accident accured by traffic policers in chennai | அடாவடி போலீசாரால் விபத்து அபாயம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடாவடி போலீசாரால் விபத்து அபாயம்

Updated : டிச 04, 2012 | Added : டிச 04, 2012 | கருத்துகள் (58)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சென்னை யானைகவுனி காவல்நிலையம் அருகே போக்குவரத்து ஒழுங்குப்பணியில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார் அடாவடியாக செயல்படுவதால், இரவு நேரங்களில் யானைகவுனி விபத்தின் பிறப்பிடமாக மாறி வருகிறது. சென்னையில் பிஸியான வால்டாக்ஸ் சாலையில் இரவு எட்டு மணிக்கு மேல் லாரிகள் செல்ல அனுமதி இருந்தும், கண்காணிப்பு பணியில் உள்ள போலீசாரை "கவனித்தால்' மட்டுமே லாரி செல்ல அனுமதி கிடைக்கும். டிரைவர்களிடம் மாமுல் வாங்கியதும் லாரியை அனுமதிக்கின்றனர். நேற்று இப்பகுதியில் போக்குவரத்து போலீசாரின் அடாவடியாலும் அலட்சியத்தாலும் பைக்குகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது. இது போன்ற சம்பவம் அப்பகுதியில் தொடர்கதையாகி வருகிறது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய போலீசாரே இப்படி ஒழுங்கீனமாக செயல்படுகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
04-டிச-201223:31:32 IST Report Abuse
Nallavan Nallavan பிணந்தின்னிக் கழுகுகள் தேவலாம்
Rate this:
Share this comment
Cancel
Ravanan Ramachandran - Chennai,இந்தியா
04-டிச-201219:31:51 IST Report Abuse
Ravanan Ramachandran நான் இந்த யானைகவுனி பகுதியில் கடந்த 40 வருடங்களாக வசித்து வருகின்றேன். அந்த நாள் முதல் இந்த நாள் வரை இதே தொடர் கதை தான். தினமும் இந்த காட்சிகளை என் கண்களால் பார்த்து கொண்டு தான் வருகின்றேன். எந்த அதிகாரிகள் வந்தாலும் இதை ஒன்றும் தடுத்து நிறுத்த முடியாது. இருந்தாலும் வேறு எந்த காவல் நிலையிதிலும் நடக்காத அளவுக்கு இந்த காவல் நிலையத்தில் மிக அதிகமாக ஊழல் குறிப்பாக போக்குவரத்து அதிகாரிகளிடத்தில் நடந்து கொண்டு இருக்கின்றது. ஏன் எனில் இங்கு மார்வாடி இனத்தவர் மிக அதிகமாக இருப்தால்தான்.
Rate this:
Share this comment
Cancel
R Bhaskaran - Abu Dhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
04-டிச-201217:35:15 IST Report Abuse
R Bhaskaran ஆமா, இதப்போயி பெருசா எடுத்துக்கிட்டு, 2G , நிலக்கரி........................ அவங்களை எப்படி திட்டுவீங்க ?
Rate this:
Share this comment
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
04-டிச-201215:58:14 IST Report Abuse
Rajasekaran Palaniswamy காவல்துறையினர் கடமை உணர்வுடன் செய்யும் பணியை நீங்கள் எப்படி குறை கூறலாம்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-டிச-201215:32:19 IST Report Abuse
தமிழ்வேல் இதற்க்கு எதனால் புகார் செய்வதில்லை ? லஞ்ச ஒழிப்பு துறைக்காவது லாரி டிரைவர் ஒருவர் தெரிவிக்கலாமே ?
Rate this:
Share this comment
Cancel
Manickavelu Sadhanandham - Kumbakonam,இந்தியா
04-டிச-201213:20:51 IST Report Abuse
Manickavelu Sadhanandham "ஹை ... பஞ்சாப் லாரி ... அமுக்கி காசைக் கறந்துட வேண்டியதுதான்" வடிவேல் ஜோக்கு தான் நினைவுக்கு வருது...
Rate this:
Share this comment
Cancel
Ramesh Ramesh - trivandrum,இந்தியா
04-டிச-201213:14:15 IST Report Abuse
Ramesh Ramesh Well done dinamalar. Meantime if could forward the same to the concerned department it would be more effective. It is our duty to identify the culprits and punish them severely….
Rate this:
Share this comment
Cancel
Kelvin - Chennai,இந்தியா
04-டிச-201212:48:04 IST Report Abuse
Kelvin மக்கள் படும் பாட்டை வெளிச்சதிக்கு கொண்டு வந்த தினமலர் ஆசிரியருக்கு மிக்க நன்றி. ஆனால் ஒன்று... இந்தமாதிரி அரசாங்க அதிகாரிகள் எவ்வளவு தான் திட்டினாலும் உரைக்காது... தவறை தட்டி கேட்க வேண்டிய போலிசே தவறு செய்வது வெட்கக் கேடு.
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
04-டிச-201212:47:22 IST Report Abuse
Rangarajan Pg லஞ்சம் வாங்கும் போலீஸ்காரர்களை எவ்வளவோ கேவலமாக பேசியாகிவிட்டது. சாலை போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுக்கும் பிச்சைகாரர்களை போல பணம் கேட்ப்பார்கள். அதிகாரமாக....அவர்களுக்கு என்ன திட்டினாலும் உரைக்காது. அவர்களுக்கு இதெல்லாம் சாதாரணம். போதாததற்கு அவர்களுக்கு தற்போது TOYOTA INNOVA வாகனம் கொடுத்திருக்கிறார்கள். கேட்கவா வேண்டும்? இந்த புகைப்படத்தை நீங்கள் போக்குவரத்து கமிஷ்னரிடமே சென்று நேரடியாக கொடுத்தாலும் அவர் எந்த வித நடவடிக்கையும் எடுக்க மாட்டார். ஏன் என்றால் ,,,, அது எல்லோருக்கும் தெரியும். இந்த புகைப்படத்தை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு திட்டும் நிலையை எல்லா பொதுமக்களும் தாண்டி வந்து இதை எல்லாம் ஏற்று கொள்ளும் மனபக்குவம் பெற்று வெகு காலமாகிறது. இது TOO LATE . இருந்தாலும் முயற்சிக்கு பாராட்டுக்கள். இங்கே கருத்து கூறுபவர்கள் மேலும் சிறிது வன்மையாக காவல்துறையினரை திட்டி கருத்து போட்டால் நன்றாக இருக்கும். அதை அப்படியே வெளியிட்டால் இன்னமும் நல்லது. அதை படித்தாவது யாரேனும் ஒரு காவலருக்காவது உறைக்காதா? ஒரு காவலராவது தன்னை திருத்தி கொள்ளமாட்டாரா? அதே சமயம் போக்குவரத்து காவல்துறையினர் லஞ்சம் வாங்க வாகன ஓட்டிகள் இடம் கொடுக்க கூடாது. சாலை விதிகளை சரியாக பின்பற்றினால் எந்த போக்குவரத்து போலீஸ்காரர் லஞ்சம் கேட்க முடியும்? ஆகவே அவர்கள் லஞ்சம் வாங்கும் சூழ்நிலை ஏற்படுத்தாமல் இருக்க பொதுமக்களாகிய நமக்கும் அந்த கடமை இருக்கிறது. நாம் அவர்களை திட்டும் அதே சமயம் நம்மை நாமே சிறிது ஒழுங்குபடுத்தி கொள்வதும் இன்றைய இன்றியமையாத தேவை.
Rate this:
Share this comment
Cancel
Vadivel Gvl - johur ,மலேஷியா
04-டிச-201212:45:58 IST Report Abuse
Vadivel Gvl இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் இப்படி புகைப்படத்துடன் வெளியிட்ட தினமலருக்கு பாராட்டுக்கள் ...இந்த செய்தியை பார்த்து போக்கு வரத்து போலீஸ் நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்று பார்க்கலாம் . இவன். க,வடிவேல் சின்னதச்சூர் , விழுப்புரம் மாவட்டம் ,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை