தி.மு.க.,வுடன் தேர்தல் கூட்டணியா? "அமையலாம்' என்கிறார், விஜயகாந்த்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கோவை :"தி.மு.க.,வுடன் தேர்தல் கூட்டணி அமைக்கப்படுமா' என்ற கேள்விக்கு பதிலளித்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், "அமையலாம். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. இப்போதே எல்லாவற்றையும் சொல்ல முடியுமா' என்று, பதிலளித்தார்.

முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட தே.மு.தி.க., மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ., பார்த்திபன், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக, கட்சி தலைவர் விஜயகாந்த் நேற்று கோவை வந்தார்.

கோவை மத்திய சிறை வாசலில், நிரூபர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது:
ஆயிரம் பொய் வழக்குகள் போட்டாலும், அவற்றை எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம். தே.மு.தி.க., வளர்ச்சி அடைந்து வருவதை, கட்சியினர் மீது போடப்படும் பொய் வழக்குகள் மூலம் அறியலாம்.தமிழகம் முழுவதும் "டெங்கு' காய்ச்சல் பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தாமல், "மர்ம காய்ச்சல்' என்று கூறி வருகின்றனர். இதுகுறித்து கோர்ட் கேட்கும் கேள்விகளுக்கு, ஜெயலலிதாவால் பதில் சொல்ல முடியவில்லை.தமிழகம் முழுவதும் நிலவும் கடுமையான மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். "மின்வெட்டுக்கு மத்திய அரசு தான் காரணம்' என, கூறுவது ஏற்புடையதல்ல. மக்களிடம் ஓட்டு கேட்கும் போது, "விரைவில் மின்வெட்டு தீர்க்கப்படும்' என்று கூறித்தான், ஓட்டு கேட்டனர்.

காவிரி நதிநீர் பிரச்னையில், இரு மாநில அரசுகளும் சுமூகமாக பேசி நல்ல தீர்வு காண வேண்டும். இந்திய இறையாண்மை பாதிக்காத வகையில், மாநிலங்களிடையே உள்ள நல்லுறவு கெட்டுப்போகாத வண்ணம், அந்த தீர்வு இருக்க வேண்டும். இப்பிரச்னைகளை தவிர்க்க, நாட்டிலுள்ள அனைத்து நதிகளையும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, விஜயகாந்த் கூறினார்.

"அடுத்து வரும் தேர்தலில், தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி அமையுமா' என, நிரூபர்கள் கேட்டதற்கு, ""அமையலாம் சார். தேர்தலுக்கு இன்னும் ரொம்ப நாட்கள் உள்ளன. இப்போதே உங்களுக்கு எல்லாத்தையும் சொல்ல முடியுமா? இன்னைக்கே தெரிஞ்சுக்கணுமா...,'' என, சிரித்துக் கொண்டே, கூறிச்சென்றார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (123)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சதீஷ் துளசிங்கம் . - chennai,இந்தியா
08-டிச-201212:18:18 IST Report Abuse
சதீஷ் துளசிங்கம் . திமுக உடன் தேமுதிக கூட்டணி போனால் இன்னொரு ராமதாஸ், வைகோ போல் விஜயகாந்தும் டம்மி ஆக்கப்படுவார். தேமுதிக தனி கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Raj - DOHA,கத்தார்
05-டிச-201200:55:40 IST Report Abuse
Raj all opposition parties and peoples to teach a lesson for our CM in parliment elections.you will get good respect from M.K Right decision in wrong time. if you take this decission in assembly election this govt may not be in power . tamil nadu will not be face this much of powercut
Rate this:
Share this comment
Cancel
SUDHAKAR N - vellore,இந்தியா
04-டிச-201223:10:10 IST Report Abuse
SUDHAKAR N போகிற இடமெல்லாம் மின்சாரம் இல்லை என்று சொல்லும் இவர்.... மின்சாரம் என்ன குஷ்பு இட்லியா.... உடனே வாங்குவதற்கு...? குடிக்காரன் பேச்சு, பொழுது விடிந்தால் போச்சு...அது போல தான்... அன்று மக்களோட கூட்டணி, இன்று இலங்கை தமிழின தலைவரோட கூட்டணியா? ஏதோ முதல்வரால் எதிர் கட்சி அந்தஸ்தாவது கெடைச்சது... அடுத்த தேர்தல்ல தி.மு.க காணமல் போன மாதிரி போய்விட போரிங்கோ பார்த்து... நல்லவர்களுடன் சம்பத்தும் இணைந்து விட்டார்.... இனி அம்மா தான் அடுத்த பிரதமர்.... தமிழகத்தின் நிலைமை மாறும்...அப்போது நீங்கள் அரசியலில் இருப்பிர்களோ....? பண்ருட்டியாரை கவனமாக பார்த்து கொள்ளுங்கள்....அவரும் ஏதோ சரி இல்லாமல் இருப்பதாக கேள்வி பட்டேன்....
Rate this:
Share this comment
chellamuthu - thanjavur,இந்தியா
05-டிச-201217:08:29 IST Report Abuse
chellamuthuஇதல்லாம் ஓவரா தெரில தமிழ்நாடு படுற வேதனை போதாதா சுதாகர் .. ...
Rate this:
Share this comment
Cancel
Britto A - Thanjavur,இந்தியா
04-டிச-201222:35:50 IST Report Abuse
Britto A உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவோர் மத்தியில் கேப்டன் போல மனதில் பட்டதை வெளிப்படையாக பேசவும் நடத்து கொள்ளவும் அரசியல்வாதி இல்லை... அதிகம் கோவம் படுவரே தவிர இவர் ஒரு வெகுளி... நாட்டு பிரச்சனைகளை திமுதிக கேட்பது முதலமைச்சருக்கு பொறுக்க முடியாமல்.. அவர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு கவனத்தை திருப்புகிறார்.. எப்பொழுது ஆட்சிக்கு வந்தாலும் எதிர் கட்சிகளை வெளியேற்றிவிட்டு தன் கட்சியினரை மட்டும் வைத்துகொண்டு தான் இவர் அறிக்கை வெளியிடுவதும்.. தீர்மானம் நிறைவேற்றுவதும் செய்வார்.. இளைஞர் கள் ஆதரவு இருக்கும் வரை தே.மு.தி.க வை அழிக்க முடியாது... கூட்டணி என்பது தவிர்க்க இயலாதது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Balaji Gopalan - Nouakchott,மொரிட்டானியா
04-டிச-201221:10:13 IST Report Abuse
Balaji Gopalan கேப்டனு உங்க கல்யாண மண்டபத்தை யாரு பா இடிசாங்கோ ராசா ... தமாசு தமாசு ..
Rate this:
Share this comment
Cancel
p.saravanan - tirupur,இந்தியா
04-டிச-201220:27:10 IST Report Abuse
p.saravanan பொறுமை கடலினும் பெரியது , பொறுத்தார் பூமி ஆள்வார் ,
Rate this:
Share this comment
Cancel
Mustafa - Dammam,சவுதி அரேபியா
04-டிச-201220:06:18 IST Report Abuse
Mustafa திராவிட மற்றும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகங்கள்தான் ஆண்டு கொண்டிருகின்றன. திராவிட முன்னேற்றத்தில் இவர்கள்தான் முழு அக்கறையுள்ளவர்கள். புரியவில்லையா மலையாளி கன்னடன் தெலுங்கன் எல்லோரும் திராவிடந்தானய்யா அண்ணா: தெலுங்கு, கருணாநிதி: தெலுங்கு, MGR : மலையாளம், JJ : கன்னடம், குனியக்குனிய குட்டு வாங்கவே பிறந்தவன் டாஸ்மாக் தமிழன் மட்டும்தான்
Rate this:
Share this comment
Cancel
raj tbm - telok blangah,சிங்கப்பூர்
04-டிச-201219:11:49 IST Report Abuse
raj tbm தேர்தல் வரப்போகிறது காமெடியன்கள் கவனம்
Rate this:
Share this comment
Cancel
Amalraj Penigilapati - Castries,செயின்ட் லூசியா
04-டிச-201218:10:29 IST Report Abuse
Amalraj Penigilapati ஜெயா இப்போது இருக்கும் நிலையில் 1996 மீண்டும் திரும்பும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விஜயகாந்த் கலைஞருடன் சேர்ந்தால் அம்மாவிற்கே வைப்பு தொகை திரும்ப கிடைக்குமா என்பது சந்தேகமே. இந்த கூட்டணி உருவாகாமல் இருக்க இந்த பெண் எதுவும் செய்வார்.
Rate this:
Share this comment
Cancel
Vinoth Kumar - Chennai,இந்தியா
04-டிச-201217:41:49 IST Report Abuse
Vinoth Kumar "என்னப்பா, நான் சரியாத்தான பேசுறேன்?"
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்