இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு தடை : சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அதிரடி
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு (ஐ.ஒ.ஏ.,), சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஒ.சி.,) இன்று தடை விதித்தது.

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு (ஐ.ஒ.ஏ.,) நாளை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கு முன், தலைவர், துணைத் தலைவர், பொருளாளராக அபய் சிங் சவுதாலா, வீரேந்திர நானாவதி, ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர். பொதுச்செயலராக காமன்வெல்த் ஊழலில் சிக்கி, சிறை சென்ற லலித் பனோட் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஊழல் கறை படிந்த கல்மாடி, வி.கே.வர்மா, லலித் பனோட் ஆகியோர் ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என, சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஒ.சி.,) எச்சரித்தது. தேர்தலை ஐ.ஒ.சி., விதிப்படி நடத்த வேண்டும் எனவும், இல்லையெனில், ஐ.ஒ.ஏ.,யை தற்காலிகமாக "சஸ்பெண்ட்' செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் எச்சரித்தது.
இந்நிலையில் இன்று சுவிட்சர்லாந்தின் லாசனேயில் ஐ.ஒ.சி.,யின் தலைமை அதிகாரிகள் கூட்டம் துவங்கியது. இதில் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் விதிகளை ஏற்காத, காரணத்தினாலும், அருசின் தலையீடு காரணமாகவும் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை காரணமாக இந்திய வீரர்கள் இந்திய கொடியுடன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பது தடை செய்யப்படும் எனவும், இந்தியாவுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் நிதியுதவி ஏதும் வழங்காது என கூறப்படுகிறது.
இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில், இந்திய ஒலிம்பிக் சங்க அதிகாரிகள் கலந்து கொள்ள முடியாது. ஏற்கனவே ஈராக், குவைத் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.
தடை எதிர்பாராதது: மத்திய அரசு : இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து , தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், இந்த தடை, விளையாட்டுத்துறைக்கு எதிர்பாராதது என்றும், ஐ.ஓ.ஏ., தேர்தல் தொடர்பாக மத்திய அரசு ஐ.ஓ.சி.,க்கு கடிதம் எழுதியிருந்தது. ஆனால் இதற்கு பதில் கிடைக்கவில்லை என கூறினார்.
AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (26)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
05-டிச-201215:45:58 IST Report Abuse
Narayan எங்கும் ஊழல் எதிலும் ஊழல். 125 வருட காங்கிரஸ் எவ்வளவோ பண்ணீட்டாங்க இத பண்ண மாட்டாங்களா??? ஊழல் செய்து மாட்டி ஜெயிலில் இருந்த கல்மாடி, பானாட், உங்களுக்கு கரெக்டா கட்டிங் குடுப்பாங்க அப்படின்னு, அவுங்கள மறுபடியும் உக்காத்தி வெச்சு, நம் நாட்டின் மானமே போச்சு.
Rate this:
Share this comment
Cancel
Karthik - coimbatore,இந்தியா
05-டிச-201213:18:36 IST Report Abuse
Karthik இதுக்கெல்லாம் நாங்கள் வெட்கமே படமாட்டோம், எங்களுக்கு swiss bank- ல் பணம் இருக்கு, நாடு எப்படி போனால் எங்களுக்கு என்ன?
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
05-டிச-201213:17:13 IST Report Abuse
LAX வீட்டுக்கு அடங்காதது வெளியில் அடிபட்டால்தான் அடங்கும். அதுபோலதான் இதுவும். என்னதான் நம் மக்கள் ஊழல் வாதிகள் பதவியில் நீடிப்பதை எதிர்த்தாலும் அதை காதில் வாங்காமல் அரசியல்வா(வியா)திகள் தங்கள் இஷ்டம் போல் நடந்தாலும், அந்த அதிகார துஷ்ப்ரயோகமெல்லாம் சர்வதேச அளவில் எடுபடாது என்பதற்கு இது மிக நல்ல பாடம். இந்திய ஊழல் அரசியல்வாதிகள் தங்கள் ஊழல் கொடியை சர்வதேச அளவில் பறக்கவிட்டுள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel
Ganesh - Tsukuba,ஜப்பான்
05-டிச-201212:51:12 IST Report Abuse
Ganesh ஊழலே நடக்கல ஜீரோ லாஸ் என்று இந்தியர்களை ஏமாத்தி அடுத்த தேர்தல்ல ஓட்டு கேட்டா நாங்க வேணாம் ஓட்டு போடலாம் ஆனால் சர்வதேச அளவில் உங்க பருப்பு வேகாது. எல்லா களவாணித்தனத்தையும் செய்தவங்களை அரசின் தலையீடு காரணமாக IOA பதவிகளில் அமர்த்தினால் இந்திய மக்கள் வேணாம் சகித்துகிட்டு இருப்பாங்க, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் சகித்துக்கொண்டு கூப்பிட்டு விருந்து வைக்க மாட்டாங்க...
Rate this:
Share this comment
Cancel
MrBoy - India,இந்தியா
05-டிச-201209:30:05 IST Report Abuse
MrBoy போச்சா...? இந்த கேடு கெட்ட ஊழல் வாதிகள் செய்யும் ஒவ்வொரு செயலாலும் ... வாங்குற ஒன்னு ரெண்டு வெண்கல பதக்கமும் இனி வரதா..? எனக்கென்னமோ இது சரின்னு படுது ...ஏன்னா, நம்ம ஆளுங்க வெளி நாட்டுக்காரன் சொன்ன தான் கேப்போம் .. பயப்படுவோம்... இனிமே இப்படி சொல்லிக்கொள்ளலாம் "இந்தியா மட்டும் ஒலிம்பிக் போட்டியில கலந்துசுன்னா பதக்க பட்டியலில் முதலில் இருக்கும் " ன்னு வெட்டி பந்தா விடலாம்
Rate this:
Share this comment
Cancel
manivannan - singapore  ( Posted via: Dinamalar Android App )
05-டிச-201202:37:25 IST Report Abuse
manivannan இது ஒவ்வொரு இந்தி்யனுக்கும் அவமானம்
Rate this:
Share this comment
Cancel
Palanivelrajan Shanmugavelu - Hyderabad,இந்தியா
05-டிச-201201:25:45 IST Report Abuse
Palanivelrajan Shanmugavelu மானம் போகுது இந்த ஊழல் பெருச்சாளிகளால்.... இதைவிட கேவலம் வேறு எதுவும் இருக்க முடியுமா ?
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
04-டிச-201223:27:50 IST Report Abuse
Nallavan Nallavan காங்கிரஸ்-திமுக அல்லக்கைகள் பெருமைப்படவேண்டிய விஷயம். எங்கே அந்த அடிமைகள்?
Rate this:
Share this comment
Cancel
Dennzel - Chennai  ( Posted via: Dinamalar Android App )
04-டிச-201223:19:42 IST Report Abuse
Dennzel இந்தி்ய விளையாட்டு துறைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமாணம். உபயம்: CONGRESS GOVT.
Rate this:
Share this comment
Cancel
SUDHAKAR N - vellore,இந்தியா
04-டிச-201222:24:11 IST Report Abuse
SUDHAKAR N காமன் வெல்த் கேம் ல அடிச்ச கொள்ளை போதாதுநு இது வேறைய...? மானங்கெட்ட இந்த காங்கிரஸ் இருக்கிற வரை நாடு உருப்படாது... அடுத்து ஆப்பு ரெடி யா இருக்கு..கவலை படதிங்கோ...
Rate this:
Share this comment
Siva K - Chennai,இந்தியா
05-டிச-201210:52:04 IST Report Abuse
Siva KWe need to thro out this ruling party & allies (Anna Kaigal & Peruchaligal) during 2014 elections.. If Cong party thrown out, we are absolutely safe and really developing nation.. 60+ years growth from this party rats are enough.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்