E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
ஆட்டுக்கறி அசைவம்; ஆடு கறி சாப்பிட்டா அது சைவமா?
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

01 டிச
2012
10:28
பதிவு செய்த நாள்
டிச 01,2012 00:09

கோவை :""எங்க ஏரியாவுல ஒரு ஆடு, லெக் பீஸ் சாப்பிடுதுங்கோ!,''தகவல் வந்தபோது, கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருந்தது; அதையும் பார்த்துவிடுவோமே என்று விலாசம் விசாரித்து நாம் சென்ற இடம், பேரூரை அடுத்த ஆறுமுக கவுண்டனூரிலுள்ள அழகுராஜ் என்ற விவசாயினுடைய வீடு. அவர் வளர்க்கும் 10 ஆடுகளில் ஒன்றுதான், சிக்கன், முட்டை, மீன் என்று எல்லைச்சாமியைப் போல எல்லாவற்றையும் வெளுத்து வாங்குகிறது.

ஆட்டைப் பார்க்க நாம் வருவது தெரிந்து, முட்டை அவியல், பொரித்த மீன், சிக்கன் லெக்பீஸ் (நண்டு கிடைக்கலையோ!) என சகல அசைவ வகைகளையும் சமைத்து வைத்திருந்தனர். நம் கண் முன்னே, அந்த ஆட்டுக்குட்டிக்கு அசைவ விருந்து படைக்கப்பட்டது. அடுத்த ஐந்தாவது நிமிடம், தட்டு காலி."என் ராசாவின் மனசிலே' ராஜ்கிரண் ஸ்டைலில், தாடையை முன்னும் பின்னுமாக இழுத்து அசைத்து, தொடை பீஸ்சை அந்த ஆடு கடித்து துவம்சம் செய்ததைப் பார்த்தபோது, நம் தொடையும் கொஞ்சம் ஆடிப்போனது. அதிசய ஆட்டின் "ஓணர்' அழகுராஜிடம் பேசினோம்.


""இந்த ஆட்டோட பேரு தாரா. மூணு வயசான இந்த ஆடு, இதுவரைக்கும் ஆறு குட்டி போட்டிருக்கு. ஞாயித்துக்கிழமையில, வீட்டுல நாங்க சாப்பிட்டது போக மிச்சமாகுற சிக்கன், மட்டன், எலும்பையெல்லாம் நாய்க்குப் போடுவோம். ஒரு நாள், நாங்க போட்ட சிக்கனை இந்த ஆடும் சாப்பிட்டதைப் பார்த்தோம். அப்போதுல இருந்து, சிக்கன், மீன், முட்டை எதைப் போட்டாலும் சாப்பிடுது. இதுவரைக்கும் எந்த பாதிப்பும் வரலை. பால், புழுக்கையில ஒரு வித்தியாசமும் தெரியலை. அசைவம் சாப்பிட்டாலும், இலை தழையைச் சாப்பிடதையும் விடலை,'' என்றார் அவர்.

இயற்கைக்கு முரணான இந்த ஆட்டைப் பற்றி, கோவை கால்நடை பயிற்சி மைய இணை பேராசிரியர் சிவக்குமாரிடம் கேட்டபோது, ""பொதுவாக ஆடுகளுக்கு நாம் தரக்கூடிய உணவில், சரிவிகித சத்துக்கள் கிடைக்கவில்லை என்றால், வழக்கத்தில் இல்லாத தீவனங்களை சாப்பிடுவது வழக்கம். இந்த ஆடு இலை, புல் போன்றவற்றுடன் அசைவ உணவுகள் சாப்பிடுவதை பழக்கப்படுத்தி கொண்டுள்ளது. இறைச்சியை நன்கு சமைத்து வேக வைத்து விடுவதால், ஜீரணப்பிரச்சனைகள், நஞ்சு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதில்லை. இதனால் ஆட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனாலும், இயற்கையில் இது ஓர் அதிசயம்தான்,'' என்றார்.

ஆட்டுக்கறியை நாம சாப்பிட்டா அசைவம். ஒரு ஆடே, கறி சாப்பிட்டா அது சைவமா, அசைவமா?
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram Iyer - Singapore,சிங்கப்பூர்
04-டிச-201203:21:49 IST Report Abuse
Ram Iyer மாட்டுக்கு அது மாதிரி கொடுத்து mad cow diesease வந்தது. இந்த ஆட்டை தின்னு எவ்வளுவு ஆள் சாவ போறானோ?
Rate this:
3 members
0 members
3 members
Cancel
Natarajan Iyer - chennai,இந்தியா
02-டிச-201210:53:15 IST Report Abuse
Natarajan Iyer மனிதனின் (நரகல்) கழிவுகளை கோழியும் ஆடு மாடுகளும் சாப்பிடுவது சர்வ சாதாரணமாக கிராமங்களில் நான் பார்திருக்கிறேன். மனிதன் அவைகளை சாப்பிடும்போது தன் கழிவுகளை தானே சாப்பிடுவதுபோல்தான்.அசைவம் சாப்பிடுவதை நிறுத்துவது நல்லது. இல்லையேல் நீங்களும் பன்றியும் ஒன்றுதான்.
Rate this:
32 members
0 members
13 members
jas - Nellai,இந்தியா
02-டிச-201217:52:15 IST Report Abuse
jasவிலங்கு மற்றும் மனித கழிவுகளை உரமாக போட்டு வளர்க்கப்படும் தாவரங்கள் மரங்களில் இருந்து கிடைக்கும் உணவுபொருட்கள் சைவமா அசைவமா ?. அதை சாப்பிடுவதால் உங்கள் கழிவை நீங்களே சாப்பிடுவதாக எடுத்து கொள்ளலாமா. அறிவியல் ரீதியாக எல்லா தாவரங்களுக்கும் மரங்களுக்கும் உயிர் உண்டு அப்படியானால் அவை சைவமா அசைவமா?. இப்படியும் கேள்வி கேட்க முடியும். சைவம் சாப்பிடுவதும் அசைவம் சாப்பிடுவதும் ஒருவரது தனிப்பட்ட விஷயம் அதை நீங்கள் விமர்சிக்க கூடாது . எப்படி உணவுக்காக காய்கறிகள் விளைவிக்க படுகிறதோ அதைபோலத்தான் ஆடு , கோழி போன்ற விலங்குகளும் உணவுக்காக வளர்க்கபடுகிறது. ...
Rate this:
4 members
0 members
51 members
John Suresh - Chennai,இந்தியா
04-டிச-201216:16:22 IST Report Abuse
John Sureshதிரு நடராஜன் அவர்களே, நீங்கள் பால் என்ற அமிர்தத்தை பருகியதே இல்லையா? பால் மட்டும் என்னவாம்? அப்படி என்றால் நடராஜன் என்கிற நீங்களும் .... தானே? இல்லையா? ஜான் சுரேஷ்...
Rate this:
1 members
0 members
2 members
Cancel
arivu - Ras al khaimah,இந்தியா
02-டிச-201210:43:53 IST Report Abuse
arivu மனிதனும் இந்த ஆடு மாதிரித்தான். சைவர்கள் ஒன்றுமே கிடைக்காத சமயம் அசைவம் சாப்பிடுவதை போலதான்.. சைவம் என்பது இயற்கையானது அல்ல. வழி முறைதான். ஆதி மனிதன் சைவமாகவா பிறந்தான்? ஒரு வேலை இந்த ஆடும் வழி தவறிப்போன ஆடாக இருக்கலாம்.
Rate this:
2 members
2 members
6 members
Cancel
dravida Aryan - thanjavur,இந்தியா
01-டிச-201216:44:18 IST Report Abuse
dravida Aryan நாய்கடிக்கு ஊசிமருந்து போல ஆட்டுகடிக்கு மருந்து தேட வேண்டியிருக்கும். கோழி மனிதனை கொத்த ஆரம்பிக்குமா? கொசுக்களையே தாங்க முடியலை.
Rate this:
3 members
1 members
6 members
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ
01-டிச-201215:50:17 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) ஆகா மொத்தம், யாரும் சைவமில்லை.. அதனால் தான் சொல்கிறேன், எல்லோரும் அசைவம் சாப்பிட்டு உடலை வலுவேற்றுங்கள் என்று.. :)
Rate this:
4 members
3 members
9 members
Cancel
LAX - Trichy,இந்தியா
01-டிச-201214:15:21 IST Report Abuse
LAX போகப்போக மனுஷன் நம்மள அடிச்சு சாப்புடுறானே, பதிலுக்கு நாம மனுஷன அடிச்சு சாப்ட்டா என்னன்னு ஆடுங்க வேட்டைய ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுரும் போல.... அப்புறம், &39ஆடு மாட்னா பிரியாணிதான்&39 என்று இருப்பவர்களின் பாடு அவ்வளவுதான். உஷாரா இருங்க அசைவ பிரியர்களே....
Rate this:
8 members
1 members
13 members
Cancel
TAMILARASAN - Singapore,சிங்கப்பூர்
01-டிச-201213:30:26 IST Report Abuse
TAMILARASAN உலகம் அழியப்போவதற்கு முன் உதாரணமோ? ஆடு மாடு கோழி எல்லாம் சிங்கம், புலி போல் ஆகிவிட்டால் உணவுக்காக அடுத்து மனிதனையும்தானே வேட்டையாடும்.
Rate this:
5 members
2 members
7 members
Cancel
Dhanabal - Thoothukudi,இந்தியா
01-டிச-201213:15:03 IST Report Abuse
Dhanabal ஆடு, அசைவம் சாப்பிடும் நினைவில் ஆட்டை வளர்க்கும் மனிதனையும் ஒருநாள் சாப்பிட்டு விடாமல் இருந்தால் சரிதான்...
Rate this:
1 members
1 members
10 members
Cancel
ganesan b(ganesh) - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
01-டிச-201212:52:36 IST Report Abuse
ganesan b(ganesh) புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா என்றால் பூனை ஆயுடுத்தே என்றார் நண்பர் ஒருவர். அப்போ அது விவஸ்தைகெட்ட புலி என்றார். அது போல்தான் இந்த ஆடும்
Rate this:
1 members
2 members
2 members
Cancel
Tamim Ansari - Chennai,இந்தியா
01-டிச-201211:20:00 IST Report Abuse
Tamim Ansari இது ஒன்றும் பெரிய அதிசயம் இல்லை நாங்கள் வளர்த்த ஆடு ஓன்று நான் வெஜ்ஜை புல் கட்டு கட்டும்
Rate this:
7 members
1 members
7 members
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.