மதுரை: மதுரை ஆரப்பாளையம் முத்தூட் நிதி நிறுவனத்தில் அக்.,3 ல் 37 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டது. இவ்வழக்கில், 4 பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்தும், 10 பேருக்கு ஜாமின் வழங்கியும் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரை சாகுல் ஹமீது, சூர்யா ஆனந்த், செஞ்சி சந்துரு, செந்தில், பாளையங்கோட்டை மனோஜ்ராஜா உட்பட 14 பேர் ஜாமின் மனுக்கள் தாக்கல் செய்தனர்.நீதிபதி சி.டி.செல்வம் முன்னிலையில் மனு விசாரணைக்கு வந்தது. சாகுல் ஹமீது, மதுரை நரிமேடு வினோத்பிரசாத், மணிகண்டன், ரயில்வே காலனி மீனா, செல்வி உட்பட 10 பேருக்கு நீதிபதி ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். சந்துரு, செந்தில், மனோஜ்ராஜா, சூர்யா ஆனந்த் மனுக்களை வக்கீல்கள் வாபஸ் பெற்றனர். நீதிபதி தள்ளுபடி செய்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.