வைகோவின் கொள்கை முரசு வீழ்ந்தது ; நாஞ்சில் சம்பத் அ,தி,மு.க.,வில் உயர்ந்த பதவி கிடைத்தது
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: ம.தி.மு.க.,வின் பிரசார பீரங்கியாக இருந்து வந்த பிரபல நாஞ்சில் சம்பத் இன்று காலையில் முதல்வர் ஜெ.,வை சந்தித்து அ.தி.மு.க.,வில் தன்னை இணைத்து கொண்டார். இவர் தி.மு.க.,பக்கம் சாய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க.,வில் இன்று சேர்ந்தார். இந்த செய்தி ம.தி.மு.க., தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.மனக்கசப்பில் இருந்தார்:


ம.தி.மு.க.,வில் வைகோவுக்கு இணையாக பெரும் திரளாக நாஞ்சில் சம்பத் பேச்சை கேட்க கூட்டம் சேரும். கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக கட்சி பொதுச்செயலர் வைகோவுடன் மனக்கசப்பில் இருந்து வந்த சம்பத் கட்சிப்பணியில் இருந்து விலகி இருந்தார். பிரசாரத்திற்கு எங்குமே செல்லவில்லை.இந்நிலையில் இவர் அ.தி.மு.க., பொதுசெயலரை நேரில் சந்தித்து தன்னை அ.தி.மு.க.,வில் இணைத்து கொண்டார். இவரது விலகல் ம.தி.மு.க.,வுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.


அ.தி.மு.க., வில் உயர்ந்த பதவி :


இன்று காலையில் அ.தி.மு.க.,வில் இணைந்ததும் சம்பத்துக்கு இந்த கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாநில அரசின் சாதனை விளக்க கூட்டங்களில் பங்கேற்க நாஞ்சில் சம்பத் தனது பிரசார பயணத்தை விரைவில் துவங்குவார் என கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (189)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram Mohan - tirunelveli,இந்தியா
06-டிச-201216:32:13 IST Report Abuse
Ram Mohan தோழர்களே ம. தி .மு .க வுக்கு இங்கு கிடைத்து இருக்கும் ஆதரவை பார்த்தால் வியர்த்து தான் போய் இருக்கும்..... நண்பர்களே எனக்கு ஒரு சந்தேகம் கொஞ்சம் நாளுக்கு முன்ன நாஞ்சில் சம்பத் கீழ விழுந்து கால் முறிவுன்னு சொன்னார்களே ??????????? அது அப்படி இல்லை நண்பர்களே .... அ. தி .மு .க போனா தினமும் ,மேடைதோறும் அம்மா காலில் விழனும் அதுக்கு பயிற்சி எடுக்கும் பொது முறிஞ்சு இருக்குமோ ?????? என்னோட சந்தேகம் எல்லாருக்கும் இருக்கும் .... அ . தி . மு . க வுக்கு உழைப்பவர்கள் கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்
Rate this:
Share this comment
Cancel
Mariappan Krishnasamy - Kovilpatti,இந்தியா
05-டிச-201211:35:52 IST Report Abuse
Mariappan Krishnasamy சம்பத் ஐ பொறுத்த வரை இது அவருக்கு மாபெரும் இழப்பு. ஏனென்றால் இனி அவர் வைகோ அவர்களிடம் பயின்ற தன்மானம், சுய கௌரவம், கொள்கை பிடிப்பு....போன்ற அனைத்தையும் இழக்க வேண்டிவரும். இப்பவே முதுகு வளைய ஆரம்பிச்சிருச்சு.ஆம்... வைகோ ஒரு தொண்டரை இழந்து விட்டார் ... பாவம் திரு.சம்பத் அவர்கள் தன் சுயமரியாதை இழந்து விட்டார்.. பல நாஞ்சில்களை உருவாக்குபவர் வைகோ. இதற்கெல்லாம் கவலை கொள்ள போவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
Mu.Muthukumar - Madurai,இந்தியா
05-டிச-201211:27:19 IST Report Abuse
Mu.Muthukumar Money ....Money ....Money ....Money ....
Rate this:
Share this comment
Cancel
Manjunathan - Namakkal,இந்தியா
05-டிச-201209:34:51 IST Report Abuse
Manjunathan ப்ளீஸ் உங்களோட சொந்த விருப்பு வெறுப்பெல்லாம் கொட்டாதீர்கள் அரசியலில் அனைவரும் எதிர்பார்க்காத ஒன்றுதான் நடக்கும் துரோகிகள் யாரென்று அவர்களுக்கே தெரியும் நாம் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியமில்லை
Rate this:
Share this comment
Cancel
vayalum vazhvum-saravanakumar - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
05-டிச-201208:59:06 IST Report Abuse
vayalum vazhvum-saravanakumar அண்ணன் வைகோ அவர்களே தங்கள் பார்க்காத சோதனைகளா இந்த மனிதர் போனதால் என்ன ஆகிவிடும் எப்பவும் போல நீங்கள் செயல்படுங்கள் நிச்சயம் நீங்கள் வெல்வீர்கள் தங்களின் வெற்றி தமிழனின் வெற்றி, தமிழின் வெற்றி ( தயவுசெய்து சகுனி படம் பாருங்கள் ) விவேகமாக செயல்படுங்கள் சாதனை படைக்க தன் பலத்தை தான் நம்பவேண்டும் நீங்கள் சாதிப்பீர்கள்
Rate this:
Share this comment
Cancel
praj - Melbourn,ஆஸ்திரேலியா
05-டிச-201203:45:42 IST Report Abuse
praj கூடிய சீக்கிரம் நாஞ்சில் சம்பத் அமைச்சர் ஆகி தமிழ் நாட்டுக்கு நல்லதிட்டங்கள் தீட்டி நாட்டை முன்னேற்ற பாதையில் நடத்த வாழ்த்துகள்...
Rate this:
Share this comment
Cancel
கனல் கங்கு - Dallas,யூ.எஸ்.ஏ
05-டிச-201201:48:02 IST Report Abuse
கனல் கங்கு கனல் கங்கு
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
05-டிச-201201:41:04 IST Report Abuse
Matt P பேச்சு ஒன்றையே மூலதனமாக வைத்து அரசியல் வாழ்க்கை நடத்தி கொண்டிருக்கும் இவர போன்றவர்கள் இப்படி தான் இருக்க முடியும் என்று தெரிகிறது. பத்தொன்பது ஆண்டுகளாக ம தி மு கவில் ஒட்டி கொண்டிருந்திகிறார்.
Rate this:
Share this comment
Cancel
Raju Sutham - chennai,இந்தியா
05-டிச-201200:24:23 IST Report Abuse
Raju Sutham Dear fris how many of us will vote for good people.if one person doing good things we will not vote for them. we will see party e, religion,etc.but we can write lot of comments. last election all chennai people supported for saidai duraisamy. now where is he? personally he is a good person. but he cannot work individually. if any one of you or your family members in politics then you will know how good politicians are suffering to do a people basic needs. if they are hundred percent honest next election peoples will not support for him or his party will not gove seat for him. this is a fact. so no one ready to loose his own property . he has to do something for his family also.
Rate this:
Share this comment
Cancel
Murtee Krishna - muscut,ஓமன்
04-டிச-201223:41:09 IST Report Abuse
Murtee Krishna உண்மையிலே இது நாடகம் . தமிழக மக்களே இதை நம்பாதிர்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்