திருப்பூர் மாவட்டத்துக்கு 58 நேரடி நியமன உதவியாளர்கள் நியமனம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்துக்கு, நேரடி நியமன உதவியாளர்களாக 58 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதால், பணிச்சுமை குறையுமென வருவாய்த்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடந்த, ஒருங்கிணைந்த சார்நிலை பணியாளருக்கான தேர்வு மூலமாக, திருப்பூர் வருவாய் மாவட்டத்துக்கு 58 நேரடி நியமன உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டம் உதயமானபோது, ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் இருந்த பணியாளர்கள், கலெக்டர் அலுவலக உதவியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதனால், மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறையில் பணியிடங்கள் காலியாக இருந்தன. அரசு நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டியிருந்ததால், பணியில் இருந்த, உதவியாளர்களிடம் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்துக்கு நேரடி நியமன உதவியாளராக 58 பேர் நியமிக்கப்பட்டுள் ளது வரவேற்பை பெற்றுள்ளது.

கலெக்டர் அலுவலக உதவியாளர் பணியிடங்களில், 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட வழங்கல் பிரிவு அலுவலக உதவியாளர்களாக மூவர், மாவட்ட கலால் பிரிவு அலுவலக உதவியாளராக ஒருவர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக உதவியாளராக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக உதவியாளராக ஒருவர், இலங்கை அகதிகள் மற்றும் மறுவாழ்வு சிறப்பு வருவாய் ஆய்வாளராக ஒருவர், ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் உதவியாளராக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அனைத்து தாலுகா அலுவலகங்களுக்கும் தேவையான அளவுக்கு உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக, திருப்பூர் தாலுகாவில் ஒன்பது உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தாராபுரத்தில் ஆறு; காங்கயம், அவிநாசி, உடுமலை தாலுகாக்களில் தலா ஐந்து; மடத்துக்குளத்தில் நான்கு; பல்லடம் தாலுகாவில் மூன்று உதவியாளர்கள் என தாலுகா அலுவலக உதவியாளர்களாக 37 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில்,"நேரடி நியமன உதவியாளர்கள் நியமிக்கப்பட்டதன் மூலமாக, தாலுகா அலுவலக காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. கலெக்டர் அலுவலகத்தில் 12 உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், பணிப்பளு குறைவதுடன், பணிகள் விரைவாக நடக்கும். மாவட்ட வழங்கல் பிரிவுக்கும் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், ரேஷன் கார்டு பணி வேகமெடுக்கும். ஒட்டுமொத்தமாக, மாவட்ட அளவில் 70 சதவீத காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன,' என்றனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்