district news | கபாலீசுவரர் கோவில் வாடகை பாக்கி ரூ.1.45 கோடி வசூல்| Dinamalar

தமிழ்நாடு

கபாலீசுவரர் கோவில் வாடகை பாக்கி ரூ.1.45 கோடி வசூல்

Added : டிச 04, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:மயிலாப்பூர், கபாலீசுவரர் கோவிலுக்கு, கடந்த பல ஆண்டுகளாக
வரவேண்டிய, 1.45 கோடி ரூபாய் வாடகை பாக்கி, கோவில் நிர்வாகத்தின் தொடர் நடவடிக்கையால்,
வசூலாகியுள்ளது.
23 கிரவுண்ட் மனை
மயிலாப்பூர், கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமாக, மயிலாப்பூர், லஸ் சர்ச் சாலையில், 23 கிரவுண்ட், 2,385 சதுரடி பரப்பளவுள்ள, மனை உள்ளது.
இந்த மனை, மயிலாப்பூர் கிளப் நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
கடந்த, 2001ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட வாடகை தொகை, நீண்ட காலமாக செலுத்தப்படாமல்,
நிலுவையில் இருந்தது.
மீதி பாக்கி வசூல்
கோவில் நிர்வாகத்தின் முயற்சியால், நிலுவை தொகையில் ஒரு பகுதியான, 1.43 கோடி ரூபாயை, ஜூலை 1ம் தேதி, மயிலாப்பூர் கிளப் நிறுவனம் கோவிலுக்கு செலுத்தியது.
கோவில் நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தியதை தொடர்ந்து,
நவம்பர், 28ம் தேதி, மீதம் செலுத்தப்பட வேண்டிய வாடகை பாக்கியை, மயிலாப்பூர் கிளப்
வழங்கியது.
அந்நிறுவனத்தின் சார்பில், செயலர் ரவி மற்றும், சட்ட ஆலோசகர் சதீஷ் பராசரன் ஆகியோர், நிலுவை தொகையான, 1.45 கோடி ரூபாய்க்கான காசோலையை, கோவில்
தக்கார் விஜயகுமார் ரெட்டியிடம் வழங்கினர். உடன், கோவில் துணை ஆணையர் காவேரி
இருந்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை