செம்பரம்பாக்கம் : தொடர்மழை காரணமாக சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கி வரும் ஏரி களுக்கு, நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் ஏரிகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த இரு நாட்களாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. நீர்வரத்து அதிகரிப்பு இதனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில், நேற்று காலை நிலவரப்படி, 11 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இதனால், ஏரியில் வினாடிக்கு 1,747 கனஅடி வீதம் நீர்வரத்து காணப்பட்டது. சோழவரம் ஏரி நீர்பிடிப்பு பகுதியில், 9 செ.மீ., புழல் ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில், 8.4 செ.மீ., செம்பரம்பாக்கம் ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில், 9.3 செ.மீ., என்ற அளவில் மழை பதிவானது. இதனால், இந்த ஏரிகளுக்கும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்து வருவதால், ஏரிகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. நீர்இருப்பு திருப்தி இல்லை தற்போதைய நிலையில், நான்கு ஏரிகளின் மொத்த நீர் இருப்பு, 4.5 டி.எம்.சி., என்ற அளவில் உள்ளது. இவற்றின் மொத்த கொள்ளளவு, 11 டி.எம்.சி., ஆகும். இன்னும், 6.5 டி.எம்.சி., அளவிற்கு குடிநீர் ஏரிகளில் மழைநீரை சேமிக்க முடியும் என்பதால், சென்னை மாநகர மக்கள் குடிநீர் தேவைக்கு கனமழையை எதிர்பார்த்து உள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஏரிகளின் தற்போதைய நீர்இருப்பு திருப்தியாக இல்லை. வடகிழக்கு பருவமழை அதிதீவிரமானால் மட்டுமே இந்த ஆண்டு குடிநீர் ஏரிகள் முழுமையாக நிரம்பும். இந்த மாதம் முழுவதும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கோடையில் சென்னை நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க முடியும் என்று நம்புகிறோம்,' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.