பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய ஆயுர்வேத பிரிவில், டெங்கு, சிக்குன்குனியா காய்ச்சலை கட்டுப்படுத்த, பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது.
சேலம், பனமரத்துப்பட்டி பகுதியில், நல்லியாம்புதூர்,காந்திநகர்,கோணமடுவு,திப்பம்பட்டி, அடிக்கரை உள்ளிட்ட பகுதியில் உள்ள மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கை, கால் வலி, வயிற்று போக்கு, தலைசுற்றல் ஆகியவையால் அவதிப்படுகின்றனர்.
பனமரத்துப்பட்டி வட்டார சுகாதாரத்துறை சார்பில், மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு,கொசு புழு ஒழிப்பு பணிகளும், நடமாடும் மருத்துவ குழு மூலம் சுகாதார பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது, பனமரத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், செயல்பட்டு வரும் ஆயுர்வேத பிரிவில், டெங்கு, சிக்குன்குனியா காய்ச்சலை கட்டுப்படுத்த, நிலவேம்பு பவுடர் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
இது குறித்து, ஆயுர்வேத மருத்துவர் கூறியதாவது:
ஒரு டம்ளர் தண்ணீரில், ஒரு ஸ்பூன் நிலவேம்பு பவுடரை போட்டு, காய்ச்சி சுண்டிய பின் வடிகட்டி, கசாயத்தை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, காய்ச்சல், கை,கால் வலி கட்டுக்குள் வரும். நிலவேம்பு கசாயம், சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும்.
பப்பாளி சாறு காய்ச்சலை கட்டுப்படுத்தும் என்பதால், அதை வீட்டில் தயாரித்தும் அருந்தலாம். நிலவேம்பு கசாயத்தை பத்து நாட்களுக்கு சாப்பிடவேண்டும். பனமரத்துப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய, ஆயுர்வேத பிரிவில், பொதுமக்களுக்கு இலவசமாக, நிலவேம்பு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.