புதுடில்லி :லோக்சபா தேர்தலுக்கு, இன்னும், 18 மாதங்களே உள்ள நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில், காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளது. அடுத்த மாதம் நடக்கவுள்ள, காங்கிரஸ் சிந்தனையாளர் கூட்டத்தில், கூட்டணியில் புதிய கட்சிகளை வலைக்குள் இழுக்கவும், ஏற்கனவே இருக்கும் கட்சிகளை தக்க வைத்துக் கொள்வதற்குமான, செயல் திட்டத்தை உருவாக்க, காங்., மேலிடம் முடிவு செய்துள்ளது.
மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், காங்கிரசுக்கு அடுத்தபடியாக, பிரதான கட்சியாக, மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் அங்கம் வகித்தது. அந்த கட்சிக்கு, லோக்சபாவில், 19 எம்.பி.,க்கள் உள்ளனர்.ஆனால், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த விவகாரத்தில், காங்கிரசை கடுமையாக குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜி, கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக, அதிரடியாக அறிவித்தார்.இதனால், காங்கிரஸ் மேலிடம் ஆடிப் போனது. மம்தா கட்சி எம்.பி.,க்களின் ஆதரவுடன் தான், பல முக்கிய மசோதாக்களை, காங்கிரஸ் கட்சி, பார்லிமென்டில் தைரியமாக நிறைவேற்ற முடிந்தது. இதனால், மீதமுள்ள பதவிக் காலத்தை, எந்த பிரச்னையுமின்றி கழிக்க முடியுமா என்ற பயம், காங்., மேலிடத்துக்கு ஏற்பட்டது.
மோதல்:
வலை:
செயல் திட்டம்:
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இக்கட்டான நிலையில் இருக்கும் காங்கிரஸ் மிக மிக அபாயம். அவர்கள் தூண்டி விட்ட பல ஆயிரம் கலவரங்கள் இன்னும் யாரும் மறக்க வில்லை. இப்போதும் கூட உபி அஸ்ஸாம் மாநிலங்களில் நடந்து கொண்டு தான் உள்ளது. வோட்டுக்காக என்ன வேணாலும் செய்வர் எதற்கும் துணிவர். மதவெறி பிடித்த இரண்டு மதங்கள் மட்டும் சார்புள்ள கட்சி காங்கிரஸ் தான், பி ஜே பி அல்ல.
புகழ் அவர்களே, உங்களுக்கு பா ஜ க மற்றும் மோடி மீது ஏன் இந்த வெறுப்பு. தமிழ்நாட்டில் பல வருடங்களாக தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. அதை போக்க முடியாதவர்கள் நம்தமிழ்நாட்டை ஆண்டவர்களும், ஆள்பவர்களும்தான். அதை விட்டு விட்டு அண்டை மாநிலத்தை எதற்கு குறை சொல்கிறீர்கள். அந்த மாநில முதல்வர்கள் தன்னுடைய மாநில நன்னையைதான் அந்த மாநில முதலமைச்சர்கள் முதலில் பார்ப்பார்கள். காங்கிரஸ் ஆளும் கேரளாகூடத்தான் நமக்கு தண்ணீர் தர மறுக்கிறது. காங்கிரஸ் துரோக கட்சி இல்லையா....
முன்பு நடந்த காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் சட்டவிரோதமாக கபினி, ஹேமாவதி அணைகளை காவிரியின் குறுக்கே கட்டினர் என்பதைத் தமிழர்கள் மறக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் இப்போதய பாஜக ஆட்சியில் போராட்டங்கள் இருந்தாலும் வன்முறை இல்லை. ஆனால் முந்திய காங்கிரஸ் ஆட்சியின்போது தான் காவிரி நீருக்காக கலவரம் வெடித்து அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் ஆளும் கட்சி குண்டர்களால் கொல்லப்பட்டனர். அங்கு எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மனமுவந்தோ, கோர்ட் ஆணையிட்டாலும் கூட தண்ணீர் தரமாட்டார்கள் . அப்படியே தண்ணீர் திறந்துவிட்டால் அன்றோடு அந்த ஆட்சி காலையும். தவறு பாஜக வினதல்ல. சட்டவிரோத அணைகளைக் கட்டிய காங்கிரசும் அதற்கு அன்று வாய்மூடி மவுனியாய் உடன்பட்ட ஆளும் திமுக வும்தான்...
இதுதான் இந்தியாவில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு. ஆட்சிக்கு வந்து முதல் நான்கு வருடம் என்ன மொள்ளமாரித்தனம் செய்தாலும் கவலை இல்லை, மக்கள் மறந்து விடுவார்கள், கடைசி வருடத்தில் என்ன செய்கிறோம் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு வரும் தேர்தலில் தங்கள் வாக்குகளை அளிப்பார்கள் என்பதை அரசியல் கட்சிகள் நன்கு புரிந்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு இந்த ஞாபக சக்தி குறைவு நோய் இருக்கும் வரை எந்த ஒரு அரசியல் கட்சியும் கவலைப்பட வேண்டியது இல்லை.
காங் கட்சி யார் கூட சேர்ந்தாலும், காங் கட்சி கூட யார் சேர்ந்தாலும், அவர்கள் எல்லோரும் இந்த முறை தேர்தலில் கரை ஏற முடியாது வெற்றி என்பது நிச்சயமாக கிடையாது இது மற்ற எல்லா கட்சிகளுக்கும் தெரியும். பிஜு ஜனதா கட்சி ஒரிசாவில் காங் கட்சியை எதிர்த்து தான் அரசியல் செய்கின்றது எனவே அவர்கள் எப்படி காங் கட்சிகூட தேர்தாலுக்கு முன் எப்படி சேர்வார்கள் தவறான தகவல்களை சொல்கின்றீர்கள். இடது சாரிகளும் தேர்தலுக்கு பின்பு வேண்டுமானால் மத வாத கட்சிகள் வந்து விட கூடாது என்று சொல்லி சேர்வார்கள் தேர்தலுக்கு முன்பு சேரவேமாட்டர்கள். அவர்களும் காங் கட்சி எதித்து தான் அரசியல் செய்கின்றார்கள் அதுவும் தவறுதான். காங் கட்சிக்கு இந்த முறை 100 தொகுதி கூட நிச்சயம் கிடைக்காது பிஜேபி என்ன முக்கு முக்கினாலும்150 தான் கிடைக்கும். மீதி 300 மற்ற கட்சிகளும் மாநிலகட்சிகளும் சேர்ந்து பிடித்து நாட்டை நாசம் செய்யும் என்பது உண்மை. தேர்தலுக்கு பின் குதிரை பேரம் எல்லாம் கேவலமாக இந்த முறை நடைபெறும் மக்கள் நினைத்தால் இதை எல்லாம் தடுக்க முடியும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.