சென்னையில் கனமழை : விமானம், ரயில், பஸ் போக்குவரத்து பாதிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

தாம்பரம் : சென்னையில் கனமழை பெய்ததையடுத்து, விமானம், ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை மற்றும் புற நகர் பகுதியில் நேற்று மாலை, 7:00 மணி முதல் கனமழை பெய்தது. இதனால், மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்து சேரும் மற்றும் புறப்படும் விமானங்கள், 30 நிமிடங்கள் தாமதமாகின.

சர்வதேச விமான நிலைய முனையத்தின், குடியுரிமை பிரிவு அலுவலகத்தின் கூரையில் மழைநீர் கசிந்ததால், பயணிகளின் உடமைகளை சோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. விமான நிலைய ஓடு பாதை முழுவதும் மழைநீர் தேங்கியது. பரங்கிமலையில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் பாதையில், மழைநீர் தேங்கியதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன. சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில், மழைநீர் மூன்று அடி உயரத்திற்கு தேங்கி நின்றதால், பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் வடக்கு கடலோரம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம், தெற்கு மத்திய வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த
குறைந்த காற்றழுத்த தாழ்வு, தற்போது தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் , தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரம் வரை பரவி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் விடிய விடிய கொட்டியது. பகல் முழுவதும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலை முதல் மீண்டும் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக, சென்னை அண்ணா பல்கலை, சென்னை விமான நிலையத்தில் தலா 5, டி.ஜி.பி., அலுவலகம், தாம்பரத்தில் தலா 4 செ.மீ., மழை பெய்தது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னை நகரில் அவ்வப்போது மழை பெய்யலாம்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.பலத்த மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மழையால் ஐ.ஏ.எப்., சாலை கடும் சேதம்:


மழையால், பட்டாபிராம் ஐ.ஏ.எப்., சாலை முற்றிலும்சேதம் அடைந்து, குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.பட்டாபிராம் இந்து கல்லூரியை ஒட்டி செல்லும்ஐ.ஏ.எப்., (விமான படைக்கு சொந்தமானது) சாலையில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகள்,கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் முடிந்தது. இதையடுத்து அவசர, அவசரமாக சாலை அமைக்கும் பணிநடைபெற்றது. ஆனால், இந்த சாலை ஒரு மாதத்துக்குகூட தாக்கு பிடிக்கவில்லை.இந்நிலையில், நேற்றுமுன்தினம் பெய்த மழையில்சாலை முற்றிலும் சேதம் அடைந்து, வாகன போக்குவரத்துகடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வழியாக செல்லும் ஆயிரக்கணக்கானபொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAJAVISHNU - madurai,இந்தியா
05-டிச-201200:05:25 IST Report Abuse
RAJAVISHNU விமான படைக்கு சொந்தமான ஐஎஎப் சாலையே மோசமடைஞ்சி போச்சாம் ,மந்திரிகள் வீடுகள் உள்ள கிரீன்வேஸ் சாலை பளபளங்குதாம் .
Rate this:
Share this comment
Cancel
Mustafa - Dammam,சவுதி அரேபியா
04-டிச-201220:18:16 IST Report Abuse
Mustafa விடுப்பா விடுப்பா மழைவந்தா மக்கள் தண்ணில நடக்கிறதும் வந்தாலும் வராவிட்டாலும் தண்ணியில மக்கள் நடக்குறதும் டாஸ்மாக்ல ஸாரி தமிழ்நாட்ல சகஜமப்பா
Rate this:
Share this comment
Cancel
Vinoth Kumar - Chennai,இந்தியா
04-டிச-201218:43:01 IST Report Abuse
Vinoth Kumar சும்மா இருந்த இடத்த சொறிஞ்சிவிட்ட மாதிரி இருக்கு - இவங்க போடுற ரோடு... ரோடு போடாம சும்மாவிட்டாகூட இந்த அளவுக்கு கேவலமா இருக்காது.
Rate this:
Share this comment
Cancel
மோனிஷா - நாகர்கோயில்,இந்தியா
04-டிச-201217:53:31 IST Report Abuse
மோனிஷா நதிநீர் இணைப்பு திட்ட வரைவுக்கு சென்னையையை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம். வேலையும் சுலபமாக முடியும்.
Rate this:
Share this comment
Cancel
பகட்டுவான் - Chennai,இந்தியா
04-டிச-201211:03:37 IST Report Abuse
பகட்டுவான் மழை எங்க பெய்யனுமோ அங்க பெய்யாம கழுத்தை அறுக்குது .
Rate this:
Share this comment
மோனிஷா - நாகர்கோயில்,இந்தியா
04-டிச-201220:58:32 IST Report Abuse
மோனிஷாபகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கிராமத்தார்கள் பட்டினத்திற்குச் சென்றதன் விளைவு....
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
04-டிச-201210:52:44 IST Report Abuse
mirudan சென்னை மாநகரத்தில் சிறிய மழை பெய்தாலே பஸ் வருவதில்லை ரயிலோ சொல்லவே வேண்டாம் சிங்க்னால் பிரச்சனை என்று அரைமணி நேரம் ஒரு மணிநேரம் காக்க வேண்டி இருக்கு ஆட்சியில் இருப்பவர்களுக்கு கடற்கரை சாலையை தவிர வேறு சாலைகள் இருக்கா என தெரியுமா என்றே தெரிய வில்லை
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
04-டிச-201210:49:10 IST Report Abuse
mirudan சென்னை தேனாம்பேட்டை DMS பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஹோட்டலில் இருந்து கழிவு நீர் அருகில் உள்ள அடுத்த ஹோட்டல் வரை கடந்த ஒரு மாதமாக வழிந்து ஓடி கொண்டு இருக்கு, அருகில் இருக்கும் மாநில அரசின் சுகாதார துறை உயர் அதிகாரிகள் , ஊழியர்கள் இதை பார்த்து கொண்டுதான் போகிறார்கள். இது ஏன் இப்படி இருக்கு என்றால் மாநகராட்சி ஊழியர்களுக்கு மால் வெட்டினால் மட்டுமே அதை சரி செய்வார்கள். டோங்கு காட்ச்சலில் இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம் இறந்தது. ஒரு மாநில தலைநகரத்தின் ஒரு மைய பகுதியில் இப்படி ஒரு நிலை என்றால் பிற பகுதிகள் எப்படி இருக்கு. இந்த மாகராட்சிக்கு ஒரு மேயர் அவர் 7 லட்சத்திற்கும் அதிகமாக ஓட்டு வாங்கி இருக்கிறார். அவரு இந்த வழியாக போனாரா இல்லையா ?
Rate this:
Share this comment
Cancel
மோனிஷா - நாகர்கோயில்,இந்தியா
04-டிச-201208:48:03 IST Report Abuse
மோனிஷா படகுத்துறை இது மாதிரி சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி வருமானம் ஈட்ட முயற்சிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Kumarasamy Umapathy - singapore,சிங்கப்பூர்
04-டிச-201216:35:13 IST Report Abuse
Kumarasamy UmapathyVery Good Timing. I like it....
Rate this:
Share this comment
மோனிஷா - நாகர்கோயில்,இந்தியா
04-டிச-201218:04:03 IST Report Abuse
மோனிஷாவெளிநாட்டு நகரங்களில் ஆறு வெட்டி கரை கட்டி படகு விடுகிறார்கள். நமது நரகத்தில் ஒருபைசா செலவு இல்லாமல் ஆறுகள் உருவாக்கியிருக்கும் தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுக்கும் கற்றுக்கொடுத்து வருவாய் ஈட்டலாமே....
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
04-டிச-201206:06:12 IST Report Abuse
villupuram jeevithan இந்த சாலை ஒரு மாதத்துக்குகூட தாக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த அளவுக்கு மழை பெய்திருக்கிறது என்று அர்த்தம். இதெற்கெல்லாம் ஆட்சியாளர்களை குற்றம் சொல்லக் கூடாது இது வழக்கமானது தான் புதிதல்ல என்று சொல்லிக் கொண்டு உணர்ச்சி அடையாமல் நமது உடல்நலனைக் கவனித்துக் கொள்ள வேண்டாமோ?
Rate this:
Share this comment
Cancel
Arul - Chennai,இந்தியா
04-டிச-201205:49:08 IST Report Abuse
Arul சென்னையுளும் குடிக்க தண்ணி வேணும் செந்தமிழ்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்