பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கு நேரம் உள்ளது: பா.ஜ.,

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்வு செய்வதற்கு இன்னும்நேரம் உள்ளது என பா.ஜ., கூறியுள்ளது.

அடுத்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து, அந்த கட்சியின் மேலிட தலைவர்களுக்கு இடையிலும், பா.ஜ., கூட்டணி கட்சிகளுக்கு இடையிலும், கருத்து வேறுபாடு நிலவுகிறது.அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் போன்ற தலைவர்களுடன், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பெயரும், பா.ஜ.,வின் பிரதமர் வேட் பாளர் பதவிக்கு அடிபடுகிறது. ஆனாலும், பா.ஜ., தலைமை யிலான, தே.ஜ., கூட்டணியில் உள்ள, ஐக்கிய ஜனதா தளம் கட்சி, "நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்க மாட்டோம்' என, அறிவித்துள்ளது.

இதனால், பிரதமர் வேட்பாளர் பதவிக்கு, சுஷ்மா சுவராஜுக்கு தான், அதிக வாய்ப்புள்ளதாக, பேச்சு எழுந்தது. இதனால், இந்த விவகாரத்தில், நரேந்திர மோடிக்கும், சுஷ்மாவுக்கும், கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இது, கட்சியின் தேர்தல் வெற்றிக்கு, பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம், குஜராத் சட்டசபை தேர்தலில், பிரசாரம் செய்த, சுஷ்மா சுவராஜ், "நாட்டின் அடுத்த பிரதமராவதற்கான அனைத்து தகுதிகளும், நரேந்திர மோடிக்கு உள்ளன' என்றார்.இந்த சர்ச்சைக்கு கடிவாளம் போடும் முயற்சியில், பா.ஜ., இறங்கியுள்ளது.

இதையடுத்து, கட்சியின் துணை தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது பற்றிய சர்ச்சை, இப்போதைய நிலையில் அவசிய மில்லை. பிரதமர் பதவிக்கு தகுதி யான தலைவர்கள், பா.ஜ.,வில் அதிகம் உள்ளனர். அடுத்த தேர்தலுக்கான, கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை, நேரம் வரும்போது, அறிவிப்போம். இந்த விஷயத்தில், அவசரம் காட்ட மாட்டோம்.இவ்வாறு முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (55)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu - tiruchi,இந்தியா
03-டிச-201223:55:12 IST Report Abuse
babu நாட்டில் பி ஜே பி க்கு என்ன மரியாதை உள்ளது சொல்லவும்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
03-டிச-201223:25:12 IST Report Abuse
Pugazh V பிரதமர் முதல் சுப்ரீம் கோர்ட் வரை சொல்லியும் தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் தர மறுக்கும் இன துரோகி பா ஜ க பற்றிய செய்திகளை தினமலர் பிரசுரிக்கவே கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Arasan - chennai,இந்தியா
03-டிச-201221:12:47 IST Report Abuse
Arasan பா ஜா க -வில் மோடியை விட்டா வேற ஆளே இல்லையா? cm -மும் அவர்தான் pm -மும் அவர்தான் கட்சிக்கு முக்கிய லீடரும் அவர்தான்-ன்னு ஏன் இப்படி அவன தூக்கிட்டு திரியுரானுன்களோ. மோடி குஜராத் -திற்கு மட்டும் போதும்.
Rate this:
Share this comment
Cancel
yousuf - riyadh,சவுதி அரேபியா
03-டிச-201218:56:55 IST Report Abuse
yousuf how mr. modi became a prime minsiter, is it possible ther si no vote bank for bjp in south , Kerala 0 out of 20, Tamilnadu 0 out of 40, Andrapradesh 0 out of 48 before they have karanatak 4o + hope now its also few seats . in south india total around 150 seats may be bjp wi ll get less than 20 (Only in Karnataka) the same in west bangal
Rate this:
Share this comment
Cancel
yousuf - riyadh,சவுதி அரேபியா
03-டிச-201218:53:08 IST Report Abuse
yousuf அதை காங்கிரஸ் பார்த்து கொள்ளும். நீங்கள் ஏன் இப்போதே சண்டை போடுறீங்க
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
03-டிச-201216:42:03 IST Report Abuse
s.maria alphonse pandian குடியரசு தலைவர் வேட்பாளர் தேர்ந்தெடுப்பதில் வேகம் காட்டியதுபோல பிரதமர் வேட்பாளர் தேர்விலும் வேகம் காட்டும் பிஜேபி என்கிறார்கள்...ஜெயலலிதாவின் நிர்வாக திறமைக்கு முன் மோடி ஒரு தூசி என நண்பர்கள் கூறுகிறார்கள்..அப்படியா?
Rate this:
Share this comment
Cancel
Cletus - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03-டிச-201215:48:55 IST Report Abuse
Cletus யார் வந்தாலும் தமிழனின் கதி மாறபோவதில்லை. ஆகவே நம்மில் ஒருவர் அந்த சீட்டை பிடிக்கவில்லையெனில் நமக்கு நூறு மோடி வந்தாலும் நிலைமை இப்படிதான் இருக்கும். தயவு செய்து ஒரு தடவை நாற்பது சீட்டும் அதிமுகவுக்கு கொடுத்து பார்ப்போம். கலைஞருக்கு ஒரு தடவை கொடுத்து ஏமாந்தோம்.. இவர்களுக்கு ஒரு வாட்டி கொடுத்து பார்ப்போம்... பயப்படாதீர்கள் ...களவு செய்ய அங்கு ஒன்றும் மிச்சமில்லை. வேறு ஒருவரை தேர்ந்தெடுக்க இங்கு ஆளில்லை.
Rate this:
Share this comment
Cancel
vidhuran - Hastinapur,இந்தியா
03-டிச-201215:26:42 IST Report Abuse
vidhuran ராஜபக்சேவை எதிர்க்கும் நம்மால், எப்படி மோடியை ஆதரிக்க முடிகிறது. இருவருமே ஈவு இரக்கமின்றி மனித சமுதாயத்தை கொத்துக் கொத்தாக, கிராமம், கிராமமாக புள் பூண்டு தெரியாமல் வாரிசே இல்லாமல் கொன்றொழித்தவர்கள் தானே?.இன்னும் சொல்லப் போனால், குஜராத் முஸ்லிம்கள் நம் இந்தியர்கள்
Rate this:
Share this comment
Cancel
S. ரெகுநாதன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
03-டிச-201213:18:53 IST Report Abuse
S. ரெகுநாதன் தேசபக்தி, நல்ல நிர்வாக திறன் கொண்ட நரேந்திர மோடி அவர்கள் பெரும்பாலான மக்கள் குறிப்பாக சிறுபான்மையினர், விவசாயிகள், இளைன்ஞர்கள், தொழில்முனைவோர் அனைவராலும் வெகுவாக பாராட்டபட்டு வருகிறார்..அவரே அடுத்த பிரதமர் பதவிக்கு உகந்தவர்....பிஜேபியில் இன்னும் பலர் இருக்கலாம்....ஆனால் அவரனைவரையும் விட மிக சிறப்பான அப்பழுக்கற்ற தலைவர் நரேந்திர மோடி...அவர் தலைமையில் அமையும் மத்திய அரசு பல்லாண்டு காலம் பொற்கால ஆட்சியை இந்திய திருநாட்டுக்கு நல்கும்...
Rate this:
Share this comment
Cancel
saravanan - Dares Salaam,தான்சானியா
03-டிச-201212:40:05 IST Report Abuse
saravanan பிஜேபியில் மட்டுமல்ல..... காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சியில் தேடினாலும் மோடி போன்ற திறமையுள்ள, தகுதியான பிரதமர் வேட்பாளர் வேறு யாரும் கிடையாது...
Rate this:
Share this comment
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
03-டிச-201216:43:44 IST Report Abuse
s.maria alphonse pandianமோடி நல்ல நிர்வாகி என்பதில் ஐயமில்லை...எனினும் நீங்கள் கொடுத்துள்ளது ஓவர் பில்டப்.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்