Advertisement
மோடி மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2012,17:43 IST

புதுடில்லி: கிருஷ்ணா கோதாவரி எண்ணெய் வயல் பகுதியில், 2 தனியார் நிறுவனங்களுக்கு இலவசமாக எரிவாயு வயல் ஒதுக்கப்பட்டது குறித்த விசாரணை நடத்தப்படவேண்டும் என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். கடந்த 2002ம் ஆண்டு தனியார் நிறுவனங்களான ஜியோ குளோபல் மற்றும் ஜூபிளியன்ட் எம்ப்ரோ நிறுவனம் ஆகியவற்றிற்கு ரூ. 20 ஆயிரம் கோடி மதிக்கத்தக்க எரிவாயு வயல்கள் இலவசமாக ஒதுக்கப்பட்டதாகவும், இதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு தொடர்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதே போல், ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் ஜியோ குளோபல் நிறுவனத்திற்கு 10 சதவீத எரிவாயு வயல்களை ஒதுக்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை விட மிகப்பெரியது என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (5)
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
04-டிச-201223:19:24 IST Report Abuse
Nallavan Nallavan கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் எரிவாயு அதிகம் கிடைத்து வருகிறது. அது ஆந்திராவில் உள்ள பகுதி ஆந்திராவில் காங்கிரஸ் அரசுதான் உள்ளது. அதில் மோதி எப்படி தனக்கு "நட்பாக" உள்ள நிறுவனங்களுக்காக உரிமம் பெற முடியும்? கேஜ்ரிவால் சேற்றை வாரி இறைக்கிறார் ஐ.ஐ.டி. தில்லியில் படித்தவர் ஒரு கழக அரசியல்வாதி போலப் பேசுகிறார்
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Guru - Chennai  ( Posted via: Dinamalar Android App )
04-டிச-201220:09:14 IST Report Abuse
Guru மிக தெளிவான கேள்விகளை முன்வைத்துள்ளார் கெஜ்ரிவால். மோடியும், காங்கிரஸும் ரகசிய உடன்படிக்கை வைத்தி்ருப்பதை அம்பலப்படுத்தி் விட்டார். பலே கெஜ்ரிவால்!
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
ram prasad - Sri rangam,இந்தியா
04-டிச-201219:46:17 IST Report Abuse
ram prasad இப்போ அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ்சின் கைக்கூலி என்று சொல்ல ஒரு கூட்டமே ரெடியா இருக்குமே யாருகிட்ட ?
Rate this:
4 members
0 members
12 members
Share this comment
K.NAKARAJAN - sivakasi,இந்தியா
04-டிச-201218:38:34 IST Report Abuse
K.NAKARAJAN கேஜ்ரிவால் அரசியலுக்கு வந்ததே மாஸ்க் அரசியல் தான் . எதையாவது சொல்லி குழப்ப வேண்டியது .குழம்பிய கேஜ்ரிவால் அரசியலுக்கு வந்ததே மாஸ்க் அரசியல் தான் . எதையாவது சொல்லி குழப்ப வேண்டியது .குழம்பிய குட்டையில் முடிந்த வரை மீன் பிடிக்க வேண்டியது .மோடி இதற்கு கைமாறாக என்ன வாங்கி னார்.அவருடைய சொத்து எவ்வளவு ? கேஜ்ரிவால் விளக்க வேண்டும் . கேஜ்ரிவால் தடாலடி யாக சமூக சேவகர் என்றார் . அரசியலில் கை வைக்கிறார் .யாரோ கோடி கணக்கில் பணம் தருகிறார் கேஜ்ரிவால் ஒரு அரசியல் நடிகர் . அரசியல் இயக்குனர் யார் ? என்பதே இன்றைய கேள்வி ??????????
Rate this:
6 members
1 members
8 members
Share this comment
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
04-டிச-201222:22:33 IST Report Abuse
Mohamed Nawazகாங்கிரஸ் ஊழலை வெளிபடுத்தியபோது இனித்தது இப்போது கசக்கிறதோ...
Rate this:
1 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.