Rajestan stateworkers talent | பழைய இரும்பு கொடுத்தால் 15 நிமிடத்தில் அரிவாள் "ரெடி': ராஜஸ்தான் தொழிலாளர்கள் அசத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழைய இரும்பு கொடுத்தால் 15 நிமிடத்தில் அரிவாள் "ரெடி': ராஜஸ்தான் தொழிலாளர்கள் அசத்தல்

Added : டிச 02, 2012 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 பழைய இரும்பு கொடுத்தால் 15 நிமிடத்தில் அரிவாள் "ரெடி': ராஜஸ்தான் தொழிலாளர்கள் அசத்தல்

மடத்துக்குளம் :"நடமாடும் இரும்பு பட்டறை' நடத்தி, உடனுக்குடன் மலிவு விலையில் கத்தி, அரிவாளை ராஜஸ்தான் தொழிலாளர்கள் விற்பனை செய்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள், தனி குழுவாக வந்து, இரும்பு தொடர்பான பொருட்களை உடனுக்குடன் செய்து தருகின்றனர்.
இவர்கள், ஒரே இடத்தில் தங்கள் தொழிலை செய்யாமல், ஒவ்வொரு பகுதியாக செல்கின்றனர்.

ராஜஸ்தான் தொழிலாளர்கள் கூறியதாவது:எங்கள் மாநிலத்தில் போதிய வருவாய் கிடைக்கவில்லை. வேறு தொழிலும் தெரியாது; இதனால், ஒவ்வொரு பகுதியாக சென்று இரும்பு பட்டறை தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.குறிப்பாக, விவசாயத்திற்கு பயன்படும் கலப்பை, கொத்து, மண்வெட்டி, கட்டுமானத்துக்கு பயன்படும் கடப்பாரை மற்றும் அரிவாள், கத்திகளை தயாரிக்கிறோம். மக்கள் கொடுக்கும் பழைய இரும்புகளில், அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் செய்து வழங்குவதற்கு, கூலியாக 60 ரூபாய் பெற்றுக்கொள்கிறோம். ஒரு பொருள் செய்ய 15 முதல் 30 நிமிடங்கள் ஆகும். ஆனால், எங்களின் உணவு தேவைக்குக்கு கூட கிடைக்கும் வருமானம் கட்டுபடியாகவில்லை.இவ்வாறு, தொழிலாளர்கள் கூறினர்.

ஒரு வேளை உணவிற்காக இனம், மொழி, கலாசாரம் அனைத்தையும் மறந்து நாடோடிகளாக இவர்கள் வாழும் வாழ்க்கை, "உழைக்கும் எண்ணம் இருந்தால் போதும்; உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்யலாம்' என்கிற கருத்தை பிரதிபலிப்பதாக இருந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Raj - villupuram,இந்தியா
11-டிச-201219:10:28 IST Report Abuse
Siva Raj நமது நாட்டில் உழைப்பவன் வெயில்லில் திருடுபவன் ஏசி ரூமில்
Rate this:
Share this comment
Cancel
அந்நியன் - வயல் வெளிகள்,இந்தியா
04-டிச-201218:57:43 IST Report Abuse
அந்நியன் இவர்களை விவசாய வேலைகளுக்கும் பழக்கப்படுத்தி விவசாயத்தை மீட்டெடுக்கலாம்.
Rate this:
Share this comment
Siva Raj - villupuram,இந்தியா
11-டிச-201219:06:12 IST Report Abuse
Siva Rajgood...
Rate this:
Share this comment
Cancel
jayabalan - chennai ,இந்தியா
04-டிச-201208:01:48 IST Report Abuse
jayabalan "உழைக்கும் எண்ணம் இருந்தால் போதும் உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்யலாம்&39 என்கிற கருத்தை பிரதிபலிப்பதாக இருந்தது என சரியாகச் சொன்னீர்கள் ஆம் தமிழகம் தவிர எங்கும் உழைப்புக்கு மரியாதை உண்டு
Rate this:
Share this comment
Cancel
sing venky - Stanford University, Melnopark,யூ.எஸ்.ஏ
03-டிச-201221:02:00 IST Report Abuse
sing venky இந்த கூலி தொழிலார்களின் உழைப்பை பார்த்திருக்கிறீர்களா? அதுவும் இளம் தாய்மார்கள் பக்கத்திலேய ஒரு சிறிய தொட்டிலில் தங்களின் குழந்தையை போட்டுவிட்டு, பெரிய சுத்தியல் (சம்மட்டி) தூக்கி அடிக்கும் போது இடைவிடாமல் கேட்கும் அந்த சப்தத்தில் எப்படி அக்குழந்தை தூங்கும்? நாட்டின் ஏழ்மையை நீக்க சிந்திக்காத எந்த அரசும் இவர்களின் வாழ்கையை முன்னேற்ற போவதில்லை. உடல் உழைப்பு தவிர (அதுவும் வத்திய, தொத்தலான உருவத்துடன்) இவர்களுக்கு துணை இருப்பது யாரோ? இவர்கள் ஒரு சிறு உதாரணம் தான். இது போல் கூலி தொழிலாளிகள், அடிமை தொழாளிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் துன்புறுகின்றனர். இவர்களுக்கென ஒரு நிரந்தரமான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இவர்களின் குழந்தைகளுக்கு சீரிய கல்வி அளிக்க பட வேண்டும். வறுமை இந்நாட்டை விட்டு துரத்தப்பட வேண்டும்.....இந்நாட்டு அரசியல் வாதிகளும், உழல் அரசூழியர்களும் திருந்த போவதில்லை.... கடவுளே கண் திறப்பாயா
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
03-டிச-201215:36:22 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. இவர்கள்... மதுரை... திருநெல்வேலி பக்கம் சென்றால்.. இவர்கள் தொழில் மேலும் நிறைய லாபம் தரும்.. பலருக்கும் இவர்கள் ஆஸ்தான.., தனிப்பட்ட முறையில்... தொழில் புரிவோராக இருக்க கூடிய வாய்ப்பிருக்கிறது ...
Rate this:
Share this comment
Cancel
Dhanabal - Thoothukudi,இந்தியா
03-டிச-201213:04:30 IST Report Abuse
Dhanabal அன்றாட கூலி வேலைக்கு கூட வெளி மாநில ஆட்களையே நம்ப வேண்டிய நிலை தமிழகத்தில் உருவாகி விட்டது. அன்றைய தமிழன் கோவிலை கட்டினான். குளத்தை வெட்டினான் என்பது வரலாறு. ஆனால் இன்றைய தமிழன் அரசு பார்களில் தஞ்சமடைந்து, தனது குடும்பத்தையும் தனது உழைப்பையும் மறந்து விட்டது வேதனையிலும் வேதனை ...
Rate this:
Share this comment
Cancel
Ram Mohan - tirunelveli,இந்தியா
03-டிச-201212:35:14 IST Report Abuse
Ram Mohan நெல்லை மாவட்டத்தில் நீங்கள் வீடு கட்ட போறிங்களா????? கொத்தனார் சம்பளம் ஒரு நாளைக்கு 400 முதல் 500 வரை . காலை வேலை ஆரம்பிக்கும் நேரம் 10 :00 மணி உணவு இடைவேளை 01 மணிக்கு குட்டி தூக்கம் 1 மணி நேரம் மாலை 5 மணி வரை வேலை ... ஞாயிறு விடுமுறை முழு போதை மாமிசம் ....திங்கள் கிழமை வேலைக்கு போவது கிடையாது ...இது போக மச்சினிச்சி கல்யாணம் , சித்தப்பா வீட்டில் காது குத்து , ஆஸ்பத்திரி , கோவில் கொடை, வயல் அறுப்பு , மழை, ஊரில் பஸ் ஓடவில்லை , சாதி சண்டை .... இப்படி பல கூத்துகளை நீங்கள் பார்க்கலாம் கேட்கலாம்... சொன்ன நேரத்தில் வேலை முடிக்க மாட்டார்கள் .... இப்படி ஒரு வேலை சோறுக்காக பாடு படும் இவர்களை பார்க்கும் போது பெருமையாக உள்ளது ..... நம்ம ஊரு ஆளுங்கள் வெளி நாட்டில் போய் கஷ்ட படும் போது தான் அவர்களுக்கு ஊரின் அருமை தெரியும் ......
Rate this:
Share this comment
dharma - nagpur,இந்தியா
03-டிச-201214:04:23 IST Report Abuse
dharmaஇதுக்குதான் ஏற்கனவே பீகார் ஒரிசா ஆகிய மாநில வெளிஆட்கள் கொஞ்சம் கொஞ்சமாக வர தொடங்கியுள்ளனர். தமிழனுக்கு கவலை இல்லை ரேசன் அரிசி ஒரு ரூவாயில் கிடைக்கிறது டாஸ்மாக்கில் தாக சாந்தி நடக்கிறது. அது போக அடித்து பிடுங்கும் அரசியில் வாதிக்கு அல்லக்கையாக ரியல் எஸ்டேட் ப்ரோக்கராக உழைப்பே இல்லாமல் உடம்பு தேயாமல் பணம் சம்பாரிக்க வழி. வேற என்ன செய்வான் தமிழன்...
Rate this:
Share this comment
Cancel
ASA RASH - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03-டிச-201211:42:49 IST Report Abuse
ASA RASH உடனே போலீஸ் கண்காணித்து இதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் அமெரிக்காவில் துப்பாக்கி போல இங்கு கொலை கொள்ளைகளுக்காக உபயோகப்படுத்தப்படும்.
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
03-டிச-201210:53:50 IST Report Abuse
mirudan தமிழ் நாட்டில் கூலி வேலை செய்பவர்கள் பெரும்பாலானவர்களிடம் நாணயம் இல்லை, செய்யும் வேலையையும் ஒழுங்காக செய்வதில்லை மதுவுக்கு அடிமையாகி சொம்பேரிகளாக ஆகிவிட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
03-டிச-201210:53:15 IST Report Abuse
arabuthamilan நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள் கட் அவுட்டுகளுக்கு பால், மோர் , தயிர், வெண்ணை, நெய் அபிஷேகம் செய்கிறவர்கள், அவர்கள் பின்னால் வீணாக செல்லும் தமிழ் இளைய சமுதாயமே, இந்த செய்தியை படித்த பின்பும் உனக்கு நல்ல புத்தி வரவில்லை என்றால் உன்னை திருத்த யாராலும் முடியாது. நீங்கள் விளங்கவே மாட்டீர்கள். .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை