குன்னூர்:"மாவட்ட
அரசு போக்குவரத்து பஸ்கள் இயக்கத்தில் உள்ள குளறுபடிகளை களைய நடவடிக்கை
எடுக்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.நீலகரியில் மொத்தம் 284 அரசு
பஸ்கள் இயக்கப்படுகின்றன. கடந்த வாரம் 30 புதிய பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால்
போதுமான ஊழியர்கள் இல்லாததால், மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு "டிப்போவிலும்' 5
பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், "தங்கள் குடும்பத்தில்
விஷேசங்கள் மற்றும் அவசர காரியங்களுக்கு கூட, தற்போது பணியில் உள்ள பல
டிரைவர் மற்றும் கன்டக்டர்களுக்கு விடுப்பு மறுக்கப்படுகிறது,' என பல
ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
"போக்குவரத்து கட்டுப்பாட்டு
அலுவலர்கள் சிலர், குறிப்பிட்ட ஊழியர்களுக்கு மட்டும் விடுப்பு
வழங்குவதாகவும், அவசர விடுப்பு எடுத்தால், "ஆப்சென்ட்' போட்டு சம்பளத்தில்
இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.
சமீப காலமாக ஆளுங்கட்சியை சேர்ந்த
குறிப்பிட்ட ஊழியர்களுக்கு பஸ் இயக்க பணி ஒதுக்காமல், மேற்பார்வை பணிகள்
மட்டுமே ஒதுக்கப்படுகிறது; விபத்தில் சிக்கிய மற்றும் மாரடைப்பு ஏற்பட்ட
சில ஊழியர்களுக்கு இலகு பணிகள் அளிக்கப்படுவதில்லை,' என்ற குற்றச்சாட்டும்
எழுந்துள்ளது."பீக் ஹவர்களில்' பஸ்கள் இல்லை:குன்னூர்-ஊட்டி வழித்தடத்தில்
போதுமான பஸ்கள் இயக்கப்படுவதில்லை. குறிப்பாக, "பீக் ஹவர்' நேரமான காலை
மற்றும் மாலை நேரங்களில் போதிய பஸ்கள் இல்லாததால், பள்ளி செல்லும்
மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்லும் அலுவலர்கள் பஸ் கிடைக்காமல்
அவதியடைகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மீண்டும் இந்த
வழித்தடத்தில் தனியார் வேன்கள் மற்றும் மினி பஸ்கள் அதிகளவில்
இயக்கப்படுகின்றன.இதன் காரணமாக போக்குவரத்து கழகத்துக்கு வருவாய் இழப்பு
ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி "ஓவர்லோடால்' தனியார் வாகன விபத்துகளும்
அதிகரித்து வருகின்றன.எனவே, மாவட்ட போக்குவரத்து கழகத்தில் ஏற்பட்டுள்ள
குளறுபடிகளை களைந்து, மக்கள் போதுமான பஸ்கள் இயக்கவும், போக்குவரத்து
ஊழியர்கள் அதிகளவில் நியமிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்பதே உள்ளூர் மக்களின் வலியுறுத்தலாக உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.