10 தேசிய கட்சிகளுக்கு வருமான வரி சலுகை : ஐந்தாண்டுகளில் ரூ.2,500 கோடி ரத்து
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி :இந்தியாவின், 10 முக்கியமான அரசியல் கட்சிகளுக்கு, கடந்த ஐந்தாண்டுகளில், 2,490 கோடி ரூபாய் வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக, காங்கிரசுக்கு, 1,385 கோடி ரூபாய் வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

"இந்தியாவில் உள்ள, முக்கியமான, 10 தேசிய கட்சிகளுக்கு, 2007-08 முதல், 2011-12 வரையிலான காலத்தில், வருமான வரிச் சலுகைகள் எவ்வளவு அளிக்கப்பட்டுள்ளன' என்பது குறித்து, ரமேஷ் வர்மா என்பவர்,தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், விவரம் கேட்டிருந்தார்.

இதற்கு, வருமான வரித் துறை அளித்துள்ள பதில்:இந்த ஐந்தாண்டுகளில், ஒட்டு மொத்தமாக, 10 தேசிய கட்சிகளுக்கு, 2,490 கோடி ரூபாய், வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மொத்த தொகையில், மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள, காங்கிரஸ், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ., ஆகியவற்றின் பங்கு, 80 சதவீதம்.அரசியல் கட்சிகளில் அதிகபட்சமாக, காங்கிரஸ் கட்சிக்கு, 1,385 கோடி ரூபாய், வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. பா.ஜ., 682 கோடி ரூபாய் வரிச் சலுகை பெற்றுள்ளது. பா.ஜ.,வை விட, காங்கிரஸ், இரண்டு மடங்கு அதிகமாக, வரிச் சலுகை பெற்றுள்ளது.

தே.ஜ. கூட்டணியில் அங்கம் வகிக்கும், ஐக்கிய ஜனதா தளம், 15 கோடி ரூபாய் அளவுக்கும், மாயாவதியின், பகுஜன் சமாஜ் கட்சி, 147 கோடி ரூபாய் அளவுக்கும், வரிச் சலுகை பெற்றுள்ளன. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு, 141 கோடி ரூபாய், வரிச் சலுகை கிடைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு, 86 கோடி ரூபாயும், இந்திய கம்யூனிஸ்டுக்கு, 28 கோடி ரூபாயும், வரிச் சலுகை தரப்பட்டுள்ளது.தேவ கவுடாவின், மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு, ஏழு கோடி ரூபாயும், ராம்விலாஸ் பஸ்வானின், லோக் ஜன சக்தி கட்சிக்கு, இரண்டு கோடி ரூபாயும், வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. லாலு பிரசாத் யாதவின், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, மூன்று கோடி ரூபாய் வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின், 20 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம், சிறு நன்கொடைகள் ஆகியவை, இந்த கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.அரசியல் கட்சிகளின் வருமானத்துக்கு, குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ், வருமான வரிச் சலுகை அளிக்கப்பட்டிருந்தாலும், 20 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக பெறும் நன்கொடைகள் மற்றும் வருமானத்துக்கு, வருமான வரித் துறையிடம் கணக்கு காட்ட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மத்திய தகவல் ஆணையமான, சி.ஐ.சி., அரசியல் கட்சிகள் கோரியுள்ள வருமான வரிச் சலுகைகள் குறித்த விவரங்களை அளிக்கும்படி, வருமான வரித்துறையிடம் கேட்க போவதாக தெரிவித்திருந்தது. அரசிடமிருந்து, அரசியல் கட்சிகளுக்கு மறைமுகமாக நிதி வந்துள்ளதா என்பதை அறிந்து, அதன் அடிப்படையில், அரசியல் கட்சிகளை, தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் கொண்டு வருவதற்காக, இந்த அறிவிப்பை, சி.ஐ.சி., வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.இதைத் தொடர்ந்து, தற்போது, அரசியல் கட்சிகளின் வரிச் சலுகைகள் குறித்த விவரங்கள், வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (35)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பகட்டுவான் - Chennai,இந்தியா
03-டிச-201218:24:25 IST Report Abuse
பகட்டுவான் பாவம் ஒன்னுக்குமே வழி இல்லாத பரம ஏழைகள் இவர்கள். அட அனுபவித்து போகட்டுமே ,,, தேர்தல் வரும் பொது இந்த ஒட்டு பொறுக்கிகளுக்கு முடிவு கட்டனும்
Rate this:
Share this comment
Cancel
ஹரிபாஸ்கர் - திருச்சி,இந்தியா
03-டிச-201215:01:23 IST Report Abuse
ஹரிபாஸ்கர் இந்த வரி சலுகையை ரத்து செய்தால், வருடத்திற்கு 24 காஸ் சிலிண்டர் கொடுக்கலாம்,,,,,,சுமை கால் பணம் சுமை கூலி முக்கால் பணம்,,,,,,
Rate this:
Share this comment
Cancel
saravanan - Dares Salaam,தான்சானியா
03-டிச-201215:00:27 IST Report Abuse
saravanan கட்சிக்கு வரிச்சலுகை...... கட்சியில எம் எல் எ, எம்பியா இருக்கறவனுக்கு வீடு, கார், பெட்ரோல், காஸ்நு எல்லா சலுகையும் உண்டு..... கஷ்டப்பட்டு சம்பாரிச்சி குடும்பத்தை ஒட்டுரவனுக்கு எந்த சலுகையும் கிடையாது.... அவன் கண்டிப்பா எல்லா வரியையும் கட்டியாகணும்..... இதுல இவனுங்க நாட்டை முன்னேத்த பாடுபடறானுங்கலாம்...... நாதரிப்பசங்க....
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-டிச-201200:43:43 IST Report Abuse
தமிழ்வேல் படு ஏழைகளுக்கு இலவசம்... மானியம் என பல உண்டு... படு பணக்காரர்களுக்கு எல்லா சலுகையும் உண்டு ... நடுத்தரத்து மக்கள் இவர்களுக்கு கொட்டனும்......
Rate this:
Share this comment
Cancel
ratthakatteri_modi - மோடி இல்லா தேசம் ,இந்தியா
03-டிச-201212:59:35 IST Report Abuse
ratthakatteri_modi வரிச்சலுகை பெற்றது எல்லா கட்சிகளும்தான், இதில் கூட காங்கிரசை மட்டுமே சாடியிருப்பது BJP யின் அல்லக்கைகளின் வயிற்றெரிச்சலையே காட்டுகிறது
Rate this:
Share this comment
Cancel
Deepak - Nellai,இந்தியா
03-டிச-201211:35:52 IST Report Abuse
Deepak பாலியல் தொழிலாளர்கள் இவர்களை விட மரியாதைக்குரியவர்கள்
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
03-டிச-201211:24:38 IST Report Abuse
villupuram jeevithan பொது தொண்டு செய்யும் ஸ்தாபனங்களுக்கு வரிச்சலுகை கொடுப்பார்கள். இவர்கள் என்ன தொண்டு செய்கிறாகள்? கொள்ளையைத்தவிர? ?
Rate this:
Share this comment
Cancel
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
03-டிச-201210:44:23 IST Report Abuse
மும்பை தமிழன் திருட்டு பயல்களுக்கு வரி விலக்கு
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-டிச-201200:40:17 IST Report Abuse
தமிழ்வேல் சட்டம் இயற்றுவதும் அவர்கள் தானே ?...
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
03-டிச-201210:40:04 IST Report Abuse
mirudan திருட்டுத்தனம், அயோக்கியத்தனம் மூலம் கிடைக்கும் வருவாயில் பிச்சை வாங்கும் அரசியல் கட்சியின் வருவாயிக்கு இரண்டு மடங்கு வரி விதிக்க வேண்டும்,
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
03-டிச-201210:38:14 IST Report Abuse
mirudan அரசியல் கட்சிகள் வாங்கும் பணம் நியாயமான முறையில் வரும் வருவாயில் வருவதில்லை, உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் DTH ஒரு மாத சந்தா
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
03-டிச-201221:57:57 IST Report Abuse
Nallavan Nallavanபுரியவில்லை டிடி.ஹெச் -இற்கும் அரசியல் கட்சிகளின் வருவாய்க்கும் என்ன தொடர்பு?...
Rate this:
Share this comment
Cancel
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
03-டிச-201210:38:02 IST Report Abuse
Ambaiyaar@raja கொடுங்கள் இன்னும் கொடுங்கள் காங் கட்சிக்கு இது பத்தாது. இன்னும் 3000 கோடிக்கு வரி சலுகை கொடுங்கள். தேர்தல் வேறு வருகின்றது அதுக்கு நிறைய பணம் தேவைபடுகின்றது. எனவே இன்னும் நிறைய கொடுங்கள். இன்னும் நிறைய கட்சிகளை பற்றி செய்திகள் வரவே இல்லை. ஏன் அனைத்தையும் வெளி இட்டால் தானே நல்லது. தமிழகத்தில் உள்ள இரண்டு பெரிய கொள்ளை கும்பல் பற்றி எந்த செய்தியும் வரவே இல்லை. அதே போல் உ.பி.யில் உள்ள ஒரு கொள்ளை கும்பலை பற்றியும், ஆந்திராவில் உள்ள கும்பலை பற்றியும் செய்தி வரவே இல்லை. அவர்கள் எல்லாம் உத்தமர்கள் ஆகிவிட்டர்களோ.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்