சென்னை
: "பிளாஸ்டிக் டப்பாவில், குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்தனுப்ப
வேண்டாம்' என, பெற்றோர் - ஆசிரியர் கலந்துரையாடலில், தலைமை ஆசிரியர்
அறிவுரை கூறினார். திரு.வி.க., நகர், கோபாலபுரத்தில், சென்னை நடுநிலை
பள்ளி உள்ளது. இதில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
மாணவர்களின் கல்வி நிலை, கற்றல் திறன் குறித்து மாதம் ஒருமுறை பெற்றோர் -
ஆசிரியர், கலந்துரையாடல் நடந்து வருகிறது. இந்த மாத கலந்துரையாடல்,
சமீபத்தில் நடந்தது. இதில், மழைக் காலத்தில் குழந்தைகளுக்கு பரவும்
நோய்கள், விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குழந்தைகளின் கல்வி
நிலை குறித்து கலந்துரையாடப்பட்டது.
அப்போது, பள்ளி தலைமையாசிரியர், பெற்றோர்களிடம் கூறியதாவது:நாகரிக வளர்ச்சி என கருதி, பலர் குழந்தை
களுக்கு,
பிளாஸ்டிக் டப்பாவில் உணவுகளை கொடுத்து அனுப்புகின்றனர். சூடான உணவு
பொருட்களை, பிளாஸ்டிக் டப்பாவில் கொடுப்பதால், வெப்பம் தாங்காமல்,
பிளாஸ்டிக்கின் ரசாயன கலவைகள் உணவு பொருளுடன் கலக்கும்.இதனால்,
குழந்தைகளுக்கு, பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பிளாஸ்டிக்
டப்பாவில், சாப்பாடு கொடுத்தனுப்ப வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.