DISTRICT NEWS | மலைவாழ் மக்களுக்காக சரக்கு வாகனத்தில் பறக்கும் ரேஷன் பொருட்கள்| Dinamalar

தமிழ்நாடு

மலைவாழ் மக்களுக்காக சரக்கு வாகனத்தில் பறக்கும் ரேஷன் பொருட்கள்

Added : டிச 04, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

பொள்ளாச்சி:வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சிக்குட்பட்ட தேவிபட்டணம் 10 வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது தேவிப்பட்டணம் நியாய விலைக்கடை எண் ஜி.பி.,011. இக்கடைக்கு மொத்தம் 790 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் தம்மம்பதி மலைவாழ் பகுதி மக்களுக்கு மட்டும் 150 ரேஷன்கார்டுகள் உள்ளன. மீதமுள்ள ரேஷன் கார்டுகள் தேவிபட்டணம், வேட்டைக்காரன் புதூர் பகுதியை சேர்ந்தது.
தேவி பட்டணத்திலிருந்து ஏழு கி.மீ., தொலைவிலுள்ளது தம்மம்பதி மலைவாழ் கிராமம். இப்பகுதியில் வனவிலங்குகளின் தொல்லை அதிகமாக இருப்பதால் இங்கு ரேஷன் கடை அமைக்கப்படவில்லை. அதனால் இப்பகுதியில் வசிக்கும் 150 குடும்பத்தை சேர்ந்தவர்கள் மாதம் ஒரு முறை வனப்பகுதியில் வசிக்கும் மக்களின் தலையாரிக்கு மொபைல் மூலம் ரேஷன்கடையிலிருந்து தகவல் தெரிவிக்கப்படும்.
அதன் பின்பு, அங்கிருந்து ஒரு மினி சரக்கு ஆட்டோவில் பொதுமக்கள் தங்கள் ரேஷன் கார்டுக்கான பொருட்களை வாங்கி, சரக்கு வாகனத்தில் ஏற்றுகின்றனர். அங்கிருந்து பொருட்கள் தம்மம்பதிமலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன.

ரேஷன் பொருட்கள் அனைத்தும் சரக்கு வாகனத்தில் பொதுமக்களால் ஏற்றப்படும். அதன் பின்பு மக்கள் அனைவரும்
ஒரு ஆட்டோவில் பயணிக்கின்றனர். அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் அனைத்தும் மற்றொரு வாகனத்தில் பயணிக்கிறது. 1998ல் தம்மம்பதி மலை வாழ் மக்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை இதே போன்ற நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.இது குறித்து ரேஷன்கடை எழுத்தர் மனோன்மணி கூறியதாவது:ரேஷன் அரிசியை சிறு மூட்டைகளாக சரக்கு வாகனத்தில் ஏற்றுவதால் அரிசி கடத்துகிறோம் என்று நினைக்கின்றனர். தம்மம்பதி மலைவாழ் மக்கள் தங்கள் கார்டுக்கான பொருட்களை வாங்குவதற்காக இது போன்ற நடைமுறையை பின்பற்றுகின்றனர்.இதை உணவுகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரும் ஒரு முறை பார்த்துவிட்டு விசாரணை செய்தனர். இது குறித்து உணவு பொருள் வழங்கு துறை தாசில்தாரிடம் தெரிவித்துள்ளோம். மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் ரேஷன் கடை அமைப்பதற்கான வழிஇல்லை. அதோடு ரேஷன் கடையில் பொருட்கள் இருப்பது தெரிந்தால் அவற்றை வனவிலங்குகள் புகுந்து துவம்சம் செய்துவிடும் அதனால் தான் ஏழு கி.மீ. தொலைவிலுள்ள ரேஷன் கடைக்கு வந்து வாங்கி செல்கின்றனர் என்றார்.தம்மம்பதி மலைவாழ் பகுதியில் வசிக்கும் தலையாரி முருகன்: வனப்பகுதியில் ரேஷன் கடை அமைப்பதற்கு வழியில்லை என்று அரசு சொல்கிறது. ஏழு கி.மீ. தூரத்துக்கு வந்து அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்கிறோம். இதை நம்பித்தான் எங்கள் வாழ்க்கை இருக்கிறது.டிரைவர் குப்புதுரை : ரேஷன் அரிசியை மூட்டைகளாக கட்டி எடுத்துச்செல்வது சட்டப்படி
குற்றம் என்று தெரியும். இருந்தாலும் மலைவாழ் மக்களின் நலன் கருதி ரேஷன் அரிசியை எடுத்துச்செல்கிறேன். மலைவாழ் மக்கள் முன்னே சரக்கு வாகனத்தில் ரேஷன் கார்டு
களோடு செல்வதால் எனக்கு பிரச்னை இல்லை.ரேஷன் கடை அளவையர் ராமகிருஷ்ணன்: சட்டவிரோதமாக நாங்கள் ரேஷன் அரிசியை கொடுக்க மாட்டோம். அந்த அந்த கார்டு பில்லுக்கு தகுந்த அளவில் தான் பொருட்கள் வழங்குகிறோம். அதிகாரிகளுக்கு சந்தேகம் இருந்தால் சோதித்துக்கொள்ளட்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை