அதிகாரிகள் "பில்டப்':
இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தில், மே மாதம் தான், மாணவர் சேர்க்கைப் பணிகளை துவங்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி, மாநிலம் முழுவதும், மெட்ரிக் பள்ளி அதிகாரிகள், விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொண்டனர்."மே மாதம் தான், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். முன்கூட்டி சேர்க்கை நடத்தினால், அந்த சேர்க்கை ரத்து செய்வதுடன், சம்பந்தபட்ட பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தனர்.காற்றில் பறந்தது:
ஆனால், அதிகாரிகள் எச்சரிக்கையை மீறியும், சட்டத்திற்கு எதிராகவும், முன்னணி தனியார் பள்ளிகளில், இப்போதே மாணவர் சேர்க்கை, தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையில்,கறக்கும் நிர்வாகம்:
சென்னை, சேத்துப்பட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், எல்.கே.ஜி., சீட் வாங்க, பல லட்சம் ரூபாய் செலவில், விளையாட்டு அரங்கம் கட்டித்தர, ஒரு பெற்றோர் முன்வந்த சம்பவமும், சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது.இதேபோல், பல பள்ளி நிர்வாகங்கள், பல லட்சம் ரூபாயை, நன்கொடையாக கறக்கவும் தவறுவதில்லை.குறிப்பிட்ட சில பள்ளிகளில்,தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும் என, பெற்றோர், ஒற்றைக் காலில் நிற்பதால், பள்ளி நிர்வாகம் கேட்கும் தொகையை, வாரி வழங்குகின்றனர்.மழுப்பல் பதில்:
மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரக வட்டாரத்தினர் கூறியதாவது:பள்ளி நிர்வாகங்கள், நன்கொடை கேட்பதாக, பெற்றோர் தரப்பில் இருந்து, எழுத்துப்பூர்வமாக, எவ்வித புகாரும் வரவில்லை.அதேபோல், பள்ளிகளுக்கு தேவையான, கட்டட வசதிகளை செய்துகொடுப்பதாக கூறி, "சீட்' வாங்குவது குறித்தும், எங்களது கவனத்திற்கு வரவில்லை. புகார்கள் வந்தால், விசாரணை நடத்தி, சம்பந்தபட்ட பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுப்போம்.அதிகாரிகள் தயக்கம் :
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார் கூறியதாவது:தயக்கத்திற்கு காரணம் என்ன?
அதிகாரிகளின் தயக்கத்திற்கான காரணம் குறித்து, தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:உயர் அதிகாரிகள், முக்கிய அரசியல் தலைவர்களின் பிள்ளைகளுக்கு, முன்னணி தனியார் பள்ளிகளில், "சீட்' வாங்க வேண்டிய பொறுப்பு, கல்வித்துறை அதிகாரிகளிடம் தரப்படுகிறது.இதனால், பள்ளி நிர்வாகங்களிடம் படாதபாடு பட்டு, சீட் வாங்கி தருகின்றனர். இப்படி நடந்தால், வரம்பு மீறும் பள்ளிகள் மீது, அதிகாரிகளால் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? அதிகாரிகளுக்கு நெருக்கடி வராமல் இருந்தால், இதுபோன்ற பிரச்னைகள் தீரும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இது பெற்றோரின் தவறு. நீங்கள் கொடுக்க தயார் அவர்கள் வாங்க தயார். இதுவும் ஒரு விதமான ஊழலை ஊக்குவிக்கும் நடவடிக்கைதான். நமக்கு வேண்டுமென்றால் தலை கீழாக நின்று தண்ணீர் குடிக்கலாம் என்றால் அதற்கான விலையையும் கொடுத்து தான் ஆகவேண்டும். ஏன் பக்கத்திலிருக்கும் அரசு பள்ளிகளில் சேர்க்க நமக்கு அவ்வளவு தயக்கம். ஒரு தெரு மட்டுமல்ல நன்கு படித்தவர்கள் குழுவாக சேர்ந்து அரசு பள்ளிகளை தத்து எடுத்து முன்னேற்றலாமே. எல்லாமே இங்கே சுயநலம். அதனால்தான் அண்டை மாநிலத்தவன் முதற்கொண்டு இங்கு வந்து தொழில் ஆரம்பித்து நமக்கே முதலாளியாகிறான். நாம் கடைசிவரை அடிமை தனத்திலே சுகம் காண்கிறோம். இப்போது சொல்லுங்கள் யார் மீது தவறு என்று. தயவு செய்து அரசு அரசியல்வாதிகள் மீது தவறு என்று சொல்லாதீர்கள் ஏனென்றால் அவர்களும் நம்மால் ஊக்குவிக்கப்பட்டவர்களே......

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.