புதுடில்லி :"காவிரி நீரை, தமிழகத்துக்கு திறந்து விடும் விஷயத்தில், காவிரி கண்காணிப்பு குழு, எந்த முடிவும் எடுக்காதது, கவலை அளிக்கிறது. கர்நாடகாவில், அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், கண்காணிப்பு குழு, இந்த போக்கை பின்பற்றுகிறது' என, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் இடையே, காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, நீண்ட காலமாக பிரச்னை உள்ளது. இது தொடர்பாக, இரு மாநில அரசுகள் சார்பிலும், சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுப்படி, இரு மாநில முதல்வர்களும், சமீபத்தில் சந்தித்துப் பேசினர். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. "தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது' என, கர்நாடகம் கைவிரித்து விட்டது.
இது தொடர்பான விவரங்களை, தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து, "இரு மாநில அரசுகளும், தங்களிடம் உள்ள தண்ணீர் இருப்பு, தண்ணீர் தேவை குறித்து, நம்பத் தகுந்த ஆவணங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.இரு மாநில அரசுகளும், அறிக்கை தாக்கல் செய்தன. இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள், டி.கே.ஜெயின், மதன் பி லோகூர் தலைமையிலான பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான, மூத்த வக்கீல், வைத்தியநாதன், வாதிட்டதாவது: விவசாய காலம் எது, பருவ மழைக் காலம் எது என்பது, காவிரி கண்காணிப்பு குழுவான, சி.எம்.சி.,க்கு நன்றாக தெரியும். ஆனாலும், வறட்சி காலத்தில், நதி நீரை பகிர்ந்து கொள்வது பற்றிய கொள்கையில், சி.எம்.சி., வேண்டுமென்றே, எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறது.தென் மேற்கு பருவமழை குறைவாக பெய்ததால், தமிழக விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை திறந்து விடும்படி, கர்நாடகாவுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இது தொடர்பாக, சி.எம்.சி., சார்பில், கர்நாடகாவுக்கு, எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை; தேவையான நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. சி.எம்.சி.,யின் இந்த போக்கிற்கான, உண்மையான காரணம் எங்களுக்கு தெரியவில்லை. கர்நாடகாவில், அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், சி.எம்.சி., இந்த போக்கை பின்பற்றுகிறது என, நினைக்கத் தோன்றுகிறது.இவ்வாறு, வைத்தியநாதன் கூறியதும், குறுக்கிட்ட நீதிபதிகள், "காவிரி நதி நீர் பிரச்னையில், இந்த விவகாரத்தை இழுக்க வேண்டாம்'என்றனர்.
இதையடுத்து, தொடர்ந்து, வைத்தியநாதன் கூறியதாவது:ஆனால், இது தான் உண்மை. வறட்சி காலத்தில் காவிரி நீரை பங்கிடுவது குறித்து, ஜனவரி, 31ம் தேதிக்கு பின், முடிவு செய்து கொள்ளலாம் என, கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது.அதற்குள், டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள, சம்பா நெற்பயிர், முழுவதும் பாதிக்கப்பட்டு விடும். சம்பா சாகுபடியை காக்க, அடுத்த, 15 நாட்களுக்கு, குறைந்தது, 30 டி.எம்.சி., தண்ணீராவது தேவைப்படுகிறது.இவ்வாறு, வைத்தியநாதன் கூறினார்.
இதைத் தொடர்ந்து, கர்நாடகா வழக்கறிரும், தன் வாதத்தை எடுத்து வைத்தார்.
அவர் கூறுகையில்,""அணைகளில், எங்களுக்கு தேவையான தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இந்த சூழ்நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டால், எங்களின் நிலை என்னாவது'என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை, இன்றைய தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
This is totally mismanaged by our CM. When she knows that we won't get enough water for the Samma harvest, she still gave false hope to farmers and they went ahead by getting loans etc., Now more than 30 TMC water wasted from mettur for nothing and on the other side farmer&39s are pushed into debt by our great CM. I can only think about Thuklak.
தமிழன் எல்லாம் ஒற்றுமையா இல்லாமல் ஜாதி, மதம், அரசியல் கட்சி, என்று பிரிந்து கிடக்கும் வரை ஒன்னும் செய்யமுடியாது. இது மத்திய அரசுக்கு,கோர்டுக்கு, கணகாணிப்பு குழுவுக்கு, எல்லாம் சாதகமா இருக்கு. மற்ற மாநிலத்தில் எல்லாம் இப்படி வேறுபாடுகள் இருந்தாலும் இது போன்ற பொது பிரச்சனைகளுக்கு ஒன்று பட்டு நிற்கின்றார்கள் இங்க என்று அந்த நிலை வருதோ அன்று தான் நல்லது நடக்கும். இங்கு இன்னும் அணைத்து கட்சி கூட்டம் ஒரு முறை கூட கூட்டப்படவில்லை இதில் இருந்தே நம் மாநில மனநிலையை எல்லாரும் அறிந்து கொள்வார்கள்.
Mr Pugaz, you are absolutely wrong. In karnataka, either BJBor congress whoever may in position they will take the same stand on this issue.. Now BJB is denying what about mr krishna. he is congress . he also against us only pleaded with central govt. so like us ( tamil nadu) they are not fools. here karunanithi, is done a himalayan bler.that he has not renewned the agreement in his tenure. because he would like to keep all his relative safe in bangalore and assets also safe in karnataka.. this is the bear fact....
உனக்கு ஒன்னு தெரியுமா? அங்கு பாஜக தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்வதற்கு காரணம் அவனது அடாவடித்தனம் கிடையாது..அவன் தருவதற்கு தயாராகத்தான் இருக்கிறான்... ஆனால் இந்த சக்கர சாம்பார் சாப்பிடுரவனுகளுக்கு (கன்னடக்காரன் சாம்பார்ல சக்கர வெல்லம் கலப்பான்) மூளையே கிடையாது.. இவனுகள இங்க எடியுரப்பா (முன்னாள் பாஜக கட்சி உறுப்பினர், முன்னாள் கர்நாடக முதல்வர்) தன்னுடைய அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகிறான்.. அதில் இந்த பிரச்சனையும் ஒன்று.....
கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளவர்கள் ஓட்டிற்காக விவசாயிகளையும் BJB களையும் பகைத்துக்கொள்ள முடியாது ...தனது மக்களிடம் சரியான நேரத்தில் (அங்கு நீர் அதிகம் இருக்கும்போதே) விளக்கம் தந்து நீரை திறந்து விட்டிருக்க வேண்டும்...இல்லாத சமயத்தில் கேட்பதும் அல்லது திறப்பதும் அந்த மக்கள் முன் எதிர்பார்க்க முடியாது ... ...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.