Advertisement
பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2012,23:34 IST
கருத்துகள் (11)
தமிழகத்தில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள், போதுமான நிதியின்றி, வறட்சியின் பிடியில் சிக்கி, இயங்க முடியாமல் தவித்து வருகின்றன. வரும், பிப்ரவரி 15ம் தேதிக்குள், கூட்டுறவு சங்கத் தேர்தல்களை, அரசு நடத்தி முடித்தால் மட்டுமே, நபார்டு வங்கி மற்றும் மத்திய அரசின் நிதி உதவியைப் பெற முடியும்.

கூட்டுறவு சங்க உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில், குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க ஏதுவாக, தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை அரசு நீட்டித்துள்ளது.தமிழகத்தில், 10 ஆயிரத்து 442 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. 2001ல், ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., அரசு, கூட்டுறவு சங்க நிர்வாகக் குழுவை கலைத்து, தனி அலுவலர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அன்று முதல், தனி அலுவலர் பதவிக் காலம், ஆறு மாதத்துக்கு ஒருமுறை, நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது.

நிதி பற்றாக்குறை:


தற்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பு, மத்திய அரசு நடவடிக்கை மற்றும் நபார்டு வங்கி (ஊரக வளர்ச்சி தேசிய வங்கி) வழிகாட்டுதல்படி, உள்ளாட்சி நிர்வாகத்தைப் போல், கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தி, தேர்வு செய்யப்படும் நிர்வாகக் குழுவிடம் பொறுப்புகள் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதோடு, கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தினால் மட்டுமே, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு, வழங்க வேண்டிய நிலுவை கடன் தொகை, 536 கோடி ரூபாயை வழங்க முடியும் என, நபார்டு வங்கி, திட்டவட்டமாக தெரிவித்தது. போதுமான நிதி இல்லாததால், கூட்டுறவு சங்கங்கள் நிதி பற்றாக்குறையில் தள்ளாடி வருகின்றன. பெரும்பான்மையான சங்கங்கள், பெயரளவிற்கு இயங்கி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.நகைக்கடன் வழங்குதல் உள்ளிட்ட சில நடவடிக்கைகள் மூலமே, ஊழியர்களின் சம்பளத்தை வழங்க வேண்டிய நிலை உள்ளது.
அதனால், கூட்டுறவு தேர்தலை உடனடியாக நடத்தி, நிலைமையை சமாளிக்க வேண்டிய கட்டாய நிலை, தமிழக அரசுக்கு ஏற்பட்டது.

பதவி நீட்டிப்பு:


இந்நிலையில், நவம்பர், 24ம் தேதியோடு, முடிவுக்கு வந்த, தனி அலுவலரின் பதவிக் காலத்தை, இரண்டு மாதம், 20 நாட்கள் வரைநீட்டிப்பு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த நீட்டிப்பு காலம் முடிவடையும், அடுத்த ஆண்டு, பிப்ரவரி, 15ம் தேதிக்கு முன், தேர்தல்களை நடத்தி முடித்து, தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகக் குழுவிடம், பொறுப்புகள் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை, தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சட்ட திருத்தம் :


கூட்டுறவு சங்கங்களின் தன்னாட்சி அதிகாரம், உறுப்பினர்கள் தொடர்பான பல்வேறு அம்சங்களுடன் கூடிய, கூட்டுறவு சங்கம் தொடர்பான, 97வது அரசியல் சட்ட திருத்தம், மத்திய அரசின் அரசிதழில், கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தில், கூட்டுறவு சங்கங்களுக்கு தன்னாட்சி வழங்கப்பட்டுள்ளது.சட்ட திருத்தம் குறித்து, தற்சார்பு கூட்டுறவு சட்ட விழிப்புணர்வு குழுவைச் சேர்ந்த, போத்தி ரெட்டி கூறியதாவது:கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், 21 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த ஒருவர், குறைந்த பட்சம் இரண்டு பெண்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

அதிகாரம் பறிபோகும்:

சங்க நிர்வாகக் குழுவினர் பதவிக் காலம், மூன்றாண்டுகள் என்பது மாற்றப்பட்டு, ஐந்தாண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. சங்கத்தின் கணக்கு தணிக்கைஅறிக்கையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சமர்ப்பிக்கா விட்டால், சங்கம் நிர்வாக
Advertisement
அதிகாரத்தை இழந்து, தனி அதிகாரியின் நிர்வாகத்தின் கீழ் சென்றுவிடும்.இந்த சட்ட திருத்தத்தை, அனைத்து மாநிலங்களும், அடுத்தாண்டு, பிப்ரவரி, 15க்குள் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

கட்சிகள் மும்முரம்:

கூட்டுறவு சங்கங்களில், பதவியைப் பிடிக்க, அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. ஆளுங்கட்சியினர் மட்டும் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.பிரதான கூட்டுறவு சங்கங்களில் பதவிகளை பிடிக்கும் வகையில், தங்களது ஆதரவாளர்களை, உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், சங்கங்களில் உறுப்பினர்களாக சேர்க்க முயற்சித்து வருகின்றனர்.

- நமது நிருபர் குழு -



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (11)
glassboy - mangaf,குவைத்
03-டிச-201222:01:25 IST Report Abuse
glassboy ரொம்ப கஷ்டம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Kanal - Chennai,இந்தியா
03-டிச-201215:32:05 IST Report Abuse
Kanal செயல் திறன் இல்லாத மோசமான நிர்வாகத்தால் அனைத்து நிலைகளிலும் இந்த அரசாங்கம் தோல்வியைத் தழுவி வருவதையே இது காட்டுகிறது.
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
Arul - Chennai,இந்தியா
03-டிச-201219:35:32 IST Report Abuse
Arulஅந்த சுத்ததிலே மண்டையில நீயே அடிச்சுக்க...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
03-டிச-201211:18:10 IST Report Abuse
villupuram jeevithan அரசியல்வாதிகளின் வறட்சியை போக்கத் தானே இந்த கூட்டுறவு சங்க தேர்தலே நடத்தப் போகிறார்கள். நல்ல நிலையில் இருந்தாலே வரட்சியாகி விடுவார்கள் இந்த அரசியல்வாதிகள்?
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
03-டிச-201210:53:24 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar கூட்டுறவே நாட்டின் உயர்வே.., அரசியல் கட்சிகள் அரசியல்வாதிகள் நிர்வாகத்தால்..,நஷ்டம் தான் ஏற்படும்..அதனால் அரசியவாதிகள் கூட்டறவு தேர்தலில் போட்டியிடகூடாது.., மேலும் கடன் வசூல் தீர்பாயத்தின் மூலம் கடன் வசூல் செய்யவேண்டும்..,இதனால் நல்ல நேர்மையானவர்கள் நிர்வாகம் ஏற்படும் கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்க வாய்ப்பில்லை
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
arabuthamilan - Manama,பஹ்ரைன்
03-டிச-201210:45:28 IST Report Abuse
arabuthamilan இன்னும் எந்தெந்த துறைகள் எல்லாம் மூடும் நிலையில் இருக்கின்றதோ? இந்த ஆட்சி வந்ததில் இருந்தே தமிழகத்தில் சாபம் தலைவிரித்து ஆட ஆரம்பித்து விட்டது. யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி கொட்டினது போல தமிழ் மக்களும் தங்கள் தலையில் தெரிந்தே மண்ணை அள்ளி கொட்டிகொண்டிருக்கிறார்கள். வீதிக்கு வந்து போராட நம் மக்களுக்கு தைரியம் இல்லை.
Rate this:
1 members
1 members
9 members
Share this comment
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
03-டிச-201210:34:49 IST Report Abuse
மும்பை தமிழன் இந்த அறிவிப்பு அரசாங்கம் ஒழிந்தால் மட்டுமே தமிழனுக்கு நிம்மதி
Rate this:
1 members
0 members
8 members
Share this comment
Pugal - Kovai ,இந்தியா
03-டிச-201210:05:17 IST Report Abuse
Pugal இப்போதைய அரசின் நிர்வாகத் திறன் இன்மையும், கையாலாகாத்தனமும், செயல்பாடற்ற நிலையும் இதன் மூலம் மீண்டும் வெளிப்படையாக தெரிகிறது. என்ன தான் செய்கிறார்கள், அமைச்சர்களும், அதிகாரிகளும்? மத்திய அரசையும், கடந்த ஆட்சியையும் குறை சொல்லிக் கொண்டிருந்தார்கள்- இருக்கிறார்கள்- இரண்டு இடைத் தேர்தலில் அனைத்து அமைச்சர்களும் உழைத்தார்கள். முதல்வர் ஒரு முறை கொட நாடும், ஒரு முறை சிருதாவூரும் சென்று வந்தார். சில முன்னால்களை கைது செய்தார்கள். மக்களுக்காக என்ன செய்தார்கள்? பஸ், பால், மின் கட்டணங்களை உயர்த்தினார்கள். எங்களுக்கு இன்னும் லேப் டாப், மிக்சி கிரைண்டர், மின்சாரம் எதுவுமே வரலை.
Rate this:
1 members
0 members
14 members
Share this comment
Ng Nswamy - salem,இந்தியா
03-டிச-201205:55:41 IST Report Abuse
Ng Nswamy யார் பிரதம வேட்பாளர்,ஜெயாவா,மோடியா
Rate this:
5 members
0 members
5 members
Share this comment
naagai jagathratchagan - Nagapattinam ,இந்தியா
03-டிச-201204:47:27 IST Report Abuse
naagai jagathratchagan இந்த அரசு வந்தது முதல் எல்லாமே அபாய கட்டத்தில் தான் இருக்கிறது ....மக்கள் தான் விடிவு காலம் எங்கே என்று தேடிக்கொண்டு இருக்கிறார்கள் ....என்ன செய்வது ...நாம் வந்த வழி என்று நொந்து கொள்கிறார்கள் ...
Rate this:
2 members
0 members
12 members
Share this comment
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
03-டிச-201203:31:16 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் எங்கும் அரசியல் எதிலும் அரசியல்... சங்கம் வைத்தே எல்லாத்தையும் அழித்து விடுங்கள் ... அதில் கூட அரசியல் ... கஷ்ட காலம் ...
Rate this:
1 members
0 members
15 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.