திருவள்ளூர் : விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்தது. மாவட்டத்தில், மிக அதிகபட்சமாக, பூண்டியில், 110.60 மி.மீட்டர் மழை பதிவானது. வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, நேற்று முன்தினம் முதல் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது. நேற்று பகலிலும் பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஏற்கனவே, பாதாள சாக்கடை பணிகள் காரணமாக, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல தெரு சாலைகள் சேதம் அடைந்து இருந்தன. இந்த மழை காரணமாக, அந்த சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே சிரமப்பட்டனர். இதனால், அவர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நகரின் முக்கிய சாலைகளான ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை போன்ற இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்ததால், மழை பாதிப்பில் இருந்து மாணவர்கள் தப்பித்தனர். மழை காரணமாக, சாலையோர கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. கடந்த, 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் மிக அதிகபட்சமாக பூண்டியில், 110.60 மி.மீட்டரும், குறைந்தபட்சமாக, ஆர்.கே.பேட்டையில், 38 மி.மீட்டரும் மழை பதிவானது. பொன்னேரி, தாமரைப்பாக்கம் பகுதியில் தலா, 100 மி.மீட்டரும், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, திருவாலங்காடு, செங்குன்றம் ஆகிய பகுதிகளில் தலா, 80 மி.மீட்டர் மழையும் பதிவானது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.