சென்னை :
மின்வெட்டால், எழும்பூரில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.,)
மூடப்பட்டது. இதனால், மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.எழும்பூர்,
பாந்தியன் சாலையில் பாரத் ஸ்டேட் வங்கி உள்ளது. இங்கு நேற்று மின்வெட்டு
காரணமாக "முற்பகல் 11:00 மணி முதல் நண்பகல் 1:00 மணி வரை வங்கி
திறக்கப்படாது. 1:00 முதல் 3:30 மணி வரை இயங்கும்' என,
அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 1:00 மணிக்கு மேலாகியும் வங்கி
திறக்கப்படவில்லை. இதனால், அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள
வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.இதுகுறித்து, வங்கி
வாடிக்கையாளர் ஒருவர் கூறியதாவது:நான் இந்த வங்கியில் பல ஆண்டுகளாக கணக்கு
வைத்திருக்கிறேன். இங்கு, அரசு அலுவலர்கள் மற்றும் வயதானவர்கள் என, பலர் பல
தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். வங்கி மூடப்படுவதற்கு மின்வெட்டு தான்
காரணம் என்று கூறினர்.ஆனால், 1:00 மணிக்கு மேல் மின்சாரம் வந்தும், வங்கி
திறக்கப்படவில்லை. காரணம் கேட்டால், "சர்வர்' பிரச்னை என்று கூறி
மழுப்புகின்றனர். எழும்பூரில் உள்ள இரண்டு பாரத் ஸ்டேட் வங்கிகளுமே
மூடப்பட்டு தான் உள்ளன. மேலும் ஏ.டி.எம்., நிலையமும் மூடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.