புதுடில்லி: மூன்று நாள் பயணமாக பாக். உள்துறை அமைச்சர் வரும் 11-ம் தேதி இந்தியா வர உள்ளார். பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான்மாலிக், மூன்று நாள் பயணமாக வரும் 11-ம் தேதி இந்தியா வரஉள்ளார். முன்னதாக கடந்த மாதம் மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான். இது குறித்த தகவல் பாகிஸ்தானிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கு பாகிஸ்தானில் நடந்து வருகிறது.இந்த சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அழைப்பின் பேரில் வரும் 11-ம் தேதி பாக். உள்துறை அமைச்சர் இந்தியா வர உள்ளார். பிரதமர் மன்மோகன்சிங், ஜனாதிபதி உள்ளிட்டோரை சந்தித்து பேச உள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.