Advertisement
தெலுங்கானா காங்., எம்.பி.,க்களுடன் : மத்திய அமைச்சர்கள் அவசர ஆலோசனை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2012,01:37 IST

புதுடில்லி: சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான விவாதத்தில், காங்., உறுப்பினர்கள் அனைவரையும், பங்கேற்க செய்வதில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.லோக்சபாவில் இன்று நடக்கும் விவாதத்திலும், நாளை நடக்கும் ஓட்டெடுப்பில், தவறாமல் பங்கேற்க வேண்டும் என, குறிப்பிட்டு காங்., மற்றும் பா.ஜ., கட்சிகளின் கொறடாக்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.இந்நிலையில், காங்., கட்சியில், ஆந்திர தெலு<ங்கானாவை சேர்ந்த காங்., எம்.பி.,க்கள் விவாத்தை புறக்கணிக்க போவதாக வந்த செய்தியை அடுத்து, காங்., மேலிட தலைவர்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

மத்திய உள்துறை அமைச்சரும், லோக்சபா தலைவருமான சுசில் குமார் ஷிண்டே மற்றும் பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் கமல்நாத்தும், ஆந்திர எம்.பி.,கள் தலைவர் பூனம் பிரபாகர் மற்றும் சில எம்.பி.,க்களை நேற்று இரவு, அழைத்து பேசினர். இதில், தெலுங்கானாவை சேர்ந்த, மத்திய அமைச்சர்கள் ஜெயபால் ரெட்டி, சர்வே சத்தியநாராயணா, பல்ராம் நாயக் ஆகியோர் பங்கேற்றனர்.


காங்., எம்.பி.,க்களில் தெலுங்கானாவை சேர்ந்த எம்.பி.,க்கள், தனி தெலுங்கானா மாநிலம் அறிவிக்க கோரி, பார்லிமென்ட்டில் குரல் எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.


தற்போது, அன்னிய நேரடி முதலீடு விவாதத்தில் ஆதரிக்க வேண்டும் என்றால், தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என்ற உறுதிமொழி அளிக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.


இச்சந்திப்புக்கு முன்பாக, அனைத்து மாநில காங்., எம்.பி.,க்களின் தலைவர்களை கமல்நாத் சந்தித்து, விவாதம் குறித்து ஆலோசனை நடத்தினார்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
K.NAKARAJAN - sivakasi,இந்தியா
04-டிச-201205:35:09 IST Report Abuse
K.NAKARAJAN ANDHRA எம்பீக்களை ப்ளேன் அரெஸ்ட் பண்ணி கூட்டிடிட்டு போங்க சோனியா கோபம் பொல்லாதது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.