பாடம். திருந்தினால் அவர்களுக்கு நல்லது. திரு. வெள்ளதுரைக்கு பாராட்டுகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை