சோமனூர்:மின்வெட்டை
கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்த விசைத்தறியாளர்கள் முடிவு
செய்துள்ளனர்.கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி
உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், பகுதி வாரியாக உறுப்பினர்களிடம்
கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது நிலவும்
மின்வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வு குறித்து உறுப்பினர்களின் கருத்துகளை
கேட்டு, வரும் 7ம்தேதி நடக்கும் கூட்டுக்கமிட்டி கூட்டத்தில் விவாதிக்க
உள்ளனர். கூட்டுக்கமிட்டி கூட்டத்தில் பல்வேறு போராட்ட அறிவிப்புகள்
வெளியிடப்படும் என தெரிகிறது.இந்நிலையில், சோமனூரை அடுத்த மாதப்பூரில்
நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் சோமனூர் சங்கத்தலைவர் பழனிசாமி
பேசியதாவது:தற்போது அமலில் உள்ள பல மணி நேர மின்வெட்டால் ஜவுளித்தொழில்
நசிந்து விட்டது.
விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் என பல ஆயிரம் பேர்
வேலை இழந்து தவிக்கும் நிலை உருவாகி உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக விசைத்தறி
தொழிலுக்கு மின் கட்டணத்தில் சலுகை வழங்கி வந்த மின்வாரிய ஆணையம், தற்போது
110 சதவீதம் மின் கட்டணத்தை அதிகரித்துள்ளது. இதனால், கூலிக்கு நெசவு
செய்யும் விசைத்தறியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மின் கட்டணத்தை
உயர்த்தினால், தடையில்லாத மின்சாரம் கிடைக்கும், என, ஆணையம் கூறியது.
ஆனால், இன்று 16 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. டீசல் விலையும்
அதிகரித்து விட்டது. தொழிலாளர்களின் கூலியும் உயர்ந்து விட்டது. இதனால்,
விசைத்
தறிகளை ஓட்ட முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில்
இரண்டு மணி நேரம் மட்டும் மின் தடைசெய்யப்படுகிறது. தடையில்லாத மின்சாரம்
வழங்கும் வரை பல்வேறு போராட்டங்களை நடத்த, கூட்டு கமிட்டி முடிவு
செய்துள்ளது. சங்க உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.செயலாளர் குமாரசாமி, பொருளாளர் பூபதி உள்ளிட்ட பலர்
பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.