புரூலியா:மேற்கு வங்க மாநிலத்தவர்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது. நாங்கள் ஏழையாக இருக்கலாம் ஆனால் பிச்சைக்காரர்கள் அல்ல என முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவி்த்து, மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவினை கடந்த செப்டம்பர் மாதம் திரிணாமுல் காங். விலக்கிக் கொண்டது. இதையடுத்து அக்கட்சி நடந்து கொண்டிருக்கும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் போது, பிரதமர் மன்மோகன் அரசுக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. போதிய பலம் இல்லாததால் தோல்வியடைந்தது. மம்தாவின் கோரிக்கையை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கவில்லை.இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் புரூலியா மாவட்டத்தில் திரிணாமுல் காங். சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:மேற்குவங்க மாநில மக்களை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. விவசாயத்திற்கு தேவையாக உதவிகளை செய்யாமல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது.
நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல:எங்கள் மாநில விவசாயிகளுக்கு தேவையான மின்சாரம், நீர்ப்பாசனம் போன்ற திட்டங்களுக்கான நிதியினை ஒதுக்காமல் ஓரவஞ்சனை செய்கிறது. மேற்குவங்க மாநிலத்தவர்கள் ஏழைகளாக இருக்கலாம் , ஆனால் நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல. மத்திய அரசிடம் உதவி கேட்பதற்கு எங்களுக்கு எல்லா வகையிலும் உரிமை உண்டு. எனினும் நான் முதல்வராக பதவியேற்ற கடந்த ஒன்றரை ஆண்டுகளில், மத்திய அரசின் உதவியை எதிர்பார்க்காமல் வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்றி வருகிறேன்.
பின்தங்கிய மாவட்டங்களில் சூப்பர் ஸ்பெசலிட்டி மருத்துவமனைகள், 12 மாதிரி பள்ளிகள், ஐ.ஐ.டி.க்களை துவக்கியுள்ளேன். எதிர்க்கட்சிகளுக்கு நான் சவால்விடுகிறேன், தேர்தலின் போது நான் அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறேன். இதில் நான் பொய்யான தகவல் அளித்தால் என்மீது அவதூறு வழக்கு தொடரலாம். பொய்யான தகவலைஅவர்களால் நிரூபிக்க முடியுமா. இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இதே வெறியும் கோபமும் எப்போதும் இருக்கணும்.. அப்போது தான் ஒரு மாநில முதல்வராக இருந்து முடிந்தவரை அந்த மாநிலத்தை முன்னேற்ற முடியும்.. இதுவரை ஆதாயத்துக்காக காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்து விட்டு ஆதாயம் இல்லை என்று தெரிந்தவுடன் கூட்டணியில் இருந்து விலகி மத்திய அரசை ஆட்டிப்படைக்கலாம் என்கிற முடிவுடன் வெளியாகி விட்டீர்.. கூட்டணியில் இருந்த வரை மாநிலத்திற்கு என்ன செய்தீர்கள் என்று அப்போது தோன்ற வில்லையா? இப்போது மட்டும் ஏன் இந்த கபட நாடகம்? தேர்தல் வரப்போகிறது என்றால் மட்டும் மக்களை கவர இம்மாதிரியான வீர வசனங்கள் எங்கிருந்துதான் கிடைக்கிறதோ? எப்படியோ மாநிலமும், நாடும் சிறந்தால் சரி...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.