girl sucide on the news marrage | ரகசிய திருமணம் செய்த எம்.பி.ஏ., மாணவி மாடியிலிருந்து குதித்து இறந்த பரிதாபம் | Dinamalar

ரகசிய திருமணம் செய்த எம்.பி.ஏ., மாணவி மாடியிலிருந்து குதித்து இறந்த பரிதாபம்

Added : டிச 03, 2012 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மும்பை: காதலனை ரகசிய திருமணம் செய்த, எம்.பி.ஏ., மாணவியை, இரு வீட்டாரும் ஏற்றுக் கொள்ளாததால், மாடியிலிருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்டார்.மும்பை பல்கலைக் கழகத்தில், எம்.பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர், சோனல் பகாடே, 24. சாண்டாகுரூஸ் கிழக்கில், வகோலா என்ற இடத்தில், தன் தாய், மாயாவுடன், அடுக்கு மாடி கட்டடம் ஒன்றில் வசித்து வந்தார். கணவரை பிரிந்து, மகளுடன் வசித்து வந்த மாயா, மருத்துவமனை ஒன்றில், செவிலியராக பணியாற்றி வருகிறார்.ஒரு வாரம் முன், சோனல், தன் காதலரை, ரகசிய திருமணம் செய்து கொண்டார்; திருமணமானதை, தாயிடம் சொல்லவில்லை. தற்செயலாக ஒருநாள், மகள் நெற்றியில் குங்குமம் அணிந்திருப்பதையும், சேலைகளை அடிக்கடி உடுத்த துவங்கியதையும் பார்த்த தாய், மாயா, மகள் சோனலிடம் விசாரித்தபோது, தனக்கு திருமணமான தகவலை, சோனல் தெரிவித்தார்.இதனால், அதிர்ச்சி அடைந்த மாயா, மகளை, வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என கண்டிப்பாக உத்தரவிட்டாள்; மொபைல் போனையும் பிடுங்கி வைத்தாள். இதனால், தாய்க்கும், மகளுக்கும் சண்டை ஏற்பட்டது.மூன்று நாட்களுக்கு முன், தன் காதல் கணவர் வீட்டுக்கு சென்ற சோனலுக்கு, அங்கும், கடும் கண்டனம் எழுந்தது. காதலனின் பெற்றோர், அந்தப் பெண்ணை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். "ரகசிய திருமணம் செய்து கொண்டது ரகசியமாகவே இருக்கட்டும்; எங்கள் மகனை விட்டுச் சென்று விடு' என்று கூறி, அவர்கள், அந்தப் பெண்ணை, வீட்டை விட்டு துரத்தினர்.இதனால், நிராதரவாக உணர்ந்த சோனல், நேற்று முன்தினம், தான் குடியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பின், ஆறாவது மாடியிலிருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்டார்.முன்னதாக, தன் பாட புத்தகத்தில், கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்த சோனல், அதில், தன் செயலுக்காக மன்னிப்பு கேட்டிருந்தாள்."தெரியாத்தனமாக நான் செய்த தவறால், பலருக்கும், பலவிதங்களில் கஷ்டம் ஏற்படுத்தி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்' என எழுதி வைத்து, மாடியிலிருந்து குதித்து, உடல் சிதறி பலியானார்.இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படிக்கும் காலத்தில், தேவையற்ற விவகாரங்களில் மனதை அலைபாய விட்டதால், சோனலுக்கு நேர்ந்த கதி, அவருடன் படிக்கும் பிற மாணவியருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களும், மீளாதுயரில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
7malai - Chennai,இந்தியா
04-டிச-201213:06:52 IST Report Abuse
7malai திருட்டுத்தாலி கட்ட மட்டும் துணிந்தவன், நிராதரவாக வந்த பெண்ணுக்கு அடைக்கலம் கொடுக்கத்தவறியது ஒரு கயமைத்தனம்.
Rate this:
Share this comment
Cancel
malick batcha - chennai,இந்தியா
04-டிச-201212:51:22 IST Report Abuse
malick batcha நாம் முதலில் நாம் மனசாட்சி நெருடல் ஏற்படுகிறது என்று உணர்தாலும் , மற்றவர் முன்னில்லை பகிரமுடியாது என்று உணரும் போதும் , நாம் தவறின் எல்லை போயி கொண்டு இருக்கிறோமே என்று உணரவேண்டும் . மேலும் சந்தேகம் ஒரு விசயத்தில் ஏற்படும்போது இது சரியா தவறா என்று முடிவெடுப்பதை விட அதில் ஒதிங்கி இருபது நாம் தவறுகள் செய்வதை விட்டு தடுக்கும் . எப்போதும் , தினம் பயந்து வாழ்வதை விட தைரியமாக பெற்றோர்களிடம் கூறுவது இது போன்று சம்பவகளை தடுக்க செய்யும் . கோலை தினம் சாகிறான் , வீரன் ஒருமுறை சாகிறான் ....ஔரங்கசிப். . திருமணம் செய்து வாழ துணிந்த பெண் வீட்டில் சொல்லிருகவேண்டும் , மற்றும் பெற்றோர்கள் இதுபோன்று சம்பவம் ஏற்படும்போது உடன் மொத்த எதிர்ப்புகள் காட்டாது, கொஞ்சம் கொஞ்சம் பக்குவமாய் தான் முடிவெடுக்க வேண்டும் . இது நமது சமுக சூழல் சினிமா , நண்பர்கள் , எல்லாம் இது சுவாரசியமாய் நினைக்கும் வரை இதுபோன்று நிகழ்வு முற்றுபெராது . மாலிக்
Rate this:
Share this comment
Cancel
srinivasan sulochana - nsw2147,ஆஸ்திரேலியா
04-டிச-201204:06:55 IST Report Abuse
srinivasan sulochana மிகவும் துரதிர்ஷ்டமான சம்பவம். அவள் தாய் தனக்கு ஏற்பட்ட அவல வாழ்க்கையை நினைத்து ஒரு எச்சரிக்கையாக கண்டித்திருக்கலாம். இளம்பெண்கள் கல்யாணம் முடிப்பதிலாகட்டும், தங்களை மாய்த்து மரிப்பதிலாகட்டும் அவசரப்படுகிரார்கள். உணர்ச்சி வசப்படுகிறார்கள். கல்லூரிகளில், பள்ளிகளில் இதுகுறித்து அடிக்கடி ஆலோசனைகள் வழங்குவது நலம். .
Rate this:
Share this comment
Cancel
KUNDRATTHU BAALAA - MARUTHAI,இந்தியா
04-டிச-201202:06:21 IST Report Abuse
 KUNDRATTHU BAALAA உஷார்.. பெரும்பாலான காதல் திருமணத்தால் idhu தான் கதி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை