புதுடில்லி: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சம்பா பயிர்களை காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிடக்கோரி தமிழகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இரு மாநில தண்ணீர் தேவை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதன்படி, இரு மாநில அரசுகளும் தங்களது தண்ணீர் தேவை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தன. இதைத் தொடர்ந்து தமிழகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதிடுகையில், நடுவர் மன்றம் அனுமதித்த அளவை விட கர்நாடக அரசு அதிகப்படியான பாசன நிலங்களை உருவாக்கியுள்ளதாகவும், குடிநீர் தேவைக்காக 23 டி.எம்.சி., தண்ணீர் தேவை என கர்நாடகம் கூறுவது தவறு என்றும், தண்ணீர் திறக்கப்படாவிட்டால் தமிழகத்தின் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டினார். தமிழக வழக்கறிஞரின் வாதம் முடிவடைந்துள்ள நிலையில், நாளை கர்நாடக அரசின் வழக்கறிஞர் தனது வாதத்தை எடுத்து வைக்கவுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.