ரோடக்: அரியானாவில், தெருவோரம் வீசப்பட்டு, குற்றுயிரும், குலை உயிருமாக கிடந்த, பச்சிளம் குழந்தையை மீட்ட பெண், எம்.எல்.ஏ., முதலுதவி சிகிச்சை அளித்து, காப்பாற்றியுள்ளார்.பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில், அரியானாவும் ஒன்று. எனினும், அந்த மாநிலத்தில், ஆண் - பெண் பிறப்பு விகிதம் சமமாக இல்லை. பெண் குழந்தைகள் மீது வெறுப்பு நிலவுவதே, இதற்குக் காரணம். இந்தப் பிரச்னை, நீண்ட காலமாக இருந்ததால், இப்போது அந்த மாநிலத்தில், பெண்கள் மிகவும் குறைந்து விட்டனர். அந்த மாநில ஆண்கள், பெண்கள் மிகுந்த கேரளாவில் இருந்து, மணமகளை தேர்ந்தெடுத்து செல்லும் நிலை உள்ளது. பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படும் கொடூரம், அரியானாவில் இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை என்பது, சமீபத்திய உதாரணம் மூலம் விளங்கியது.ரோடக் நகரத்திற்கு அருகில் உள்ள, செம்பால் என்ற கிராமத்தில், நேற்று முன்தினம், புதர் ஓரம், பச்சிளம் பெண் குழந்தை ஒன்று, அனாதையாக கிடந்தது. நீண்ட நேரமாக அங்கேயே கிடந்ததால், கதறிய அந்த குழந்தை, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.ஏராளமானோர் சுற்றி நின்று வேடிக்கை பார்த்த போதிலும், அந்தக் குழந்தையை மீட்டு, மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முன்வரவில்லை.அப்போது, அந்த தொகுதியின் பெண், எம்.எல்.ஏ., சகுந்தலா காடக், தற்செயலாக அங்கே வந்தார். பிறந்த சில மணி நேரமே ஆன, பெண் குழந்தையைக் கண்ட அவர், அதை எடுத்து, முதலுதவி சிகிச்சை கொடுக்கத் துவங்கினார். எம்.எல்.ஏ., ஆவதற்கு முன், அவர், செவிலியராக பணியாற்றியுள்ளார் என்பதால், இறக்கவிருந்த குழந்தையை காப்பாற்றி, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார்.இச்சம்பவம், எம்.எல்.ஏ.,வுக்கு புகழ் சேர்ப்பதாக அமைந்தாலும், பெண் குழந்தை கொலை, அரியானாவில் தலைவிரித்து ஆடுவதைக் காட்டுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.