3500 dead in road accident | கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 3,500 பேர் பலி: சாலை விபத்து உயிரிழப்புகள் அதிகரிப்பு| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (13)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

கோவை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், கடந்த 10 மாதங்களில் நடந்த சாலை விபத்துகளில் மட்டும், 3,500 பேர் பலியாகியுள்ளனர்.

நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் போலவே, சாலை விபத்து சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. சாலை வசதிகள் இல்லாதது; போக்குவரத்து விதிகளை பின்பற்றாதது; மதுபோதையிலும், அதிவேகத்திலும் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட காரணங்களால், விபத்துகள் நிகழ்கின்றன. தமிழகத்தின் மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட எட்டு மாவட்டங்களில், கடந்த ஜன.,1 முதல், அக்டோபர் இறுதி வரை நடந்த விபத்துகளில் மட்டும், 3,533 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டம்:வாரியாக உயிரிழப்பு எண்ணிக்கை விவரம் (அடைப்புக்குறிக்குள் 2011ம் ஆண்டில் பலியானோர் எண்ணிக்கை): கோவை மாவட்டத்தில் 659 (495), ஈரோட்டில் 518 (611), நீலகிரியில் 45 (51), திருப்பூரில் 621 (605), சேலத்தில் 532 (524), நாமக்கல்லில் 463 (394), தர்மபுரியில் 285 (233), கிருஷ்ணகிரியில் 410 (381) பேர் பலியாகியுள்ளனர்; 14 ஆயிரத்து 426 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்துகளை தடுப்பது குறித்து, மாதம் தோறும் மாவட்ட எஸ்.பி.,களுடன் ஆலோசனை நடத்தும் ஐ.ஜி., சுந்தரமூர்த்தி, உயிரிழப்புகளை தடுக்கும் வழிமுறைகளை அமல்படுத்த அறிவுறுத்துகிறார். இதற்கு சில பகுதிகளில் பலன் இருப்பினும், பெரும்பாலான பகுதிகளில் நிலைமை மோசமாகவே உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில், கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில்

உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.

இது குறித்து, போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:நெடுந்தூரம் இயக்கப்படும் பஸ், லாரி மற்றும் சரக்கு வாகனங்களின் டிரைவர்கள், போதுமான ஓய்வு எடுப்பதில்லை. மாற்று டிரைவர் வராத பட்சத்தில், மீண்டும் அதே டிரைவர் வாகனம் ஓட்டுகிறார். சாலையில் பயணிக்கும்போது, திடீரென தூக்கம் தழுவி, கணநேரத்தில் கண் அயர்ந்து, பெரும் விபத்தை ஏற்படுத்தி விடுகிறார். இதற்கு டிரைவர் மட்டுமின்றி, அவரை பணியில் ஈடுபடுத்தி, நிர்பந்தித்தவர்களும் பொறுப்பாவர். இலகுரக வாகன விபத்துகளால், ஒரே நேரத்தில் ஓரிரு உயிரிழப்புகள் நிகழ்கின்றன. கனரக வாகனங்களைப் போன்று 10, 15 என்ற எண்ணிக்கையில் உயிரிழப்புகள் நிகழ்வதில்லை. இலகு ரக வாகன விபத்துகளுக்கு காரணம், கவனக்குறைவு; சாலை விதிகளை பின்பற்றுவதில் அலட்சியம்.
தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், புதிதாக சாலைக்கு வருகின்றன. ஆனால், சாலைகள் மட்டும், 10 ஆண்டுக்கு முன் எப்படி இருந்ததோ, அதே தரமற்ற நிலையில், அதே எண்ணிக்கையில் தான் உள்ளன.விபத்துகளை தவிர்க்க, விழிப்புணர்வு ஒன்றே வழி

Advertisement

. அனைத்து இடங்களிலும் போலீசாரை நியமிப்பது சாத்தியமற்றது.வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு பிரசார "சிடி'கள், துண்டு பிரசுரங்களை வினியோகித்து வருகிறோம். போதையில், அதிவேகத்தில் ஓட்டுவோர், விதிகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதமும் விதிக்கிறோம். எனினும், "அவரவர் உயிருக்கு அவரவர் பாதுகாப்பு' என்பதை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே, விபத்துகளை தவிர்க்க முடியும்.இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KUNDRATTHU BAALAA - MARUTHAI,இந்தியா
04-டிச-201202:02:24 IST Report Abuse
 KUNDRATTHU BAALAA எழுத படிக்க தெரியாதவங்க/உண்மையான பொது அறிவு கூட ட்ரைவிங் லைசென்ஸ் குடுக்குறாங்க.. அப்பறம் அக்சிடென்ட் ஆகாம இருக்குமா.
Rate this:
Share this comment
Cancel
yila - Nellai,இந்தியா
04-டிச-201201:17:44 IST Report Abuse
yila டாஸ்மாக் மதுக்கடைகளும், குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுவதைக் கண்காணித்து தண்டனை தருவதற்குள்ள அமைப்புகள் முடங்கிக் கிடப்பதும் இதற்கு முக்கியமான காரணங்கள். எல்லாரையும் முந்தி நாம்தான் செல்ல வேண்டும் என்ற தேவையற்ற அவசரம், லஞ்சத்தில் மிதக்கும் RTO அலுவலகங்கள், கண்ணை மூடிக்கொண்டு ஓட்டுனர் உரிமம் வழங்குவதும், இறந்த பின், நிவாரணம் வழங்குவதோடு (அல்லது அறிவிப்பதோடு) அரசின் கடமை முடிந்து விட்டதாக எண்ணி, அதன் பின் எந்த நடவடிக்கைகளோ அல்லது விபத்து தடுப்பு முயற்சிகளோ எடுக்காததும் மிக முக்கிய காரணங்களே. கவனிக்குமா அரசு?
Rate this:
Share this comment
Cancel
c Siva - Raleigh,யூ.எஸ்.ஏ
03-டிச-201220:49:27 IST Report Abuse
c Siva என் வீட்ல சாவு விழாத வரை எனக்கு எவன் செத்தாலும் கவலை இல்லை , நான் லஞ்சம் வாங்குவேன்.அடுத்தவன் காசுல ஜாலியா இருப்பேன். காசு எனக்கு முக்கியம் அதுக்காக லஞ்சம் மட்டும் இல்ல பொண்டாட்டி பொண்ணை கூட வித்துருவேன்.....( இது தான் நம்ம நாட்டுல உள்ள 90 % அரசு ஊழியரோட நிலை )
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
03-டிச-201219:26:51 IST Report Abuse
g.s,rajan Over speeding,Over confidence,violation of basic road rules,highly Indisciplined and rash driving of all vehicles.Impatience, Negligence,Arrogant riding and driving of two wheelers,Four wheelers,Heavy vehicles and mostly Drunken driving leads to many Accidents and deaths.The vehicles are also not at all strong enough to resist the impacts of the accidents.Almost majority of the Vehicle parts are made of Plastic and others are of very light weight.The manufacturers reduce the weight of the vehicle for the fuel consumption and hence the accidents are more. Heavy fines and extensive education about driving among all is required to avoid accidents. g.s.rajan,chennai.
Rate this:
Share this comment
Cancel
Karthik - New York,யூ.எஸ்.ஏ
03-டிச-201216:17:31 IST Report Abuse
Karthik Foremost reason is overtaking recklessly. You can see it on the highway how trucks and buses overtake without any caution. That is the prime reason for head on collision. As per statistics, drunken driving accidents are lesser percent. The trucks do not have lights at the back. They are like dark objects moving in the highway. Crossing the highway recklessly is another reason. Speed may be the last reason.
Rate this:
Share this comment
Cancel
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
03-டிச-201214:04:40 IST Report Abuse
v.sundaravadivelu உலகம் அழிகிற வரை இந்த வாகன விபத்துக்கள் இனி மறையப் போவதில்லை... தனது அஜாக்கிரதைகளுக்காக வெட்கப் படுகிற உணர்ச்சியே மக்களுக்கு அற்று விட்டதாகத் தோன்றுகிறது.. பாவம் அப்பாவிப் பயணிகள் தான் பாவம் செய்த ஜீவன்கள்..
Rate this:
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
03-டிச-201213:16:43 IST Report Abuse
Ashok ,India ரோட்டோரம் இருக்கும் மது கடைகளால் விபத்து அதிகம் ஏற்படுவதாக தோன்றுகிறது. தரமற்ற சாலைகள், வண்டிகள் ஆட்களை ஏற்றுவதற்கு என தனியாக இடம் வாங்க அரசு முடிவெடுக்க வேண்டும் .சாலைகளை விரிவு படுத்த விவசாய நிலங்களை விலைக்கு வாங்கும் அரசு பொது மக்களின் சீரான தடை அற்ற போக்குவரத்திற்கு ஒவ்வரு நகரத்திலும் குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் இடதுபுறம் பேருந்து நிறுத்தி ஆட்களை ஏற்ற இடங்களை அரசு வாங்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
KMP - SIVAKASI ,இந்தியா
03-டிச-201212:55:00 IST Report Abuse
KMP கவனம் இல்லாமல், போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டினால் விபத்து கண்டிப்பாக ஏற்படும். 2002 இல் எனது உறவினர் ஒருவர் விபத்தில் சிக்கி இறந்தார் . காரணம் அவர் மனஉளைச்சல் மற்றும் அந்த அரசுப் பேருந்தும் அவரை கவனிக்க வில்லை ..... பொதுவாக குடி போதை தான் மிக முக்கிய காரணம் /... நன்கு கவனமாக ஓட்டினால் விபத்தை தவிர்க்கலாம் .
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
03-டிச-201211:05:44 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar சாலை விபத்துக்கள் முக்கிய காரணம்..,வாகன ஓட்டிகள் கவன குறைவே..,அணைத்து வாகன ஓட்டிகள் கண்டிப்பாக தலை கவசம் தம் வாகனகளுக்கு ஏற்ப அணியவேண்டும். இதனால் வாகனம் ஓட்டிகள் தாம் வாகனம் ஓட்டுகிற கவனம் ஏற்படும்...,அனைவருக்கும் விபத்தில்ல.., சாலை பயணம் அமையும் - பூபதியார்
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
03-டிச-201209:36:38 IST Report Abuse
pattikkaattaan //சாலைகள் மட்டும், 10 ஆண்டுக்கு முன் எப்படி இருந்ததோ, அதே தரமற்ற நிலையில், அதே எண்ணிக்கையில் தான் உள்ளன.... // இதற்க்கு கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த இரு திராவிட கட்சிகள்தான் முழு பொறுப்பு ... மக்கள் வரியாக கட்டும் பணமெல்லாம் எங்கே போகிறது ?... கோவை மாநகராட்சி எல்லைக்குள் சாலைகள் மிக மோசம் .. கிராமப் பகுதிகளில்கூட சாலைகள் நன்றாக உள்ளன ... இரு கட்சிகளும் மாறி மாறி கொள்ளையடிக்கவே முனைகின்றன ... மக்கள் பாவம் ...
Rate this:
Share this comment
Samir - Trichy,இந்தியா
03-டிச-201221:10:45 IST Report Abuse
Samirmr sagayanathan, ஊருக்கு போயி ரொம்ப நாளாச்சி போலிருக்கு, கொஞ்சம் ஊரு பக்கம் எல்லாம் போயிட்டு வாங்க. ஊரு எல்லாம் ரொம்ப மாறி போயிருச்சி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.