சென்னை : காற்றில் பறக்கும் இரும்பு தூளால், எண்ணூரில் வசிக்கும் மக்கள், சுவாச கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.இரும்பு குடோன்எண்ணூர் விரைவு சாலையில், பெரிய காசிகோவில் குப்பம் அருகே, ஐந்து கிரவுண்டு நிலப்பரப்பில் தனியார் திறந்தவெளி குடோன் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் சென்னை துறைமுகத்திற்கு வரும் இரும்பு தூள், இந்த குடோனுக்கு லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. இங்கு, மலைபோல் குவிக்கப்பட்டு, தேவைப்பட்டோருக்கு வினியோகிக்கப்படுகிறது.இந்த குடோனை சுற்றி, எண்ணூர் பெரிய காசிகோவில் குப்பம், எர்ணாவூர் குப்பம், எண்ணூர் குப்பம், எர்ணாவூர் பாரத் நகர், அன்னை சிவகாமி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில், பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த குடோனில் இரும்பு தூளை டன் கணக்கில், லாரிகளில் அள்ளி கொட்டும்போது இரும்பு தூள் காற்றில் வேகமாக பரவுகிறது.சுவாச கோளாறுகாற்றில் கலந்து வரும், இரும்பு தூளை சுவாசிக்கும் பொதுமக்கள் இருமல், சளி மற்றும் சுவாச கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். குடியிருப்புகள், சமைக்கும் உணவுகள் மற்றும் தண்ணீர் தொட்டிகளில், இரும்பு தூள் படர்கிறது.நடவடிக்கை இல்லைஇதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த வனிதா கூறியதாவது:குடோனை வேறு இடத்திற்கு மாற்றும்படி போராட்டம் நடத்தினோம். வேறு இடத்தில் இருக்கும், குடோனில் கொட்டுகிறோம் என, உறுதி அளித்தனர்.ஆனால், மீண்டும் இதே இடத்தில், கொட்டி வருகின்றனர். இப்பிரச்னையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல முறை புகார் தெரிவித்தோம். ஆனால், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.