Health minister's new explanation on dengue | டெங்கு பரிசோதனை: அமைச்சர் விஜய் புது விளக்கம்: மக்கள் முகம் சுளிப்பு | Dinamalar
Advertisement
டெங்கு பரிசோதனை: அமைச்சர் விஜய் புது விளக்கம்: மக்கள் முகம் சுளிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை :""பிற மாநிலங்களைவிட, தமிழகத்தில், "டெங்கு' பரிசோதனை வசதிகள் அதிகம் உள்ளதால், இதன் அறிகுறிகள் அதிகம் பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது,'' என, சுகாதார துறை அமைச்சர் விஜய், புது விளக்கம் அளித்துள்ளார். வசதி இல்லையெனில், பாதிப்பைக் கண்டறிந்திருக்கவே முடியாது என்பதையும், உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டிருக்கும் என்பதையும் உணராதவராக அவர் பேசியது, கேட்பவர்களின் முகத்தை சுளிக்க வைத்தது.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சி, தி.நகரில், நேற்று நடந்தது. இதில், எய்ட்ஸ் நோயாளிகளுக்காக, கம்பம், பழனி, பொள்ளாச்சி, விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, ஓசூர் ஆகிய இடங்களில், புதிய ஏ.ஆர்.டி., கூட்டு மருந்து சிகிச்சை மையத்தை, சுகாதார துறை அமைச்சர் விஜய் துவக்கி வைத்தார்.இந்த ஆண்டு மே 9 முதல், 28ம் தேதி வரை, எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு, செஞ்சுருள் விரைவு ரயில் வருகை தந்தது.

இந்த ரயிலை அதிகம் பேர் பார்வையிட்ட, கரூர் மாவட்டத்திற்கு விருதை வழங்கி, அமைச்சர் விஜய் பேசியதாவது:வரும், 2015ம் ஆண்டிற்குள், எச்.ஐ.வி., தொற்றை பூஜ்ய நிலைக்கு கொண்டு வருவதை இலக்காக கொண்டு, தமிழக அரசு, பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த நிதியாண்டில், எச்.ஐ.வி., தொற்றுக்கு ஆளாகி உள்ள, 1,597 குழந்தைகளுக்கு, கல்வி மற்றும் மருத்துவ செலவிற்கு, 47.86 லட்சம் ரூபாய் தரப்பட்டுள்ளது.பிற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில், "டெங்கு' வைரஸ் தொற்றை உறுதி செய்வதற்கான பரிசோதனை வசதிகள் அதிகம். தமிழகத்தில், இந்த ஆண்டு இதுவரை, 35 ஆயிரம் பேர், டெங்கு பரிசோதனை செய்துள்ளனர். இவர்களில், 9,000 பேருக்கு, டெங்கு அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. அதிகம் பேர், டெங்கு பரிசோதனை மேற்கொள்வதால், தமிழகத்தில், அதன் பாதிப்பு அதிகம் உள்ளது போல் தெரிகிறது.இவ்வாறு விஜய் பேசினார்.

பாதிப்பு கண்டறியப்படவில்லை எனில், ஏற்படக் கூடிய பின் விளைவுகள் பற்றி அறியாமல் அவர் பேசியதைக் கேட்டு, அங்கு கூடியிருந்த மக்கள், முகம் சுளித்தனர்.முன்னதாக, மெரினாவில், கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற, எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியை, சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் புதிய தொற்றுகள் இல்லாத நிலை உருவாகிட, அனைவரும் உறுதி ஏற்று, அதன்படி செயல்பட வேண்டும்' என, கேட்டுக் கொண்டுள்ளார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ungalil oruvan - Chennai,இந்தியா
02-டிச-201213:36:06 IST Report Abuse
ungalil oruvan என்ன சார் நீங்க, கம்பவுண்டர் மாதிரில்ல பேசுறிங்க. நீங்களே ஒரு டாக்டர், உங்களுக்கு உண்மை தெரியாதா? பதவிய தக்க வெச்சுக்கனுன்னு என்ன வேணா பேசாதிங்க சார்.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
02-டிச-201210:50:27 IST Report Abuse
Samy Chinnathambi ஒரு துறையை சேர்ந்தவர் அந்த துறைக்கு அமைச்சராகி விட்டால் மட்டும் அந்த துறை முன்னேறி சிறந்த சேவை ஆற்றி விட முடியாது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உண்மையான அக்கறை அந்த அமைச்சருக்கு இருந்தால் மட்டுமே அந்த துறை சிறந்த சேவை மக்களுக்கு செய்ய முடியும்....
Rate this:
0 members
0 members
18 members
Share this comment
K.Sugavanam - salem,இந்தியா
02-டிச-201214:53:34 IST Report Abuse
K.Sugavanamஎட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதற்கு ........
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
02-டிச-201210:48:27 IST Report Abuse
arabuthamilan நாட்டிலுள்ள சாக்கடைகள், சுற்று புறங்களை சுத்தமாக வைத்திருந்தாலே சுகாதார துறைக்கும், மருத்துவ துறைக்கும் அவசியம் இருக்காது. அதற்கென்று தனி அமைச்கர்களும் தேவைப்படாது.
Rate this:
1 members
0 members
12 members
Share this comment
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
02-டிச-201208:39:16 IST Report Abuse
Appan இந்திய சரித்திரத்தில் இப்படி தொற்று நோய் வது லட்சக் கணக்கில் செத்து உள்ளார்கள். அந்த காலத்தில் காலரா வந்தால் பல ஊர்கள் அழிந்து விடும். மலேரியவும் இப்படி அழித்திருக்கிரது இதர்க்கெல்லாம் மருந்து கண்டு பிடத்தவர்கள் மேலை நாட்டவர்கள். மலேரியாவிர்க்கு மருந்து கண்டு பிடித்த ஆங்கிலேயன் ஐதராபாத்தில் அராய்ச்சி செய்த்து , மலேரியாவை அழிக்க மருந்து கண்டு பிடித்தான். ஆனால் இந்தியர்கள் இப்படி ஏதும் செய்ய வில்லை. மாற்றாக கடவுள் கோப்பப்பட்டு இப்படி செய்கிரார் என்று கோவில் கோவிலாக சென்று கும்பிட்டார்கள். யார் கண்டது இந்த மந்திரியும் இப்படி செய்யலாம். இந்த நோய் கொசுவால் வருகிரது என்றால் கொசுவை அழிக்க முடியாதா ?. கொசுவை கும்பிடுபவர்களும் இருப்பார்கள். அவர்கள் மனம் புண்படும் என்று கொசுவை கொல்லாமல் விட்டு வைத்து இருக்கலாம். இது தான் தமிழினம்.
Rate this:
1 members
0 members
10 members
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
02-டிச-201207:11:24 IST Report Abuse
N.Purushothaman தொலைநோக்கு பார்வை கொண்ட திட்டமிட்ட உள்கட்டமைப்பு தமிழகத்தில் அணைத்து பகுதிகளிலும் அமையாதவரை சுகாதார சீர்கேடுகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும்.....அதன் மூலம் நோய்கள் பரவி கொண்டு தான் இருக்கும்....இதற்க்கு பாதாள சாக்கடை,திறந்த வெளியில் சாக்கடைகளை முற்றிலுமாக தடை செய்தல்,போன்ற பல விஷயங்களில் கவனம் செலுத்தி அதை கையாண்டால் தான் இதற்க்கு தீர்வு கிடைக்கும்.... அதற்க்கு தமிழகத்தில் உள்ள அணைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல் பட வேண்டும் ....
Rate this:
1 members
0 members
6 members
Share this comment
Cancel
குடியானவன்-Ryot - தண்ணீர் இல்லா தேசம் ,இந்தியா
02-டிச-201204:22:51 IST Report Abuse
குடியானவன்-Ryot எங்க மாமாவிற்கும் டெங்கு காச்சல் வந்தது. அரசு மருத்துவமனையில் 4 நாட்கள் சிகிசை எடுத்தார். blood count முனேற்றம் அடையாமல் நிலைமை மோசமானதால் Erode தனியார் மருத்துவமனையில் 5 நாட்கள் அனுமதிக்கப்பட்டு உயிர் தப்பினார். ( 20,000 Bill ) அவருடைய தந்தைக்கும் டெங்கு காச்சல் வந்தது நேரடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் 3 நாட்களில் blood count 70000 இருந்து 130000 முனேற்றமடைந்து வீடு திரும்பினார் (12000 Bill). நமது அரசு சுகாதாரதுறையால் நடத்தப்படும் மருத்துவமனையின் நிலைமை இப்படிருந்தால் 100 பேர் என்ன 1000 பேர் கூட செத்துமடிவார்கள், இந்த துறைக்கு வேறு ஒரு அம்மைச்சர் அதுவும் மருத்துவர் விளங்கிடும் துறை....
Rate this:
0 members
0 members
27 members
Share this comment
Cancel
மோனிஷா - நாகர்கோயில்,இந்தியா
02-டிச-201204:19:44 IST Report Abuse
மோனிஷா இப்படிப்பட்ட கோமாளிகள் மந்திரிகளாக இருப்பது நமது துரதிஷ்டம். மருத்துவர் பட்டம் எந்த மளிகைக்கடையில் வாங்கினார் என்று தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது.
Rate this:
0 members
2 members
31 members
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
02-டிச-201202:54:36 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் எனக்கு ஒரு சந்தேகம் ... இவர் ஒரு மாநில அமைச்சர்- இவர் இப்படி தெரிந்து தான் பேசுகிறாரா ?? இல்லை தெரியாமல் வெகுளியாக பேசுகிறாரா ??? இதே வரிசையில் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் திக்விஜய் சிங் , மனிஷ் திவாரி , தங்க பாலு , இளங்கோவன் போன்றோர் அடக்கம் ... ஒரு சமயத்தில் யோசிப்பேன் இவர்களெல்லாம் எப்படி அமைச்சர்கள் ஆனார்கள் என்று .. என்னத்த சொல்ல பணம் விளையாடுகிறது , நிர்வாக திறமை அல்லாதவர்களை எல்லாம் அமைச்சராக்கினால் இப்படி தான் - லொள்ளுசபா - போல பேசுவார்கள் .. தமிழக சுகாதார துறையின் லட்சணம் தான் இந்தியா முழுவதும் சந்தி சிரிக்கிறதே அப்பறம் என்ன ??? வெட்கமே இல்லாமல் உளறுகிறார் .. அதை அம்பல படுத்திய தினமலருக்கு நன்றி ... இதற்கும் அதிமுகவினர் வக்காலத்து வாங்குவர் .. கருமம்டா ..
Rate this:
0 members
2 members
40 members
Share this comment
Cancel
Ram Psa - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
02-டிச-201202:27:30 IST Report Abuse
Ram Psa மூக்கு பொடப்பா இருந்தாலே இப்பிடி தான் பேச சொல்லும்.ஒரு பக்கம் கரண்டு பிரச்சனை இன்னொரு பக்கம் டெங்கு பிரச்சனை.சீக்கிரம் இந்த ரெண்டு பிரச்சனையும் தேர்தல் வரதுக்குள்ள சரி பண்ணுங்கப்பு இல்லாட்டி சங்கு ஊதிடுவாங்க...
Rate this:
0 members
0 members
27 members
Share this comment
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
02-டிச-201209:04:58 IST Report Abuse
R.BALAMURUGESAN...இப்ப எல்லாரும் சங்கோடுதான், அலைந்துகொண்டு இருக்கிறோம்... ஊதுவதற்கு ரெடியாக... ...
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
02-டிச-201201:07:25 IST Report Abuse
Thangairaja அப்படி இருந்தும் மதுரை ராஜாஜி (அரசு) மருத்துவமனையில் உயிரிழப்புகள் ஏன்? யாகம் செய்யும் அளவுக்கு விபரீதமானது ஏன்? டெங்கு இருப்பதாக அறிக்கை கொடுக்கை கொடுக்க கூடாதென்று மாவட்ட சுகாதாரத்துறை தீவிரமாக இருந்தது ஏன்? இங்கு ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன், எனது இரண்டு மகன்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையின் மூலம் காப்பாற்றினோம், எங்களை போன்றோர் ஏராளம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மந்திரியும் சுகாதார துறை அலுவலரும் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு இல்லை என்று அறிக்கை விட்டிருந்ததை படித்து சிரிக்கத்தான் முடிந்தது. குணமாகி வந்ததும் சுகாதாரத்துறையினர் வந்து விசாரிக்க தவறவில்லை..பிறகு எதற்காக மூடி மறைக்க வேண்டும். வசதி இருப்போர் தனியாரிடம் சிறப்பு சிகிச்சை பெறலாம்......இல்லாதவர்கள் நிலை.......? மக்களுக்காக தானே அரசு.
Rate this:
0 members
0 members
35 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்