Take action against those pursuing caste politics: Karunanidhi | ஜாதி வெறியை கிளப்புகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : கருணாநிதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜாதி வெறியை கிளப்புகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : கருணாநிதி

Updated : டிச 05, 2012 | Added : டிச 03, 2012 | கருத்துகள் (215)
Advertisement
ஜாதி வெறியை கிளப்புகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : கருணாநிதி,Take action against those pursuing caste politics: Karunanidhi

சென்னை:""ஜாதி அமைப்புகளை கூட்டி, ஆதிதிராவிடர்களுக்கு எதிராக, பா.ம.க., அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அது, அபாயகரமான அரசியல். ஜாதி வெறியைக் கிளப்புகிறவர்கள், யாராக இருந்தாலும், அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி:
தி.மு.க., ஆட்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கு, தனியாக ஒரு வாரியமே அமைக்கப்பட்டது. அந்த வாரியம், இப்போது இருக்கிறதா? இல்லையா? என்பதே தெரியவில்லை. பா.ம.க., ஜாதி அமைப்புகளை கூட்டி, தலித்களுக்கு எதிராக அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அது அபாயகரமான அரசியல். ஜாதிப் பிரச்னைகளை கையில் எடுப்பது என்பது, தீக்குண்டத்திலே இறங்குவது போன்ற அபாயகரமானது. ஜாதி வெறியைக் கிளப்புகிறவர்கள், யாராக இருந்தாலும், அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பது தான், எங்கள் கருத்து, வேண்டுகோள்.

தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள, காவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்னையின் தொடர்ச்சியாக, இரு மாநில மக்களுக்கிடையே, தோன்றிய கசப்புணர்ச்சி, பகை உணர்ச்சியாக உருவாகிடக்கூடாது. கர்நாடக பா.ஜ., ஆட்சியாளர்களும், தமிழக அ.தி.மு.க., ஆட்சியாளர்களும் எந்த நிலையிலும் எள்ளளவும் இடமளித்து விடக் கூடாது. சட்டம்-ஒழுங்கை தக்க முறையில் காத்திடவும், கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கும், தமிழகத்தில் வாழும் கன்னடர்களுக்கும் எந்தவிதமான இடைஞ்சலும், ஏற்படாத அளவிற்கு, நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தூதரகம் விசாரணை:கருணாநிதியின் மற்றொரு அறிக்கை:கார்த்திகை தீபத்தை ஒட்டி, இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில், வீடுகளில் ஏற்றி வைத்த விளக்குகளையும், கூட சிங்கள ராணுவத்தினர் அடித்து நொறுக்கி, இலங்கைத் தமிழர்கள் மனதை காயப்படுத்தியுள்ளனர். யாழ் பல்கலைக் கழகத்தில் நடந்த தாக்குதலைக் கண்டித்து, பல்வேறு பல்கலைக் கழகங்களில் காலவரையறையற்ற வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியை அமெரிக்க தூதரகம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இதுபற்றி இந்தியத் தூதரகமும் விசாரித்து, இந்திய அரசிடம் தெரிவித்து, அரசின் சார்பில், வன்மையான கண்டனத்தை, இலங்கை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (215)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
v. sundaramoorthy - Ariyalur,இந்தியா
06-டிச-201213:25:38 IST Report Abuse
v. sundaramoorthy அப்படியானால் சாதி சான்றிதல்களை ரத்து செய்து உத்தரவிட மத்தியரசுக்கு பரிந்துரை செய்யுங்கள், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுகளை எல்லாம் தூக்கி எரிந்து ஏழைகளின் வாழ்க்கை தரம் மேம்பட திட்டம் தீட்டுங்கள். உங்கள் ஆட்சி காலத்தில் ஏன் இதை செய்யவில்லை. பின் குறிப்பு: ராமதாசுக்கும் திருமாவளவனுக்கும் கூட்டணியில் சேர்க்காமல் இருக்க கூடாது.
Rate this:
Share this comment
Cancel
balagiri - Chennai,இந்தியா
04-டிச-201223:31:39 IST Report Abuse
balagiri அப்போ முதல்ல உள்ள போகவேண்டிய நபர் நீதான்
Rate this:
Share this comment
Cancel
SUDHAKAR N - vellore,இந்தியா
04-டிச-201222:10:46 IST Report Abuse
SUDHAKAR N தினமும் காமெடி செய்வதியே ஒரு பொழுது போக்க வச்சி இருக்காரு நம்ம....இல்ல, இல்ல இலங்கை தமிழின தலைவரு....
Rate this:
Share this comment
Cancel
kumarkv - chennai,இந்தியா
04-டிச-201220:44:32 IST Report Abuse
kumarkv Brahamins should take militancy in line with Sardarjis, so that they can be respected by other Hindus.
Rate this:
Share this comment
Cancel
VENKAT - chennai,இந்தியா
04-டிச-201220:25:12 IST Report Abuse
VENKAT டாஸ்மாக் கினால் ஒரு தலைமுறையே வீணாப்போச்சி . Mid NIGHT Masala வினாலும் ஒரு தலைமுறை குட்டிச்சுவராகி விட்டது.
Rate this:
Share this comment
Cancel
k.rajendran - LA,யூ.எஸ்.ஏ
04-டிச-201220:16:10 IST Report Abuse
k.rajendran கீழ வெண்மணி புகழ் தி மு க தலைவர் .
Rate this:
Share this comment
Cancel
Alaat Aarumugam - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
04-டிச-201219:53:39 IST Report Abuse
Alaat Aarumugam கடைசியா நீ என்ன சொல்லவர. நங்கள் எல்லோரும் அடித்துக்கொள்ளவேண்டும், அதுதான் உன் விருப்பம். ஜாதிய வைத்து அரசியல் பொழப்பு நடத்துருது நீ தான்.
Rate this:
Share this comment
Cancel
thambee - HYDERABAD,இந்தியா
04-டிச-201219:53:30 IST Report Abuse
thambee சாதி வெறிய தமிழ்நாட்டில் எரிய வைத்த புண்ணியவான் இப்படியும் பேசுவார் ,அப்படியும் பேசுவார்.ஏனெனில் தமிழ்நாடு மக்களுக்கு இலவசம் என்ற வார்த்தையை உயிர் மூச்சாக்கி அவர்களை ஒன்றுக்கும் உருப்படாமல் செய்து அரசியல் வாதிகள் பின்னும் நடிகர்கள் பின்னும் செல்ல வைத்ததே இவர்தான்.அவர் சொலவடை கேட்க வேண்டியது தமிழ்நாட்டு மக்களின் கடமை. குடும்பம் தேவையில்லை நாடு தேவையில்லை குடியும் இலவசங்களும் போதும்
Rate this:
Share this comment
Cancel
vandu murugan - chennai,இந்தியா
04-டிச-201219:16:17 IST Report Abuse
vandu murugan ஐயா தலைவர் சொல்றதயும் கொஞ்சம் கேளுங்க பாஸ்ட் இஸ் பாஸ்ட் இப்போ சொல்றதை கேளுங்க அவர் ஒரு அருமையான தலைவர் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று வாழ்பவர் உத்தமர்
Rate this:
Share this comment
Cancel
raj tbm - telok blangah,சிங்கப்பூர்
04-டிச-201219:06:48 IST Report Abuse
raj tbm விசசெடிகளை வளர்த்துவிட்டு வளர்த்தவர்களே இப்போது வருந்தி பயனென்ன
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை