மாநகராட்சிப் பள்ளியின் கல்வித்தரம் மாறியாச்சு : வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நிரூபணம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கோவை : நவீன தகவல் தொழில் நுட்ப பயிற்சி பெற்று வரும் மாநகராட்சிப் பள்ளி மாணவியர், தாங்கள் தயாரித்த புராஜெக்ட் ஒன்றை, பள்ளியில் இருந்தபடியே மாநகராட்சி கமிஷனருக்கு "வீடியோ கான்பிரன்ஸ்' முறையில் விளக்கி தங்கள் திறமையை நிரூபித்தனர்.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 83 பள்ளிகள் உள்ளன. ஒரு காலத்தில் மாநகராட்சிப் பள்ளிகள் என்றாலே தரமில்லாத பள்ளிகள் என்றிருந்த நிலை மாறி, இப்பள்ளிகளில் இடம் கிடைக்க அமைச்சர் சிபாரிசு தேடும் அளவுக்கு இப்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இப்பள்ளிகளின் தரமான கட்டமைப்பு வசதிகளும், அனுபவமிக்க ஆசிரியர்களின் உழைப்புமே இதற்குக் காரணம். இந்த வரிசையில், புதிதாக தகவல் தொழில் நுட்ப வசதிகளும் இணைந்திருப்பதால், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித்தரம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. பெரும்பாலான மாநகராட்சிப் பள்ளிகளில் குறைந்தது 20 கம்ப்யூட்டர்கள் கொண்ட "லேப்' இருப்பது, வேறு எந்த மாநகராட்சிக்கும் இல்லாத சிறப்பாகக் கருதப்படுகிறது.அழகுக்காக கம்ப்யூட்டர்களை அடுக்கி வைக்காமல், அவற்றை முறைப்படி பயன்படுத்தி, மாணவ, மாணவியரை மேம்படுத்தவும் முயற்சி எடுக்கப்படுகிறது.

இந்த கம்ப்யூட்டர்களை முறையாக பயன்படுத்தி, மாணவர்களின் தகவல் தொழில் நுட்ப அறிவை மேம்படுத்தி வருகிறது அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் என்ற அமைப்பு.பவுண்டேஷனின் வெளிநாடு வாழ் இந்தியர் நிதியுதவியுடன், இந்தியாவில் ஆறு மாநிலங்களில் "டிஜிட்டல் ஈக்குவலைசர்' எனும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் தொடர்பான "புராஜெக்ட்' தயாரிப்பது, பாடத்துக்குத் தேவையான படங்கள், தகவல்களை இன்டர்நெட்டில் பதிவிறக்கம் செய்வது உள்ளிட்ட பயிற்சிகளை, பவுண்டேஷனின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர்.
தொடர் மதிப்பீட்டு முறை, இன்டர்நெட்டை கையாள்வது குறித்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி தருகின்றனர். கடந்த ஐந்து மாத பயிற்சி குறித்த கலந்தாய்வுக் கூட்டம், மாநகராட்சி கமிஷனர் பொன்னுசாமியின் தலைமையில் நேற்று நடந்தது.கம்ப்யூட்டரை பயன்படுத்தி கணித பாடத்தில் தயாரித்த புரொஜெக்ட் குறித்து, கே.கே.புதூர் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவியர் அம்ரின் தாஜ், கோகிலவாணி ஆகிய மாணவியர், "பவர் பாயின்ட்' உதவியுடன் அற்புதமாக விளக்கினர். அதைப் பார்த்து, தலைமை ஆசிரியர்கள், துணை கமிஷனர் சிவராசு, கல்வி அலுவலர் வசந்தா ஆகியோர் ஆச்சரியமடைந்தனர்.ஒப்பணக்கார வீதி மாநகராட்சிப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவியர் திவ்யா, ரோஷ்மா, காவ்யஸ்ரீ ஆகியோர், தாங்கள் தயாரித்த அறிவியல் புராஜெக்ட் குறித்து, பள்ளியில் இருந்தபடியே "வீடியோ கான்பிரன்ஸ்' வசதியுடன் கமிஷனருக்கு விளக்கினர். பாடம் குறித்து கமிஷனருடன் கலந்துரையாடி, அவரிடம் பாராட்டும் பெற்றனர்.


பவுண்டேஷனின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலெக்சாண்டர் பேசுகையில், ""ஐந்து மாதங்களில் 5,383 மாணவர்களுக்கும், 189 ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளோம். சிறப்பு பயிற்சி பெற்ற 295 மாணவர்கள் "மாஸ்டர் பயிற்சியாளர்களாக' அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மொத்தம் 1956 பாட புராஜெக்ட்களை தயாரித்துள்ளனர்,'' என்றார். மின்வெட்டால் பயிற்சி தடைபடுவதால், ஜெனரேட்டர் வசதி செய்து தர வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்தார்.


கமிஷனர் பொன்னுசாமி, ""மாணவியரின் திறமை, ஆச்சரியப்பட வைத்தது. மூன்றாண்டுக்குப் பின் அனைத்து வகுப்பிலும் கம்ப்யூட்டர் உதவியுடன்தான் பாடம் நடத்த வேண்டும். கூடுதல் கம்ப்யூட்டர்கள், ஜெனரேட்டர், யு.பி.எஸ்., வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
govind - Muscat,இந்தியா
06-டிச-201219:52:41 IST Report Abuse
govind இவை கோவை மாவட்டம் தவிர எல்லா மாவட்டங்களிலும் தொடர விரும்புகிறோம்.. கல்விக்காக தனிப்பட்ட முறையில் சேவை செய்து வரும் சென்னை மாநகர் தந்தை மேயர் சைதை துரைசாமி இன்னும் விழித்துக் கொள்ள வில்லை போலும்... அவர் தன் பாணியில் கட்டாயம் சென்னை நகருக்கு ஏதாவது செய்ய வேண்டும்.... வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel
Eswaran - Palani,இந்தியா
02-டிச-201204:58:49 IST Report Abuse
Eswaran முதலில் இந்தப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.உண்மையாகவே அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவன்தான் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்குகின்றான் . சந்தேகமே இல்லை.தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களை அந்தப் பள்ளி நிர்வாகம் சுயமாக சிந்திக்க விடுவதில்லை.9 -ஆம் வகுப்பிலேயே 10 -ஆம் வகுப்புப் பாடம் படிக்க கட்டாயப் படுத்தப் படுகின்றனர் .இதே நிலைதான் +1 மாணவர்களுக்கும் .இவர்களுக்கு மாணவன் அதிக மதிப்பெண் வாங்கினால் போதும் . அதை வைத்து விளம்பரம் செய்து தங்களது பள்ளியின் கட்டணத்தை கூட்டி வாங்கலாம்.இதைத் தவிர தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு வேறு சிந்தனை கிடையாது.ஏதேனும் ஒரு சில பள்ளிகளே இதற்கு விதிவிலக்கு. அரசுப் பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்கள்,கட்டிட வசதி ,நூலக,ஆய்வக வசதியும் செய்து கொடுத்து ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்துவதை தீவிர கண்காணிப்புக்கும் உட்படுத்தினால் மிகுந்த சிறப்பு மிக்க மாணவர்கள் உருவாவார்கள் .மேலும் ஆசிரியர்களுக்கு கல்விபணி அல்லாது அந்தக் கணக்கு இந்தக் கணக்கு என்று அவர்களுக்கு வேறு பணிகளையும் சுமத்துவதால் பாதிக்கப் படுவது மாணவர்களே.இதை அரசும் கல்வித் துறையும் உணர்ந்து செயல் பட்டால் மிகச் சிறந்த மாற்றம் உருவாகும் .இதில் சந்தேகமே இல்லை. ஈஸ்வரன்,பழனி.
Rate this:
Share this comment
Cancel
saraathi - singapore,சிங்கப்பூர்
01-டிச-201212:47:24 IST Report Abuse
saraathi சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள்,மாணவர்கள்,உதவிசெய்தோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.அரசின் சார்பில் பள்ளிகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன.அவற்றின் செயல்பாடுகளில் எங்கேனும் குறைகள் காணப்பட்டால் ஒரு பெற்றோராக நாம் முன்னிருந்து போராடி அக்குறைகளை நிவர்த்திசெய்ய முன்வரவேண்டும்.அதைவிடுத்து அரசுப்பள்ளிகள் சரியில்லை என தனியார்பள்ளிகளை ஆதரிக்ககூடாது.அரசுமருத்துவமனைகளையும் இவ்வாரே நமது முயற்சியால் சீரமைக்கவேண்டும்.ஒரு பகுதி மோசம் என நாம் அனைவரும் ஒதுங்கிவருவது தவறுசெய்பவர்களுக்கு மேலும் வசதியாகப்போய்விடுகிறது.அடிப்படையில் அதிகரித்துவரும் கல்வியும்,மருத்துவ செலவுகளுமே எதிர்கால வாழ்கை அவநம்பிக்கையை உண்டாக்கி பலரை தவறான வழிகளில் பணம் சம்பாரிக்க தூண்டுகிறது.நல்ல கல்வியும்,மருத்துவவசதிகளும் அனைவருக்கும் உறுதியாக்கப்படும் நிலையில் பல அடிமட்ட ஊழல்களை களையலாம்.நாட்டிற்க்கு நல்ல குடிமகன்களையும் உருவாக்கிடமுடியும்.
Rate this:
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
01-டிச-201203:19:34 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் தனியார் பள்ளியில் படிப்பவனை விட , அரசு பள்ளியில் படிப்பவனே மிகுந்த அறிவாளியாக , முற்போக்கு சிந்தனை , படைப்பாற்றல் , மொழிப்பற்று , கற்பனை திறன் என்று யாவும் பெற்று இருப்பான் (மதிப்பெண் எல்லாம் ஒரே விசயமே கிடையாது).. இது தெரிந்தவர்களுக்கு, உணர்ந்தவர்களுக்கு புரியும் .. // எனவே உங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேருங்கள் , அதுவும் தமிழ் வழி கல்வியில் சேருங்கள் ... சிறப்பான பயிற்சி , ஊக்கம் , கற்பித்தல் இல்லையெனில் பெற்றோர்கள் சென்று ஆசிரியரிடமோ , தலைமை ஆசிரியரிடமோ கட்டாயம் முறையிடுங்கள்... நான் சிறு வயதில் புத்தகத்தை அதிக நேரம் படித்து கொண்டே இருப்பேன் , அப்போது என் தந்தை சொல்வார் - ஏண்டா புத்தகத்தையே படிச்சிட்டு இருக்க ?? தமிழ், ஆங்கில நாளிதழ்களை கொடுத்து- இந்த முதல் பக்கத்துல இருந்து கடைசி பக்கம் வரைக்கும் படிச்சி வை , நான் வந்து கேள்வி கேட்பேன்னு சொல்லிட்டு போய்டுவார்.. வந்து கேள்விகளையும் கேட்பார் , தவறாக சொன்னால் பளார் என்று விழும்.. காலபோக்கில் எனக்கே நாட்டம் அதிகதிரிதது..// எனவே புத்தகத்தை விட நாளிதழ்களை அதிக நேரம் படிக்க தூண்டுங்கள் .. அதுவே போதும் , அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் உங்களுக்கே பாடம் சொல்லி கொடுப்பார்கள்... :) பொது அறிவு தான் வாழ்க்கைக்கு முக்கியம் ... ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது ... உயர் பள்ளிகளில் இந்த மாதிரி புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவது வரவேற்க தக்கதே ....
Rate this:
Share this comment
MJA Mayuram - chennai,இந்தியா
01-டிச-201208:54:38 IST Report Abuse
MJA Mayuramஎன்னுடைய கருத்தும் இதுதான்... உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் பணியாற்றி தற்போது என்னால் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்த முடிகிறதென்றால் நான் படித்த நகராட்சி பள்ளியும் அரசு கல்லுரியுமே காரணமாக நான் நினைக்கிறன். மதிப்பெண் எல்லாம் ஒரு விசயமே கிடையாது சரியான வார்த்தை இந்த ஒரு விசயத்தில் உங்களின் கருத்தை நான் ஆதரிக்கிறேன் ...
Rate this:
Share this comment
sundara pandi - lagos ,நைஜீரியா
01-டிச-201213:00:16 IST Report Abuse
sundara pandiஉங்கள் கருத்தை நானும் ஆதரிக்கிறேன்.அப்புறம் ஒரு விஷயம் என்னன்னா நீங்க எப்ப பார்த்தாலும் பேப்பர் படிக்கிறது நீங்க பதிவு செய்யும் கருத்து எண்ணிக்கை மூலம் தெரிகிறது.நன்றி செந்தமிழ் கார்த்திக்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்