எழுமலை:மதுரை மாவட்டம் எழுமலையில், ரூ.பல லட்சத்தில் கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்ட் திறக்காமலேயே மூடு விழா காண உள்ளது. கழிப்பறையாக மாறியதால் பயணிகள் பரிதவிக்கின்றனர்.இவ்வூரை மையமாக கொண்டு 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, 2008ல், ரூ.25 லட்சத்தில், புது பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு, இன்று வரை பஸ்கள் "உள்ளே' வந்து செல்வதில்லை. பஜாரில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றன.கழிப்பறையாக மாறிய அவலம்:
திறக்கப்படாமலேயே மூடு விழா காணவுள்ள பஸ் ஸ்டாண்ட்டில் வாடகை வாகனங்களை நிறுத்தியுள்ளனர். ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மாடி, மது அருந்தும் கூடமாக மாறியுள்ளது. பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையாக மாறியதால், துர்நாற்றம் காரணமாக அருகில் உள்ள பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமம் அடைகின்றனர்.
குமுறும் மக்கள்:டிரைவர் பாண்டி: பஸ் ஸ்டாண்டை சுகாதாரத்துடன் வைக்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. பராமரிப்பு இல்லாததால் பஸ்கள் வருவதில்லை. பஸ் ஸ்டாண்டை பயன்படுத்த நடவடிக்கை எடுத்தால் மக்கள் பயனடைவர். ஆனந்த்: பஸ்கள் வந்து செல்ல, தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இங்கு, இரவில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பல லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாகி வருவதை தடுக்க, பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.பேரூராட்சி நிர்வாக அதிகாரி கண்ணன்: நவீன வசதிகளுடன் பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் வந்து செல்ல, போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு தொடர்ந்து நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படுகிறது. பஸ்கள் வந்து செல்ல தொடர்ந்து முயற்சி எடுக்கப்படும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.