திருப்பரங்குன்றம்,:மதுரை மாநகராட்சியின் 99 வார்டின் பல பகுதிகளில், தெருவெங்கும் கழிவுநீர் தேங்கியுள்ளன. அள்ளப்படாத குப்பையால், சுகாதாரகேடும், தொற்றுநோய் அபாயமும் உள்ளது.திருப்பரங்குன்றம் மேலப்பச்சேரி, பாலசுப்பிரமணியன் நகர், தேவிநகர், மேலப்பச்சேரி, செக்கடி, பாலாஜிநகர், சந்திராபாளையம் பகுதிகளை கொண்ட இந்த வார்டில், கழிவுநீர் தேங்கி, கொசு உற்பத்தி பண்ணையாக உள்ளது. நிலையூர் கால்வாய், தேவி நகர் ரோட்டில், பல ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோயும் பரவுகிறது.எஸ்.ஆஷா: தேவிநகர் 3வது தெருவில் ரோடு அமைக்கவில்லை. குடிநீர் வசதியும் இல்லை. வீட்டின் கழிவுநீர், ரோட்டோரம் தேங்கி நிற்கிறது. செட்டிகுளம் பாதை அடைக்கப்பட்டதால்தான், இப்பிரச்னை. குப்பை அள்ள ஆட்கள் வருவதில்லை. காய்ச்சல் பாதிப்புள்ளது. மாநகராட்சியான பிறகும் விமோசனம் கிடைக்கவில்லை.கே.சுந்தரி: மேம்பாலப் பணிகளால், குழாய்களில் குடிநீர் சப்ளை இல்லை. மாநகராட்சி லாரியில் சப்ளை செய்ய, ஒருவருக்கு ரூ.5 வீதம் வசூலிக்கின்றனர். பாதாள சாக்கடை இல்லாததால், வீட்டு கழிவுநீர், செப்டிக்டேங்க் கழிவுகள் நிலையூர் கால்வாயில் கலக்கிறது. குப்பையை கால்வாயில் கொட்டுகின்றனர். கால்வாயை ஒட்டியுள்ள ரோட்டில், இரவு மதுகுடிப்பவர்களால், பெண்கள், குழந்தைகள் அவ்வழியே வர முடியவில்லை.தி.மு.க., கவுன்சிலர் எம்.எல்.ராஜ்: நான் எதிர்கட்சி தலைவர் என்பதால், வார்டில்,ஒரு லட்சம் ரூபாய்க்குகூட பணி நடக்கவில்லை. தேவிநகரில் கிணற்றை சீர்படுத்தினால், தண்ணீர் வசதி கிடைக்கும். கழிவுநீர் கால்வாயையும் சீரமைக்க வேண்டியுள்ளது. சந்திராபாளையம் - ஹார்விபட்டிக்கு இணைப்பு பாலம் தேவை. பல முறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை, என்றார்.புகார் தெரிவிக்க 98421 05353
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.