மாமல்லபுரம்:முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் அமைக்கப்படும், பறக்கும் குதிரை உலோக சிற்பம், மாமல்லபுரத்தில் பிரத்யேகமாக உருவாக்கப்
பட்டுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையில், தமிழக முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., நினைவிடம் அமைந்துள்ளது. இம்மாதம், 24 ம் தேதி, அவரது நினைவு நாள். எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில், தமிழக பொதுப்பணித் துறை,
சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
நுழைவாயிலில், முன்பிருந்த வளைவு அகற்றப்பட்டது.
தற்போது, இரு கான்கிரீட் தூண்கள் அமைத்து, அதன் மையத்தில், அ.தி.மு.க., சின்னமான, இரட்டை இலையின் பிரமாண்ட உருவத்தை அமைத்துள்ளது. இதன்கீழ், உலோகத்தாலான குதிரை சிலை,
வடக்கு திசை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் புகழ்பெற்ற இவ்வகை
சிற்பத்தை, இங்கு அமைக்க முடிவெடுத்து,
கலைநிபுணர்களின் ஒத்துழைப்புடன், இதை முதல்வர் ஜெயலலிதா வடிவமைத்தார்.
மாமல்லபுரத்தில் உலோக சிற்பக்கலைக் கூடம் நடத்தி வரும் ரவீந்திரன் ஸ்தபதியிடம், இதை
உருவாக்கும் பொறுப்பை, பொதுப்பணித்துறை
ஒப்படைத்தது.
தாமிரம், பித்தளை, பிற உலோக கலவையில்,
இச்சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 16 அடி; எடை 3.75 டன். முன்னங்கால்களை தூக்கியும், பின்னங்கால்களை தரையில் தாங்கியும், இருபுற இறக்கைகளை விரித்தும் பறக்கும் தோற்றத்தில்,
இச்சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை நான்கு மாதங்களில் உருவாக்கி, இரு நாட்களுக்கு முன்
நிறுவப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.