திருப்பூர்:திருப்பூர்
ரயில்வே ஸ்டேஷன் மற்றும் ரயில்களில் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.டிச.,
6, பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத
வகையில், நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் சோதனைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரயில்வே ஸ்டேஷன் மற்றும் ரயில்களில் போலீஸ்
கண்காணிப்பு அதிகரிக்கப்பட் டுள்ளது.
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில்
ரயில்வே போலீசார் நேற்று காலை முதல் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு
பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழையும் பயணிகள், மெட்
டல் டிடெக்டர் பொருத்தப்பட்ட நுழைவாயில் வழியாக அனுமதிக்கப்படு கின்றனர்.
அவர்களின் உடமைகளும் மெட்டல் டிடெக்டர் மூலம்
சோதிக்கப்படுகின்றன.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சோதனை நடத்தப்படுவதாகத்
தெரிவித்த ரயில்வே போலீசார், வரும் 7ம் தேதி வரை தீவிர பாதுகாப்பு
நடவடிக்கை தொடரும், என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.