திருவனந்தபுரம்: நிலமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கேரள முன்னாள் முதல்வர் மீதான விசாரணை அறிக்கை குறித்து அட்வகேட் ஜெனரலின் கருத்தை அறிய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த இடதுசாரிகள் ஆட்சியின் போது முதல்வராக இருந்த அச்சுதானந்தன், காசர்கோடு மாவட்டத்தில், தனது உறவினர் சோமன் என்பவருக்கு, விதிமுறைகளை மீறி நிலம் ஒதுக்கீடு செய்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். இதில் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், அப்போதைய வருவாய்த்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அச்சுதானந்தன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். வழக்கு கோழிக்கோடு கோர்ட்டில் நடந்து வருகிறது.இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அச்சுதானந்தன் மனு செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி அரசின் கருத்தினை கேட்டு உத்தரவிட்டிருந்தார். தற்போதைய கேரள அட்வகேட் ஜெனரலில் கருத்தினை கேட்க முடிவு செய்திருப்பதாக பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.