கூடலூர் : கூடலூரில் நூற்றாண்டு காலமாக மின் சப்ளை இல்லாத மேலம்பளம் ஆதிவாசி கிராமத்தில் "சூரிய மின் சக்தி சேமிப்பு நிலையம்' அமைத்து, வீடுகள், தெரு விளக்குகளுக்கு மின் சப்ளை வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஆதிவாசி இனத்தை சேர்ந்த பனியர், குரும்பர், காட்டுநாயக்கர் மக்கள் வனப் பகுதியை ஒட்டிய குக்கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். அடிப்படை வசதியின்றி குடிசைகளில் வசித்து வந்த இவர்களுக்கு, தற்போது, அரசு தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், இலவச கல்வி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ஆனால், பல கிராமங்களில் வனத்துறையின் விதிகள் காரணமாக, வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க முடியாத நிலையுள்ளது. இதனால், பல ஆதிவாசி கிராமங்களுக்கு, "சூரிய மின் சக்தி' மூலம் மின் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, மலைப் பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து, கூடலூர் ஸ்ரீ மதுரை மேலம்பளம் மற்றும் மானிமூலா பனியர் காலனியில், தலா ஒரு யூனிட்டுக்கு ஒரு கிலோ வாட் சக்தி கொண்ட "சூரிய மின் சேமிப்பு நிலையம்' அமைத்து, அதிலிருந்து வீடுகளுக்கும், தெருவிளக்குகளுக்கும் மின் சப்ளை வழங்கப்பட்டுள்ளது. இதனால், மேலம்பளம் கிராமத்தில் 28 வீடுகளிலும், மானிமூலாவில் 16 வீடுகளிலும் பயன் அடைந்துள்ளன.
தெரு விளக்குகள் மாலை 6.00 முதல் காலை 6.00 மணி வரை மட்டும் எரிந்து அனையும் வகையில், "சென்சார்' பொருத்தப்பட்டுள்ளது. கிராமத்தில், பொதுவான ஓர் இடத்தில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதியும் வழங்கப்ட்டுள்ளது.
திட்டம் குறித்த ஆதிவாசி மக்கள் கூறுகையில், "இத்திட்டம் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது; தொடர்ந்து பராமரிக்கவும், கூடுதல் மின் விளக்குகள் மற்றும் "டிவி' பயன்படுத்தும் வகையிலும், கூடுதல் மின் சப்ளை வழங்க வேண்டும்' என அப்பகுதியினர் தெரிவித்தனர். "இத்திட்டம் மின்சாரம் இல்லாத மற்ற ஆதிவாசி கிராமங்களிலும் விரிவு படுத்தப்படும்,' என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
டெல்லி அரசு திருப்பி கொடுக்கும் மின்சாரத்தை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார். இதை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டது. அரியானா மாநிலம் சஜ்ஜாரில் உள்ள இந்திரா காந்தி அனல் மின் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு வழங்கப்பட்டு வரும் 231.17 மெகாவாட் மின்சாரத்தை மத்திய மின் தொகுப்பிற்கு திருப்பித்தர முடிவு செய்தது. இதையடுத்து மத்திய அரசு டெல்லி திருப்பி தந்த மின்சாரத்தை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான கேரளாவுக்கு 100 மெகாவாட்டும், ஆந்திராவுக்கு 131.17 மெகாவாட் மின்சாரத்தையும் வழங்குகிறது. மத்திய மின் தொகுப்பில் இருந்து கேரளாவுக்கு தற்போது 1200 மெகாவாட் மின்சாரம் தினசரி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூடுதலாக 100 மெகாவாட் கிடைக்கிறது.
மத்திய அரசிடம் கோரிக்கை எதுவும் வைக்காமலேயே கேரளாவுக்கு மின்சாரம் கிடைத்ததால் கேரள மின் வாரிய அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரளாவுக்கும் ஆந்திராவுக்கும் கொண்டு செல்ல தென் மாநிலங்களில் கிரிட் இருக்கும் பொது தமிழ் நாட்டுக்கும் மட்டும் கிரிட் இல்லை என மத்திய அரசு கூறுவது சுத்தப் பொய். இதில் உள்ள திரைமறைவு வேலைகள் நம் தமிழ் தாத்தாவுக்கே வெளிச்சம்...........

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.