சென்னை: ஜாதிய உணர்வுகளை தூண்டி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க., தலைவர் ராம்தாஸ் மீது தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு இன்று அளித்த பதிலில் ராம்தாஸ் தெரிவித்திருப்பதாவது: தி.மு.க. தலைவர் கருணாநிதி என் மீதும் பா.ம.க. மீதும் அவதூறு குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருக்கிறார். சாதிய அமைப்புக்களை திரட்டி, தலித்துக்களுக்கு எதிராக அபாயகரமான அரசியல் செய்வதாகவும், இதற்காக என் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். தமிழகத்தில் சமுதாய மோதல்களின் பின்னணியில் ஒரு திராவிடத் தலைவர் இருப்பதாக கூறியிருந்தேன். இப்போது சமுதாய தலைவர்கள் கூட்டத்திற்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்திருப்பதன் மூலம் அந்தத் தலைவர் தாம் தான் என்பதை கருணாநிதி ஒப்புக் கொண்டிருக்கிறார். நான் சாதி அரசியல் செய்வதாக கூறும் கருணாநிதி 2001 சட்டமன்றத் தேர்தலின் போது, அனைத்து சாதித் தலைவர்களையும் இணைத்து அமைத்தக் கூட்டணிக்கு பெயர் என்ன? பச்சையான சாதிக் கூட்டணிதானே அப்போது இது சாதிக் கூட்டணியா? என செய்தியாளர்கள் கேட்ட போது சாதிக்கும் கூட்டணி என்று கூறினார். அதிகாரத்தை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சாதி அமைப்புகளை அவர் ஒருங்கிணைத்தால் அது சாதிக்கும் கூட்டணி, பழி வாங்கலில் இருந்து காத்துக் கொள்வதற்காக சமுதாய அமைப்புகளை நாங்கள் ஒருங்கிணைத்தால் அது சாதி அரசியலா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அப்படி போடு .......ராமதாஸ் வும் மு.க மாதிரி தேதி வாரியா பதிலடி கொடுக்க ஆரம்பிச்சாச்சு ..... சாக்கடை நல்ல நாறும்..... மு.க வுக்கு என்ன சொன்னாலும் திருந்தாது..... உன் சாயம் தான் எல்லா விசையதில்லும் வெளுத்து போச்சு .... வாங்கு வாங்கு நல்ல வங்கி காட்டு... தொகுதிக்கு சாதி வாரியா நேர்காணல் நடத்தி அதன் பேரில் வேட்பாளர்கள் தேர்வு செய்து ஆரம்பித்தது அய்யா மு.க தானே

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.