நியூயார்க்: பயங்கரவாத தாக்குதல்களில் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 5 நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக நாடுகளில் பல்வேறு பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத அமைப்புகளால் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதில் தற்கொலைப்படை தாக்குதல்கள், கார்குண்டு தாக்குதல்கள் என நடந்து வருகிறது.கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுரம் , அல்கொய்தா பயங்கரவாத அமைப்பினரால் தாக்குதலுக்குள்ளானது. அதைத்தொடர்ந்து ஆண்டுக்கு ஆண்டு பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்கா- ஆஸ்திரேலியாவை சேர்ந்த பொருளாதார மற்றும் அமைதிக்கான மையம் , மேரிலாண்ட் பல்கலை.யில் பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து உலக அளவில் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆய்வினை மேற்கொண்டன. மொத்தம் 158 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு :கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர் 2002-ம் ஆண்டு உலக அளவில் 982 தாக்குதல்கள் நடந்தன. இதில் 3 ஆயிரத்து 283 பேர் பலியாகியுள்ளனர். பின்னர் 2007-ம் ஆண்டு ஈராக்கில் நடந்த தாக்குதல் துவங்கி 2011-ம் ஆண்டில் மட்டும் உலக அளவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் இதுவரை 7,473 பேர் பலியாகியுள்ளன.தவிர இந்தியா, பாகிஸ்தான், ஈராக், ஆப்கானிஸ்தான், ஏமன் ஆகியன பயங்கரவாத தாக்குதல்களில் மிகவும் அதிகமாக பாதிக்கப்ப்டட ஐந்து நாடுகள் ஆகும். மேலும் 31 நாடுகளில் எந்தவி பயங்கரவாத தாக்குதல் நடந்ததாக தகவல் இல்லை. இவற்றில் வட அமெரிக்க நாடுகளில் தான் மிகமிக குறைவு எனவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வெறும் 19 தாக்குதல்கள் தான் நடந்துள்ளது. இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேரிலாண்ட் பல்கலை.யின் அரசியல் -பொருளாதார மற்று்ம் அமைதிக்கான ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக தலைவர் ஸ்டீர் கில்லிலியா, கூறுகையில்,2001-ம் ஆண்டு தாக்குதலுக்கு பின்னர் ஈராக் நாட்டில் தான் பெருமளவு தாக்குதல்களும், உயிர்பலிகளும் ஏற்பட்டுள்ளன என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
உழைப்பில், கல்வியில், சுகாதாரத்தில், முன்னேற்றத்தில் முதல் இடத்தில் இல்லையென்றாலும் எப்படியோ பயங்கர வாத தாக்குதலில், ஊழல்களில் நாம் உலக நாடுகளில் முன்நிலை வகிக்கிறோம் எனும் போது நாம் பெருமை பட வேண்டாமா???
இதையே நமது அரசியல்வியாதிகள் அடுத்த தேர்தலில் ஒரு சாதனையாக கூறி வோட்டு கேட்பார்கள். நாமும் கூட்டம் கூட்டமாகப் போய் அவர்களுக்கு ஓட்டு போட்டுவிட்டு வந்து, எதையோ குடித்த ஆடுகள் சிரிப்பது போல சிரித்துக் கொண்டிருப்போம்.
இது வரையில் வடக்கில் காஷ்மீர் அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் மட்டுமே இருந்த பயங்கரவாதம் இப்போது தமிழகத்தில் இன வெறி மூலம் வளர்க்கபடுகிறது பாகிஸ்தானும் தென் இந்தியாவில் பயங்கரவாதத்தை வளர்க்க முயற்சி செய்யும் போது நம் வைகோ சீமான் போன்றவர்கள் தங்கள் இன வெறி பேச்சின் மூலம் அதை வெற்றிலை பாக்கு வைத்து அழைகிறார்கள் இது நடக்காமல் தடுக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.