நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம்
இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலைக்கு வெளியூரில் இருந்து அனுமதி பெறாமல் வந்த
கரும்பு லாரிகளை வேளாண்மைத் துறை அதிகாரிகள் மறித்ததால் பரபரப்பு
நிலவியது.நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை நிர்வாகம், கடந்த சில
ஆண்டுகளாக வெளியூரில் இருந்து வரும் பதிவு செய்யாத பல லட்சம் டன் கரும்பை,
அரய் அனுமதி பெறாமல் எடுத்து வருகின்றனர். வெளியூர் கரும்பு வருவதால்
பதிவு செய்த விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் அறுவடை செய்ய முடியவில்லை.
இதனால் வெளியூர் கரும்பை எடுத்துவர, உள்ளூர் விவசாயிகள் எதிர்ப்பு
தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த வாரம் அரய் அனுமதி பெறாத கரும்பை
ஏற்றி வந்த லாரிகளை விவசாயிகள் பிடித்து வேளாண்மை துறை அதிகாரிகளிடம்
ஒப்படைத்தனர். உதவி வேளாண்மை இயக்குனர் சந்திரராய், அனுமதி பெறாமல் கரும்பு
ஏற்றி வந்த ஆறு லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நெல்லிக்குப்பம்
போலீசார் புகார் செய்தார்.
ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுபற்றி கலெக்டரிடம் விவசாயிகள் புகார் கூறினர். அனுமதி பெறாமல் வந்த
கரும்பு லாரிகளை பிடிக்க ஏன் நடவடிக்கை எடுக்க வில்லையென விளக்கம் கேட்டு
உதவி வேளாண்மை இயக்குனர் சந்திரராய்க்கு கலெக்டர் ராஜேந்திர ரத்னு நோட்டீஸ்
அனுப்பினார். நேற்று அனுமதியின்றி கரும்பு ஏற்றி வந்த 10க்கும் மேற்பட்ட
லாரிகளை வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரராய், அலுவலர் ராமதாஸ் ஆகியோர்
மறித்தனர்.அதைத் தொடர்ந்து போலீசில் புகார் செய்தனர். இம்முறையும் போலீசார்
நடவடிக்கை எடுக்கா விட் டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக
விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.