Congress fear over Mawayathi,Mulayam singh's decision over FDI | இட ஒதுக்கீடு மசோதா: ராஜ்யசபா ஒத்திவைப்பு ; அன்னிய முதலீடு விவாதம் துவங்குகியது; | Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (30)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

புதுடில்லி: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு தொடர்பாக ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் இன்று மதியம் 2 மணிக்கு லோக்சபாவில் துவங்கியது. பா.ஜ., தரப்பில் எதிர்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் விவாதத்தை துவக்கி வைத்து பேசினார். இதற்கிடையில் அரசு பணிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக எழுந்த அமளியால் காலை ராஜ்ய சபா ஒத்தி வைக்கப்பட்டது. பார்லி., கூட்டம் துவங்கும் முன்பாக பா.ஜ., கொண்டு வரும் தீர்மானம் தோற்கடிக்கப்படும் என வர்த்தக துறை அமைச்சர் கமல்நாத் நம்பிக்கை தெரிவித்தார். இந்த விவாதத்தை தெலுங்கானா பகுதியை சேர்ந்த எம்.பி.,க்கள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். முன்னதாக லோக்சபாவில் இன்று காலை கிரிமினல் சட்ட பிரிவில் சில மாற்றம், தாழ்த்தப்பட்டோருக்கான சட்டப்பிரிவில் மாற்றம், உயர்கல்வி நிறுவன அமைப்பில்மாற்றம், உள்ளிட்ட சரத்துக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

விவசாயிகளுக்கு நன்மை தராது; சுஷ்மா : விவாதத்தை துவக்கி வைத்து பேசிய சுஷ்மா: மத்திய அரசு கொண்டு வரும் அன்னிய முதலீடு சிறு வியாபாரிகளை அழிக்கும் செயல் ஆகும். அன்னிய நிறுவனங்களே முன்னுரிமை பெறும். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகளை அரசு கலந்து ஆலோசிக்கும் என கூறிய உறுதிமொழியை மீறி விட்டது. இது விவசாயிகளுக்கு எவ்வித நன்மையும் தராது இவ்வாறு பேசினார்.


சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டை அனுமதிக்கும், மத்திய அரசின் முடிவுக்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அரசு தன் முடிவில், உறுதி காட்டுவதால், இதுகுறித்து, பார்லிமென்டில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டுமென, கோரிக்கை வைக்கப்பட்டு, அது ஏற்கப்பட்டு விட்டது.பலத்த இழுபறிக்கு பிறகு, இது தொடர்பான விவாதம், இன்று லோக்சபாவில் துவங்கியது. நாளை மாலை, 5:00 மணிக்கு ஓட்டெடுப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கும், இந்த விவகாரத்தில் தங்கள் நிலைப்பாடு குறித்து, "சஸ்பென்ஸ்' வைத்து பேசியுள்ளனர்.

வெளிநாட்டு முதலீடுகள் தேவையா மாயாவதி : நேற்று டில்லியில் நிருபர்களிடம், மாயாவதி கூறியதாவது:சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டை முற்றிலுமாக நாங்கள் எதிர்க்கிறோம்;இந்த முடிவை, நாங்கள் விரோதமாகவே பார்க்கிறோம்.லட்சக்கணக்கான விவசாயிகள், வணிகர்கள் என, பலரும் பாதிக்கப்படவே செய்வர். இப்பிரச்னை குறித்து, தீர்க்கமாக ஆராய்ந்து, சாதக பாதகங்களை விரிவாக அலசி, அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்.அதை விட்டு விட்டு, எடுத்தேன் கவிழ்த்தேன் என, செயல்படுவது சரியாக இருக்காது. இத்தனை அவசரமாக முடிவெடுக்க வேண்டிய அவசியமே இல்லை. அரசாங்கத்திற்கு வெளிநாட்டு முதலீடுகள் அவசியம் தான்; ஆனால், சில்லரை வர்த்தகத்திலும், வெளிநாட்டு முதலீடுகள் தேவையா என்பதை பார்க்க வேண்டும்.வெளிநாட்டு முதலீடு என்ற பெயரில், உள்ளூர் சந்தைகளை பலவீனப்படுத்துவதோ, உள்நாட்டு வர்த்தகர்களை பாதிக்கச் செய்வதோ தேவையற்றது. இந்த விவகாரம் தொடர்பாக, பார்லிமென்டில் பா.ஜ., சார்பில் கொண்டு வரும் தீர்மானம் குறித்தும், எங்களுக்கு முழு திருப்தி இல்லை. எனவே, அந்த தீர்மானத்தை ஆதரிக்கவும் முடியாது. ஓட்டெடுப்பின் போது தான், இவ்விஷயத்தில் முடிவு எடுப்போம்.இவ்வாறு மாயாவதி கூறினார்.

முலாயம் சிங்கும், "சஸ்பென்ஸ்' : சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ""இவ்விஷயத்தில், என்ன செய்வது என்பது குறித்து,ஓட்டெடுப்பின்போது தான் முடிவெடுக்கப்படும்,'' என, கூறினார்.நாளை ஓட்டெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், காங்கிரஸ் பெரிதும் நம்பிக் கொண்டிருக்கும், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய இரு கட்சிகளுமே போக்கு காட்டத் துவங்கியுள்ளன. சொல்லி வைத்தது போல மாயாவதியும், முலாயம் சிங்கும், "சஸ்பென்ஸ்' வைத்து பேசியுள்ளது, காங்கிரசுக்கு பெரும் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.லோக்சபாவில், எப்படியும் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை, ஆளும் கூட்டணியிடம் இருந்தாலும், ராஜ்ய சபாவில் நிலைமை மோசமாக உள்ளது. பகுஜன், சமாஜ்வாதி ஆகிய இரு கட்சிகள் மீது, காங்., வைத்திருந்த நம்பிக்கை ஆட்டம் காணத் துவங்கியுள்ளது.
இவர்கள் இருவரையும் வளைப்பதில், ஒரே ஒரு விஷயத்தில் தான், காங்கிரஸ் மாட்டிக் கொண்டு திணறுவதாக தெரிய வந்துள்ளது. "தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில், பதவி உயர்வு வழங்க

Advertisement

வகை செய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும்' என, மாயாவதி உறுதி காட்டுகிறார். இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்பதில், முலாயம் பிடிவாதமாக உள்ளார்.கடந்த மழைக்கால கூட்டத்தொடரிலேயே, இதுகுறித்த அறிமுகமசோதாவை, ராஜ்ய சபாவில் மத்திய அரசு தாக்கல் செய்துவிட்டது. இதை உடனடியாக நிறைவேற்றினால், அரசை ஆதரித்து ஓட்டு போட, மாயாவதி தயார் நிலையில் உள்ளார். ஆனால், இந்த சட்ட திருத்தம் செய்வதற்கு, முலாயம் சிங் கடுமையாகஎதிர்க்கிறார். மாயாவதியின் கோரிக்கையை ஏற்றால், தனது ஆதரவு கிடைக்காது என்றும் கூறுவதாக தெரிகிறது.
இதுகுறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:ராஜ்யசபாவில், பகுஜன் சமாஜ் கட்சிக்கு, 15 எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று காலையில், சபை துவங்கியவுடன், இப்பிரச்னையை தீவிரமாகக் கிளப்ப திட்டமிட்டுள்ளனர். அரசு தரப்பில், என்ன மாதிரியான பதில் வரப்போகிறது என்பது தெரியவில்லை. இந்த பதிலை வைத்து தான், பகுஜன் சமாஜ் எம்.பி.,க்களின் முடிவு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மாயாவதியின் கோரிக்கை ஏற்கப்பட்டு, சட்ட திருத்த மசோதாவை எடுத்துக் கொள்ளப்போவதாக, அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டால், முலாயம் சிங் எதிர்ப்பை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே, இந்த சிக்கலை சமாளிப்பதை வைத்து தான், இவர்களின் ஆதரவை மத்திய அரசு பெற முடியும் என, நம்பப்படுகிறது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.-நமது டில்லி நிருபர்-

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (30)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.saravanan - tirupur,இந்தியா
04-டிச-201220:06:30 IST Report Abuse
p.saravanan எதிர்கட்சியினர் ஒன்று கூடி ஒரு சிறந்த நிர்வாகத்தை தரக்கூடிய அரசிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Muthu Ramaswamy - Jeddah,சவுதி அரேபியா
04-டிச-201218:07:10 IST Report Abuse
Muthu Ramaswamy சொல்றதுக்கு ஒன்னும் இல்லை...மக்கள் மீதோ, மக்கள் படும் அவஸ்தை மீதோ ஒருத்தனுக்கும் ஒரு துளி கூட அக்கறை இல்லை...அரசியல் செய்யனுமுன்னா இது போல சாக்கு, போக்கு சொல்லி கொண்டே காலம் கடத்த வேண்டி உள்ளது...ஊழல் செய்தவர்கள் தாங்கள் செய்த ஊழலில் இருந்து தப்புவதற்கு இது போல சட்டத்தை இயற்ற வேண்டி உள்ளது..அன்ன ஹசாரே சொல்லியது போல ஊழலை ஒழிக்க ஊழல் கறையற்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்...இங்கு எல்லாமே முதலைகள் .....
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
04-டிச-201216:39:16 IST Report Abuse
Narayan வேறு ஒரு விஷயத்துக்காக சபை நடக்க விட மாட்டோம், வெளிநடப்பு செய்கிறோம் என்ற பெயரில், ஆளுங்கட்சிக்கு பல்லாக்கும் தூக்க வேண்டும், ஆனால் அதை மறைமுகமாக செய்ய வேண்டும். இது ஒன்றும் காங்கிரஸ் சார்ந்த மதச்சார்பின்மை, சமூக நீதி, தலித் அரசியல் என்ற பெயரில் கொள்ளை கம்பெனி நடத்தும் எல்லா கட்சிகளுக்கும் புதிது அல்ல. மக்களும் முன்னர் போல முட்டாள்கள் அல்லர்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
04-டிச-201214:26:42 IST Report Abuse
Nallavan Nallavan கருணாநிதி, மாயாவதி, லாலு பிரசாத், முலாயம் போன்றோர் மீது சி.பி.ஐ. பரிவுடன் நடந்து கொண்டால் இவர்களும் மத்தியக் கூட்டணி அரசிடம் பரிவு காட்டுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
mesri - Doha,கத்தார்
04-டிச-201214:18:36 IST Report Abuse
mesri தமிழ் இன துரோஹி, இந்திய நாட்டு துரோஹி மஞ்ச துண்டாரை நினத்தால் கேவலமா இருக்கு. இவர் ஒரு பச்சோந்தியே. ச்சி ச்சி
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
04-டிச-201213:00:50 IST Report Abuse
Thangairaja இருவரில் ஒருவர் ஆதரித்தாலும் காங்கிரஸ் தெம்பாகி விடும். ஆட்சியை கவிழ்த்து விட்டு பாசிச சக்திகள் பலம் பெற்று விடக்கூடாது என்பதில் முலாமும் கலைஞரும் தெளிவாக இருப்பதால் காங்கிரசுக்கு கிடைக்கும் பிச்சை இது. அந்நிய முதலீடு ஆபத்தானது என்பது மட்டும் உண்மை.
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
04-டிச-201212:20:36 IST Report Abuse
T.C.MAHENDRAN முதுகெலும்பில்லாத மு.க வுக்கு சளைத்தவர்களில்லை இவர்கள் இருவரும் . கடைசியில் காங்கிரஸ் காலடியில் தான் விழப்போகிறார்கள் .
Rate this:
Share this comment
Cancel
govind - Muscat,இந்தியா
04-டிச-201212:04:30 IST Report Abuse
govind சும்மா ல ல ல. கோவிச்சுக்காதீங்க மேடம்.. ஒரு பாவலா தான்... தப்ப எடுத்துக்காதீங்க ராகுல் சார்.... சும்மா செய்தி தாள்களுக்கு வேலை வேணும் இல்லையா... அதான்.. இந்த மாதிரி ஒரு செய்தி... நீங்க என்ன வேணும் நாளும் பண்ணுங்க.. நான் தல இட மாட்டேன்.. சிபிஐ அய்யா... ஒரு பேச்சுக்கு சொல்லி வெச்சேன்.. ஏன் பேப்பரை தொரக்காதீங்க.... இதோ பல்டி அடிக்கனுமா.... அடிக்கிறேன்.... கவலை வேண்டாம்...
Rate this:
Share this comment
Cancel
பகட்டுவான் - Chennai,இந்தியா
04-டிச-201211:06:04 IST Report Abuse
பகட்டுவான் பேரம் படியலை போல.
Rate this:
Share this comment
Cancel
Jenish Kumar A - Kanyakumari,இந்தியா
04-டிச-201211:02:37 IST Report Abuse
Jenish Kumar A இதெல்லாம் ஒரு நாடகம் மட்டுமே. இப்போதைய சூழ்நிலையில் முலாயம் ,மாயாவதி ,கருணாநிதி இந்த மூன்று பேரும் மதவாத இத்தாலி சோனியாவின் அடிமைகள். எனவே இவர்கள் மதவாத இத்தாலி சோனியாவின் அரசுக்கு எதிராக ஒன்றும் செய்யமாட்டார்கள், செய்யவும் முடியாது என்பதே என்னுடைய கருத்து.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.